Friday, 27 September 2019

நலம் தரும் நவராத்திரி நான்கு வகை உண்டு: உங்களுக்கு தெரியுமா?

பாரத தேசத்தில், மொழி, உணவு, உடை, ஜாதிகள் என பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இமயம் முதல் குமரி வரை ஆன்மிக ரீதியாக, பாரதம் ஒரே நாடாகவே இருந்து வந்துள்ளது. அதற்கு சரியான உதாரணம் தான், நவராத்திரி.

சக்தி வழிப்பாட்டில் நவராத்திரிக்கு முக்கிய இடம் உண்டு, நவராத்திரி நாட்களில், சக்தியை வழிபட்டால், நினைத்தது நடக்கும். எதிலும் வெற்றி பெற முடியும். ஒவ்வொரு வருடமும், நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன.

வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி –பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள். 
ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி – ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள். 

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி – புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்.
தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி –  மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்.


இதில் சாரதா நவராத்திதான், பாரத தேசமும் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மேலும், பாரத நாடு முழுவதும்,அம்பிகை வழிபாடு உள்ளது.
தமிழகத்தில், மாரியம்மனாக, கர்நாடகத்தில் சாமுண்டேஸ்வரியாக, ஆந்திராவில், கனக துர்காவாக, கேரளத்தில்  பகவதியாக, மஹாராஷ்டிராவில், பவானியாக,  மேற்கு வங்கத்தில், துர்க்கையாக, குஜராத்தில் அம்பாஜியாக வழிபடப்படுகிறாள்.
பாரத நாட்டில், தட்டவெப்ப நிலை, ஒரே மாதிரியாக இருக்கும் என்றால், அது புரட்டாசி மாதத்தில் தான். இந்த மாதத்தில் தான், அதிக வெயிலும் இருக்காது, மழையும் இருக்காது. இந்தியா முழுவதும், புரட்டாசி மாதத்தில், தட்ப வெப்பம் ஒரே மாதிரியாகதான் இருக்கும். 

மேலும், சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு. நவராத்தியின் கடைசி, மூன்று நாட்களை நாம் சரஸ்வதியை வழிபடுவதால், இதற்கு சாரதா நவராத்திரி என்றும் பெயர் ஏற்பட்டது.
தமிழகத்தில், சாரதா நவராத்திரி மட்டுமே வீடுகளில் கொண்டாடப்படுகிறது, அதிலும், கொலு வைக்கும் பழக்கம், தமிழகத்திலும், ஆந்திராவிலும் தான் உள்ளது.சாரதா நவராத்திரி, வரும், 29ம் தேதி துவங்குகிறது. இதன் சிறப்புகளை வரும் நாட்களில் பார்ப்போம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment