பார்வதிதேவி சிவனை நோக்கி தவம் இருந்தபோது ஆற்காடு அடுத்த வாழைப்பந்தலில் பச்சையம்மனாக அருள்பாலித்தார். அப்போது அபிஷேக தீர்த்தம் கொண்டு வர முருகனை பணித்தாள். முருகப்பெருமான் தன்னுடைய வேலை எய்தபோது வேல் குன்றுகளை துளைத்து சென்று குன்றை சுற்றி தவமிருந்த 7 ரிஷிகளின் சிரசை கொய்தது. இதனால் பிரமஹத்தி ேதாஷம் நீங்க முருகப்பெருமான் சேயாற்றின் வடகரையில் 7 சிவலிங்கங்கள் அமைத்து வழிபட்டு தோஷத்தில் இருந்து விடுபட்டார். இந்த சிவாலயங்கள் “சப்த கரைகண்டம்’ என்றழைக்கப்படுகின்றன.
அதேபோல் முருகப்பெருமானை ஏவிய செயல், அன்னையை சேர்ந்ததால், அன்னையும் அந்த தோஷத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிவந்தது. இதனால் அன்னை சேயாற்றின் தென்கரையில் 7 சிவாலயங்கள் உருவாக்கி வழிபட்டு பாவத்தில் இருந்து விடுபட்டார். அவை ‘சப்த கைலாயங்கள்’ என்று அழைக்கப்படுகின்றது. அதன்படி பார்வதி தேவி வழிபட்ட பழங்கோயில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ளது. பழமையான கோயிலாக இது இருந்தாலும் பழங்கோயில் என்பதற்கான காரணம் கோயிலின் கல்வெட்டிலேயே விளக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சோழ மன்னன் மதுராந்தகன் உத்தம சோழனால் (கி.பி. 969 - 985) கட்டப்பட்டதாகும்.
பார்வதிதேவி பிரதிஷ்டை செய்த சப்த கைலாயங்களில் மத்திய கைலாயமாக இத்தலம் விளங்குகிறது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் கம்பீரமாக தோற்றமளிக்கிறது. ராஜகோபுரத்தை கடந்து உள்ளே செல்ல, பலிபீடமும், நந்தியையும் தரிசிக்கலாம். வலதுபுறத்தில் நடராஜர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இடதுபுறம் அமர்ந்த நிலையில் காளிதேவி வீற்றிருக்கிறார். மூலவரின் கருவறைக்கு அருகேயே ஞானசம்பந்தர், அப்பர், சித்தி விநாயகரும் அருள்பாலிக்கின்றனர்.
அர்த்த மண்டபத்தைக் கடந்து கருவறையில் நான்கு கால் மண்டபத்தின் முன் அழகிய பெரிய அளவிலான துவாரபாலகர்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றனர். இந்த மண்டபம், வேதபாராயணம் செய்வோர் அமர்வதற்கான இடமாக ஆதியில் விளங்கியிருக்கிறது. மூலவராக பாலக்ரிதீஸ்வரர் எனும் திருப்பெயரோடு ஈசன் அருள்பாலிக்கிறார். இந்த லிங்க மூர்த்தி ஷோடச லிங்கமாகும். சன்னதியில் நுழைந்தவுடன் இறைவனின் அருள் நெஞ்சை நிறைக்கிறது. எத்தனையோ மகான்கள் அமர்ந்த புண்ணிய சன்னதி என்கிற வியப்பு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
சுவாமியை மனமுருகி வழிபட்டால் முன்பிறவி பாவங்களில் இருந்து விடுபட்டு, சுக வாழ்வை பெறலாம். அபிஷேக பிரியரான சுவாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்பட பல்வேறு நறுமன பொருட்களால் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கி, விரைவில் திருமணம், குழந்தை பேறு, கல்வி, பொருள் உள்பட அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.
வெளிப்பிரகாரத்தை சுற்றி வரும்போது தனித்தனி சன்னதிகளில் வடக்கே நால்வர், தென்மேற்கே விநாயகர், மூலவர் சந்நதிக்கு நேர் மேற்கே பின்புறத்தில் ருக்மணி-சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி அருள்பாலிக்கின்றனர். வடமேற்கே வள்ளி-தெய்வானை சமேத சிவசுப்ரமணியர், தேவகோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கின்றனர். ஆலயத்தில் ஈசான்ய மூலையில் மன்னர் காலத்திய கிணறு அமைந்துள்ளது. தனி சன்னதியில் அம்பாள் பாலாம்பிகை எனும் திருநாமத்தோடு பேரெழில் பொங்க அருள்பாலிக்கிறாள். நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருளாட்சி நடத்துகிறாள். இந்த சன்னதியே தனிக்கோயில் அமைப்போடு அந்தராலயம், ஆறு கால் மண்டபம், துவார பாலகியர் சிலைகளோடு அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை-போளூர் பாதையிலுள்ள கலசப்பாக்கத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. கலசப்பாக்கத்தில் இருந்து மினிபஸ் மற்றும் ஆட்டோ வசதி உள்ளது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment