Tuesday, 3 September 2019

தொழில், வியாபாரங்களில் சிறப்பான லாபங்களை தரும் முருகனுக்குரிய ஆறுமுக பூஜைகள்.!!

நாம் வாழ்வதற்கு பணம் மிகவும் தேவை. அந்த பணத்தை ஈட்டுவதற்கு பெரும்பாலோனோர் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்கின்றனர். ஒரு சிலர் தங்கள் சுய உழைப்பில் பொருளீட்ட விரும்பி மிகுந்த நம்பிக்கையுடன் தொழில், வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். அப்படி ஈடுபடுபவர்கள் அனைவருமே மிக சிறப்பான நிலையை வாழ்வில் அடைந்து விடுகின்றனர் என்பதை நிச்சயமாகக் கூற முடியாது. பலருக்கும் அவர்கள் தொடங்கிய தொழில், வியாபாரங்களில் சில நாட்களிலேயே நஷ்டங்கள், வியாபார மந்தம் போன்றவை ஏற்பட்டு, அவற்றை விட்டு ஒரேடியாக விலகும் சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்காக முன்னோர்கள் கூறிய ஒரு பரிகார வழிபாடு முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.


நம்பிக்கையுடன் வேண்டுபவர்களை முருகப்பெருமான் கைவிடுவதில்லை. அந்த முருகனுக்குரிய ஆறுமுக பூஜைகளை தினமும் செய்வதால் பல நன்மைகளை நாம் பெற முடியும். உங்கள் வீட்டிலேயே இந்த முருகப்பெருமான் பூஜை மற்றும் வழிபாட்டை செய்யலாம். இந்த முருகப்பெருமான் பூஜை தொடர்ந்து ஆறு தினங்களுக்கு செய்யப்படவேண்டும். உங்கள் பூஜையறையில் சிறிய அளவிலான முருகன் படம் அல்லது சிலையை வைத்து முருகப்பெருமானுக்கு பூஜை செய்யும் போது ஆறு வகையான பழ வகைகள், ஆறு வெற்றிலைகள் மற்றும் ஆறு வகையான புஷ்பங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த பரிகார வழிபாட்டை வளர்பிறை செவ்வாய்க்கிழமை தினத்தில் தொடங்குவது நல்லது. இந்த முருகப்பெருமான் பூஜை தொடங்குவதற்கு முன்பாக விநாயகப் பெருமானுக்கு சாமந்தி மலர் அல்லது அருகம்புற்களை வைத்து விநாயகருக்குரிய மந்திரங்கள் துதித்த பிறகு முருகப் பெருமானுக்கான பூஜையை செய்ய தொடங்க வேண்டும்.

ஆறு முகங்கள் கொண்டவர் முருகப்பெருமான் எனவே முருகப் பெருமானின் முதல் முகத்தை தியானித்து பூஜை செய்யும்போது மல்லி பூக்களை கொண்டு முருகப்பெருமானை அர்ச்சித்து, முருகா சரணம் என்கிற மந்திரத்தை 11 முறை துதிக்க வேண்டும். பிறகு முருகனின் இரண்டாம் முகத்திற் திருமாலின் அம்சம் நிறைந்த துளசி இலைகளை கொண்டு அர்ச்சனை செய்து முருகா சரணம் என்கிற துதியை பதினோரு முறை துதிக்க வேண்டும். முருகப்பெருமானின் மூன்றாவது முகத்திற்கு செவ்வரளி பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, முருகா சரணம் என்கிற மந்திரத்தை 11 முறை கூறி துதிக்க வேண்டும்.

முருகனின் நான்காவது முகத்திற்கு ரோஜா மலர்களை கொண்டு அர்ச்சித்து, முருகா சரணம் என்கிற மந்திரத்தை 11 முறை துதிக்க வேண்டும். முருகனின் ஐந்தாவது முகத்திற்கு சிவபெருமானுக்குரிய வில்வ இலைகளைக் கொண்டு முருகனை அர்ச்சனை செய்து, முருகா சரணம் மந்திரத்தை வழக்கமான எண்ணிக்கையில் துதிக்க வேண்டும். முருகனின் இறுதியான ஆறாவது முகத்திற்கு பூஜை செய்யும் போது, இதுவரை அர்ச்சனை செய்யும் பூக்களில் மீதமுள்ளவற்றை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, முருகனுக்கு அர்ச்சனை செய்து முருகா சரணம் என்கிற மந்திரத்தை 11 முறை துதிக்க வேண்டும். பிறகு முருகனுக்கு ஆறு கற்பூரங்களை கொளுத்தி தீபாராதனை காட்டி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த வழிபாட்டை தொடர்ந்து 6 நாட்களுக்கு செய்து வருவதால் புதிதாக தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டவர்களுக்கு நஷ்டங்கள் ஏதும் வராமல் லாபங்கள் பெருகும். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் கடன், நஷ்ட மற்றும் வியாபார மந்த நிலை ஏற்பட்டவர்கள். இந்த முருக வழிபாடு செய்வதால் நிலையான வருமானமும், அதிகமான லாபங்களையும் பெறுவதற்கு வழிவகை செய்யும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment