இந்து கடவுளர்களில் மிகவும் பிரசித்தமான கடவுளாக விளங்குபவர் கணபதியே. தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி.
தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. நல்ல அறிவையும் புகட்டுபவர். மாணவர்களால் மனம் உருக வணங்கப்படுபவர்.
தொடங்கும் ஒவ்வொரு செயலுக்கும் இவருக்கே முதல் வழிபாடு என்ற மரபு பல காலமாக உள்ளது. எதனை எழுதுவதற்கு முன்பும் இவரை நினைத்து பிள்ளையார் சுழி போட்டு தான் எழுத தொடங்குவார்கள். சாலை ஓரங்களில், இரண்டு சாலைகள் கூடும் இடங்களில் கணபதி சிலை வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. இந்து கடவுளர்களில் மிகவும் பிரசித்தமான கடவுளாக விளங்குபவர் கணபதியே.
பஞ்சாயதன பூஜையில் அதாவது சிவன் அம்பாள், விஷ்ணு, சூரியன், விநாயகர் என்பதில் முதலில் வருபவர் கணபதி. கணபதியினை வணங்கும் மதத்திற்கு காணாபத்யம் என்று பெயர். இதனை பின்பற்றுபவர்கள் கணபதியை உலகினை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்பவராகவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று வடிவங்களிலும் இவர் விளங்குபவராகவும் கருதுகின்றனர்.
பிரம்மவைவர்த்த புராணத்தில் கணபதியே தான் ஸ்ரீகிருஷ்ணன் என்று சொல்லப்படுகிறது. எனவே இவர் வைணவர்களாலும் வணங்கப்படுகிறார்.அவர்கள் இவருக்கு அளிக்கும் பெயர் விஸ்வக்சேனர் என்பதாகும். புத்தர்களும் ஜைனர்களும் கூட கணபதிக்கு முக்கிய இடம் அளிக்கின்றனர்.
கணபதி வழிபாடு இந்தியாவில் மட்டும் என்று இல்லாமல் தமிழிழம் நோபாளம், திபெத், தாய்லாந்து, பெர்சியா, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, என கடல் கடந்தும், சீனா, ஜப்பான், ஜாவா, பாலி, போர்னியா போன்ற அயல் நாடுகளிலும் பரவியுள்ளது. மத்திய அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் கண்டு எடுக்கப்பட்ட 3, 000 இந்து கடவுள் சிலைகளில் கணபதி சிலையும் அதிகமாக உள்ளன.
மெக்சிகோவில் இவருக்கு உள்ள பெயர் வீரகோசா அயல் நாடுகளில் வெகு பழமை காலத்திலேயே கணபதி வழிபாடு இருந்துள்ளது. ஈரான் நாட்டில் அரிசிதான் என்ற இடத்தில் பல வருடங்களுக்கு முன் யானை முகம் கொண்ட ஒரு தகடு அகழ் ஆராய்ச்சியின்போது கண்டு பிடிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இந்த தகட்டின் காலத்தை 1200 ஆண்டுகளுக்கு மந்தையது என நிர்ணயித்துள்ளனர்.
மிகவும் பழமையான ரிக் வேத வல்லுனர்கள் கடவுளர்களில் மிகச் சிறந்தவராக கணபதியினை கருதுகின்றனர். கணபதியினை குறித்த பல தோத்திரங்கள் வேதங்களில் காணப்படுகின்றன. தமிழ் ஈழத்திலும், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கணபதி வழிபாட்டு புனித தலங்கள் ஏராளமாக உள்ளன. விநாயகப் பெருமான் ஓங்கார வடிவானவர் அரச மரத்தடியில் அமர்ந்து காட்சிக்கு எளியவராகத் திகழ்பவர் பிரார்த்திக்க நினைக்கும் அளவில், அதை நிறைவேற்றி அருள்பவர். வேண்டும் வரம்தரும் பெருமான். தேவரும் மூவரும் போற்றும் பிரான் சனீஸ்வரனே தன்னைப் பிடிக்க இயலாமற் செய்தவர்.
சனித் தொல்லையில் இருந்து காக்கும் கடவுள். விக்னேஸ்வரராகப் போற்றப்படுகிறார். கணங்களின் அதிபதி. அதனால் கணபதி, கணேசர் என்றெல்லாம் துதிக்கப்படுகிறார்.
விநாயகரை வழிபடும் முறை: விநாயகரை ஒரு முறை வலம் வர வேண்டும். தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போடுவது வழக்கம். ஜாதக ரீதியாக கேது புத்தி, கேது திசை உள்ளவர்கள் தினந்தோறும் விநாயகரைத் தவறாமல் வழிபட்டால் துன்பங்கள் குறைந்து, நன்மைகள் பெறலாம்.
விநாயகருக்கு உகந்தவை: விநாயகருக்கு அருகம்புல் மாலை மிக உகந்தது. வில்வ மாலை, எருக்கு மாலையும் சாத்தி வழிபடலாம். சதுர்த்தி அன்று மட்டும் துளசியால் அர்ச்சனை செய்யலாம் என்பர். ஜாதிப்பூ கொண்டு அர்ச்சனை செய்தால், ஞானம் பெருகும். அருகம்புல் அர்ச்சனையால் ஐசுவரியம் பெருகும். ஆரோக்கியம் வளரும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment