Friday, 30 August 2019

விநாயகர் தரிசனம்.!!

வியாபார விநாயகர் 


வியாபாரத்தை செழிக்க வைக்கும் வியாபார விநாயகர் அடேங்கப்பா… ஐந்து கரத்தான், ஆனை முகத்தான், தொந்தி கணபதி என விநாயகப் பெருமானுக்குத்தான் எத்தனை எத்தனை திரு நாமங்கள்! மதுரையில் இருக்கும் ஒரு கணபதியை, மொட்டைப் பிள்ளையார், வியாபார விநாயகர் என்று அன்புடன் அழைக்கின்றனர் பக்தர்கள். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிமீ. தொலைவில் இருக்கிறது கீழ மாசி வீதி. இங்கே அமைந்திருக்கும் மொட்டை விநாயகர் கோயில், வெகுபிரபலம். பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அழகிய ஆலயம் இது. மதுரையின் மையப்பகுதியில், வியாபாரம் சிறந்து விளங்கும் இடத்தில், இந்த பிள்ளையார் அமைந்துள்ளதால் இவரை வியாபார விநாயகர் என்றும் அழைக்கின்றனர். அந்நியர் படையெடுப்பின்போது, மீனாட்சியம்மன் ஆலயத்தை சேதப்படுத்த திட்டமிட்டனராம். 

அப்போது, மொட்டை விநாயகர் கோயிலுக்கு சென்று விட்டு, விபூதி பூசிக்கொண்டு, வியாபாரிகள் தங்கள் கடைகளை திறப்பதைப் பார்த்து கோபமுற்ற அந்நிய தேசத்து மன்னன், பிள்ளையாரின் சிரசை துண்டாக்கி, ஆற்றில் தூக்கி வீசினானாம். பிறகு சிவனாரின் பேரருளால் அந்த சிரசு மீண்டும் அதே இடத்துக்கு வந்ததைக்கண்டு ஆடிப்போன அவன், உடனடியாக அங்கிருந்து கிளம்பிச்சென்று விட்டான் என்கிறது கோயிலின் தல வரலாறு. ஆக, மதுரை மீனாட்சி அம்மனின் ஆலயத்தையே காப்பாற்றிய விநாயகர் இவர் எனப்போற்றுகின்றனர் பக்தர்கள். புதிதாக வியாபாரத்தில் அடியெடுத்து வைப்பவர்கள், கடை திறப்பவர்கள் இங்கு வந்து மொட்டை விநாயகருக்கு அபிஷேகம் செய்து, 108 சிதறுகாய் உடைத்து வேண்டிச் சென்றால், வியாபாரம் செழிக்கும் என்பது ஐதீகம்.

ஓங்கார வடிவில் விநாயகர்

வடஆற்காடு மாவட்டம் சேண்பாக்கம் என்ற தலத்தில் அமைந்துள்ளது செல்வ விநாயகர் திருக்கோயில். இங்கு பதினோரு பொல்லாப்பிள்ளையார்கள் ஓங்கார வடிவில் காட்சி தருகிறார்கள். அதனால் இத்திருக்கோயிலை ‘பிள்ளையார் சபை’ என்று போற்றுகிறார்கள்.

நெல்லிமரப் பிள்ளையார்

பரணி நட்சத்திரத்தில் 108 தேங்காய் எண்ணெய் விளக்குகள் ஏற்றி, ஏழைகளுக்கு இலவசமாக மருந்துகள் அளித்துவர இரும்புத் தொழிலில் அமோக வியாபாரம் நடக்கும். பெண் குழந்தை இல்லாதவர்களுக்கு பெண் குழந்தையும், மனச்சாந்தியும் கிட்டும்.

பிள்ளை ‘யார்?’வன்னிமரப் பிள்ளையார்

வன்னிமர விநாயகர் வலஞ்சுழியாக இருப்பது விசேஷம். வடக்கு நோக்கி இருந்தால் மிகவும் விசேஷமானது. அவிட்ட நட்சத்திரந்தோறும், வன்னி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சித்து, அபிஷேகம் செய்து ஏழைக் கன்னிப் பெண்களுக்கு தானம் அளித்தால் நல்ல வரன் கிடைத்து திருமணம்் 
நடைபெறும்.

வேப்பமரத்துப் பிள்ளையார்

கிழக்கு முக விநாயகர் விசேஷம் நிறைந்தவர். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்துவித எண்ணெய் தீபமான பஞ்ச தீபம் ஏற்றிட மனதிற்கேற்ற வரன் அமையும். அலுவலகத்தில் மேலதிகாரியின் அடிமையாய்ச் செயல்புரியும் நிலை அகலும்.

அரசரமரப் பிள்ளையார்

மேற்கு நோக்கி இருப்பது சக்தி வாய்ந்ததாகும். பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்தால் நில, தோட்ட விளைச்சல் பெருகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். பணக்கஷ்டம் நிவர்த்தியாகும்.

ஆலமரப் பிள்ளையார்

வடக்கு நோக்கியிருந்தால் சிறப்புடையன நோயாளிகள் மக நட்சத்திரத்தன்று ஐந்து வகை சித்திரான்னங்கள் (எலுமிச்சை, தயிர், புளி, தேங்காய் போன்றவை) படைத்துத் தானமளித்தால் கடுமையான நோய்கள் விலகும்.

பெருமாள் கோயிலில் விநாயகர்

சென்னை - வேடந்தாங்கல் அருகேயுள்ள அம்ருதபுரி என்ற தலத்தில் அமைந்துள்ளது. னிவாசப் பெருமாள் கோயில். இங்கு அருள்புரியும் விநாயகரை நவகிரக விநாயகர் என்று போற்றுவர். எட்டு அடி உயரம் கொண்ட இந்த விநாயகரின் நெற்றியில் சூரியனும், வயிற்றுப்பகுதியில் சந்திரனும், வலதுகாலில் செவ்வாயும், கீழ்கையில் புதனும், தலைப்பகுதியில் குருவும்-இடதுமேல் கையில் ராகுவும், இடதுகாலில் கேதுவும் காட்சி தருகிறார்கள். மேலும் இவரது பின்புறம் யோக நரசிம்மர் திருஉருவமும் உள்ளது. இவரை வழிபட அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். 

சக்கர வடிவில் விநாயகர்

கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ளது செல்வ விநாயகர் கோயில். இத்திருக்கோயிலில் 108 விநாயகர்கள் அருள்புரிகிறார்கள். இங்கு செல்வ விநாயகர் சந்நதியையொட்டி சக்கர வடிவில் 108 விநாயகர் விக்கிரகங்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் விநாயகருக்குரிய நாம வழிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த 108 விநாயகர்களும் உருவத்தில் வேறுபாடு உடையவர்களாகக் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இதுபோல் சக்கர வடிவில் வேறு எந்தக் கோயிலிலும் 108 விநாயகர்கள் அருள்புரியவில்லை என்று சொல்லப்படுகிறது.

புலிக்கால் விநாயகர்

யானையின் முகம், மனித உடல் சேர்ந்ததே பிள்ளையார் உருவம் என்று நமக்குத் தெரியும். ஆனால் இந்த அடையாளத்தை மாற்றி பல கெட்டப்களில் விநாயகர் வீற்றிருப்பதும் உண்டு. அதுவும் பெண் வடிவில் பிள்ளையார் இருந்தால்  எப்படியிருக்கும்? மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனால் பார்க்கலாம். அம்மன் சந்நதிக்கு வெளியே  துவாரபாலகர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்களது பக்கத்தில் ‘கம்பத்தடி மண்டபம்’ உண்டு. அங்கே பெண் உருவ பிள்ளையார் இருக்கிறார். இவருக்கு இரண்டு கைகள். ஒரு கையில் தாமரை மலர். தொங்கவிடப்பட்ட முன்னொரு கையோ ஒய்யாரமாக அச்சு அசலாக ‘விநாயகி’ நிற்பதைக் கண்டு பரவசப்படலாம்! பாதங்களைப் பார்த்தால்... புலியின் கால்கள். இவரைப் ‘புலிக்கால் விநாயகர்’ என்று அழைக்கின்றனர். வடமொழி நூல்களில் ‘வ்யாக்ரசக்தி கணபதி’ (வ்பாக்ரம் - புலி) என்ற இவரைக் குறிப்பிடுகின்றனர். புலிக்கு இணையான சக்தி அளிப்பவர் என்று இதற்கு விளக்கம் கூறுகின்றனர். பெண் உருவ விநாயகர் சிலைகள் சுசீந்திரம் தாணுமாலயப் பெருமாள் கோயில் மண்டபத் தூணிலும், திருவண்ணாமலை உண்ணாமுலை அம்மன் சந்நதி மண்டபத்திலும் உள்ளன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment