Sunday, 1 September 2019

திருமண வரமருள்வார் கரும்பாயிரம் பிள்ளையார்.!!

கும்பகோணம், தஞ்சை


தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலுள்ள ஒரு பிள்ளையாருக்கு கரும்பாயிரம் பிள்ளையார் என்று பெயர். கும்பகோணத்திற்கு ஆதியில் வராஹபுரி என்று பெயர் இருந்தது. வராஹ அவதாரத்தின்போது பகவான், பிள்ளையாரை வேண்டிக்கொண்டே பூமாதேவியை ஹிரண்யாட்சனிட
மிருந்து மீட்டார். அதனால் இந்தப் பிள்ளையாருக்கு வராஹப் பிள்ளையார் என்று பெயர். ஒரு சமயம் இந்த ஆதி வராஹப் பிள்ளையார், பாலகனாக வேடம் தரித்து வந்து தெருவில் ஓரமாக நின்று கொண்டிருந்தார். சற்று தொலைவில் கட்டுக்கட்டாக கரும்புகளை ஏற்றிய வண்டியை ஓட்டியபடி ஒருவன் வந்தான். பாலகன் வண்டியருகே நகர்ந்து ‘‘ஒரு கரும்பை கொடேன்’’ என்று வண்டிக்காரனிடம் கேட்டார்.‘‘ம்ஹூம்.. முடியாது’’ என்று வண்டிக்காரன் மறுத்தான். 

பிரம்மச்சாரி பிள்ளையார் வண்டி ஓட்டத்தோடு தொடர்ந்து ஓடினார். கெஞ்சலும், கொஞ்சலுமாக மீண்டும் மீண்டும் கேட்டார். இதைக் கண்ட தெருவில் போன சிலர்,  ‘‘ஏனப்பா.. அந்த குழந்தை கேட்குது இல்ல. ஒன்னேயொன்னு ஒடிச்சு கொடேன். பார்க்கறதுக்கே பிள்ளையாராட்டம் எப்படியிருக்கு!’’ என்று தங்களை அறியாமல் உண்மையை சொன்னார்கள்.வண்டிக்காரன் பிடிவாதமாக இருந்தான். விஷமாக பேசத் தொடங்கினான். ‘‘இது கொஞ்சம் வேற மாதிரி கரும்பு. ஆமாம், இதை ஒடிச்சு உறிஞ்சினா கரிக்கும். ஆலையில கொண்டுபோய் வெல்லமா மாத்தினா இனிக்கும்’’ என்று வாய்க்கு வந்தபடி உளறினான்.

தொடர்ந்து கேட்டு அலுத்துப்போன சிறுவன் அருகிலுள்ள ஆலயத்திற்குள் சென்று மறைந்தார். ஆலையில் தித்திக்கும் சுவையுடன் இருந்த கரும்பெல்லாம் சாறற்ற சக்கையாக மாறின. இதைக்கண்ட வண்டியோட்டி அதிர்ந்து அலறினான். தன்னையறியாது வராஹ விநாயகர் கோயிலுக்குள் சென்றான். தவறுணர்ந்தான். தண்டனிட்டான். தன்யனானான். கோபம் விலக்கிய விநாயகர் மீண்டும் சக்கை கரும்பை இனிப்பாக மாற்றினார். ஆயிரம் கரும்புகளுக்குள்ளும் இனிப்புச் சுவை ஊறியது. இதன் காரணமாக கரும்பாயிரம் பிள்ளையார் என்று பெயர் பெற்றார். இக்கோயில் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment