பூஜைக்கு முக்கியம் பூ என்பார்கள். பெரும்பாலும் பூ இல்லாமல் பூஜை சிறப்படையாது. இறைவனின் படைப்பில் எல்லா மலர்களும் சிறந்தவையே என்றாலும், சில பூஜைகளில் சில பூக்களை தவிர்ப்பது உத்தமம்.
அறுசுவையும் சுவைத்தான் என்றாலும், எல்லோருக்கும் எல்லா சுவையும் பிடிப்பதில்லையே. அது போலத்தான், தெய்வங்களின் பூஜையிலும், சில பூக்களை தவிர்ப்பது நலம். அவை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
விநாயகர்
பொதுவாக விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது என்பார்கள். ஆனால் சதுர்த்தியில் மட்டும் விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யும் வழக்கம் உண்டு.
விஷ்ணு
விஷ்ணுவுக்கு ஊமத்தம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் அர்ச்சனை செய்யக்கூடாது.
சிவன்
சிவபெருமானை தாழம்பூவினால் அர்ச்சிக்கக் கூடாது. ஆனால்,சிவராத்திரி தினத்தில் சிவனாருக்கு தாழம்பூவும் அணிவிப்பது உண்டு.
லட்சுமி
லட்சுமிக்குத் தும்பைப் பூவினால் அர்ச்சனை செய்யக்கூடாது.
துர்கை
துர்கைக்கு அருகம் புல்லால் அர்ச்சிக்கக் கூடாது.
சூரியன்
சூரியனுக்கு வில்வத்தால் அர்ச்சிக்கக் கூடாது.
சரஸ்வதி
சரஸ்வதிக்கு பவள புஷ்பத்தால் அர்ச்சிக்கக் கூடாது
பைரவர்
பைரவருக்கு மல்லிகையால் அர்ச்சிக்கக் கூடாது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment