ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புண்ணியத்தலம் குருக்ஷேத்திரம். புதுதில்லியில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரம் கடந்தால் இத் தலத்தை அடையலாம். தானேஷ்வர் இரயில் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்தலத்தில் தான் அன்னை தேவியின் வலது கணுக்கால் விழுந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றது. சக்திபீடத்தில் ஸ்தாணுபிரியை என்று அழைக்கப்படும் அம்மனின் உபதேசபீடமாக இத்தலம் விளங்குகிறது.
சக்திபீடமான இத்தலத்தில் தான் மஹாபாரதப்போர் 18 நாட்கள் நடந்ததாக கூறுகிறார்கள் .இங்கு அம்பிகை காளியின் ரூபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். அம்பிகையை நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் சுயம்பு வடிவிலும் கண்டிருக்கிறோம். ஆனால் இங்கு தேவியின் வலது பாதத்தை மட்டுமே தரிசிக்கலாம்.
பத்துக்கு பத்து அடியில் ஒரு முற்றம் போன்ற திறந்தவெளியில் நடுவில் தாமரை போன்ற பெரிய வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதில் தேவியின் ஒரு பாதம் அழகிய வெள்ளை மார்பினால் செய்யப்பட்டு பீடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேவியின் பாதங்களை அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய கொலுசுகள் அலங்கரிக்கின்றன.
வெண்மையும், மிதமானா ரோஜா நிறமும் கலந்த பாதங்கள் அலங்காரத்தில் மேலும் அழகு பெறுகின்றன. நறுமணமிக்க மலர் மாலைகளும் அலங்கரிக்கப்பட்டு பூஜைகளும், ஆராதனைகளும் உரிய நேரத்தில் நடத்தப்படுகிறது. தேவியின் வலது பாதத்துக்கு கூரை வானமே என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளே சென்றால் காளி அழகிய உருவத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். காளி உக்ரமானவள் என்றாலும் வெள்ளை மார்பிளில் பதிக்கப்பட்டு கண்கள் சாந்தத்தோடு பக்தர்களுக்கு அன்பை காட்டுகிறது. காளியின் தலையில் வெள்ளிக்கிரீடம் அலங்கரிக்க, நிழல் தரும் வெள்ளிக்குடையும் அவளுக்கு அழகு சேர்க்கின்றது.
வெள்ளை நிற மேனியாள் சிவந்த நிற ஆடை உடுத்தி கண்கொள்ளா அழகுடன் கால்கள் இன்றி காட்சிதருகிறாள். அவள் இடது திருக்கரங்களுக்கு கீழ் வெள்ளியிலான வலது கணுக்கால் பாதத்துடன் அழகாய் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. தேவிக்கும் காலுக்கும் தனித்தனி பூஜைகள் நடத்தப்படுகிறது. இங்கு தேவியை சாம்பவி விமலா என்று பக்தர்கள் அன்புடன் அழைக்கிறார்கள்.
இங்கு ராதையுடன் கண்ணன், சிவலிங்கம் இவருக்கு ஸ்தாணு ஸம்வர்த்தன் என்று பெயர், கஜமுகன், சரஸ்வதி தெய்வங்களும் உண்டு. மாடிபடி ஏறும் இடத்தில் கெளரவர்களின் குருவான துரோணர் இத்தேவியை வேண்டி அமைத்த வியூகம் ஒன்று அமைந்திருக்கிறது. பக்தர்கள் வேண்டிய காரியம் நிறைவேற இந்த வியூகத்தின் அருகில் அமர்ந்து விரல்களை நகர்த்தி நடுப்பகுதிக்கு சென்று வெளியே திரும்பி வந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
மகாபாரத போரின் போது பஞ்சபாண்டவர்கள் போரில் வெற்றி பெற இத்தேவியை வணங்கினார்கள். நேர்மை வெல்லும் என்பதற்கேற்ப பாண்டவர்கள் வெற்றி பெற்றதும் தேவிக்கு தங்களிடம் இருந்த குதிரைகளை காணிக்கையாக செலுத்தினார்கள். அதன்படி பக்தர்கள் இப்போதும் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறியதும் டெரகோட்டாவில் செய்யப்பட்ட குதிரைகளை பரிசாக வழங்குகிறார்கள்.
இங்குள்ள புனித குளம் பிரம்ம சரோவர். மத்சய புராணத்திலும், பத்ம புராணத்திலும் இந்த புனித குளத்தின் மகிமையைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இக்குளத்தில் நீராடினால் அக உடலும், புற உடலும் தூய்மையாகும். மேலும் சூரிய கிரகணத்தின் போது இக்குளத்தில் நீராடினால் 1000 அஸ்வமேதயாகம் செய்த பலனை பெறலாம் என்கிறது புராணங்களும்.
காளி என்றாலே உக்ரமானவள் என்னும் நிலையில் கண் கொள்ளா அழகுடன் காட்சிதரும் ஸ்தாணுபிரியையை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்கும் பேறை அனைவருக்கும் கிட்டசெய்யவேண்டும் என்று சக்தி தேவியை வேண்டுவோம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment