Saturday, 7 September 2019

செய்வினை,மாந்திரீக ஏவல்களை ஒழிக்க சத்ரு சம்ஹார ஹோமம் செய்யுங்கள்.!!

நன்மை என்கிற ஒரு விடயம் இருந்தால் அதன் எதிர்பதமாக தீமை என்கிற ஒன்றும் இருப்பது தவிர்க்க முடியாத பிரபஞ்ச விதியாகும். உலகில் இருக்கின்ற அனைத்து விடயங்களுக்கும் மற்றொன்று எதிர்ப்பதமாக இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் ஒரு மனிதன், சக மனிதனின் மீது கொண்ட பொறாமை போட்டி எண்ணங்களால் அவனுக்கு எதிரியாக மாறி, அந்த மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதை போன்று வேறு எந்த ஒரு உயிரினமும் செயல்படுவதில்லை. என்ன தான் நாம் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் செயல்பட்டாலும் நம்மை நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிரியாக கருதுபவர்கள் பலர் இருப்பதை நம்மால் அறிய முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் நம் வளர்ச்சியை தடுப்பதற்கும் நமக்குத் தீங்கு விழைப்பதற்கும் பல வகையான மாந்திரீக முறைகளை கையாளுகின்றனர். அத்தகைய மனிதர்கள் நமக்கு செய்கின்ற எதிர்மறையான சக்தியின் தாக்குதல்களை தடுப்பதற்கான ஒரு சிறந்த ஹோமம் தான் சத்ரு சம்ஹார ஹோமம். மிக அற்புதமான இந்த ஹோமத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் சிறப்பான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.


உலகில் இருக்கின்ற எந்த ஒரு மனிதருக்கும் நேரடி அல்லது மறைமுக எதிரிகள் அறவே இல்லை என்பதை நிச்சயமாக கூற முடியாது. நம் சொந்த திறமையின் காரணமாக பொருளாதார வளர்ச்சி, புகழ் போன்றவற்றை நாம் அடைவதை, நம்மை சுற்றி இருக்கும் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் நம்மை அழிப்பதற்கு நேரடியான சில முயற்சிகளில் இறங்குகின்றனர். மேலும் சிலர் செய்வினை மாந்திரீகம் போன்ற மறைமுக வழிகளையும் கையாளுகின்றனர்.புராணங்களின்படி சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பிழம்பாக தோன்றியவர் தான் ஆறுமுகம் எனப் பெயர் பெற்ற முருகப்பெருமான். தேவர்களுக்கு தொல்லை தந்து கொண்டிருந்த சூரபத்மன் மற்றும் அவனின் அரக்கர் படையை அழிப்பதற்காகவே அவதாரம் செய்த அந்த முருகப்பெருமானின் சாந்நித்தியத்தை வரவழைத்து எதிரிகள் தொல்லையையும் அவர்களால் செய்யப்பட்ட மாந்திரீக ஏவல்களையும் ஒழிக்கும் ஒரு ஹோமம் தான் சத்ரு சம்ஹார ஹோமம்.

சத்ரு சம்ஹார ஹோமத்தை உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு பொருந்தும் திதிகளில் செய்வது சிறப்பு. இந்த சத்ரு சம்ஹார ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்து கொள்ளலாம். முருகன் வழிபாட்டிற்குரிய வைகாசி விசாகம், கார்த்திகை மாதம், கந்த சஷ்டி விரத தினங்கள் போன்ற காலங்களில் செய்வது சிறப்பான பலன்களை தரும். முருகன் கோயிலில் இந்த ஹோமத்தை செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது. இந்த ஹோமத்திற்காக 6 வகையான பூக்கள், பழங்கள், திரவியங்கள் மற்றும் நைவேத்திய பிரசாதங்களை வழங்க வேண்டும்.

சத்ரு சம்ஹார ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது.சத்ரு சம்ஹார ஹோமத்தின் பிரதான நோக்கமாக இருப்பது நம் வாழ்வில் ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை அறவே ஒழிப்பதோடு, பின் வரும் காலங்களில் எத்தகைய எதிரிகளும் ஏற்படாமல் தடுக்க வல்லதாக இருக்கிறது. மேலும் அத்தகைய எதிரிகளால் நமக்கு தீய மாந்திரிக கலையின் மூலம் செய்யப்பட்ட செய்வினை, மாந்திரீக ஏவல் போன்றவற்றின் எதிர்மறை ஆற்றல்களை அழித்து உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் காக்கிறது. துஷ்ட சக்திகள் உங்கள் வீட்டுக்குள் எப்போதும் நுழையாமல் தடுக்கிறது காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படாமல் கெட்டது அனைத்திலும் சிறப்பான வெற்றியை பெருமாறு செய்ய வல்ல ஒரு ஹோமம் இந்த சத்ரு சம்ஹார ஹோமம் ஆகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment