Thursday, 1 August 2019

உங்களுக்கு காரிய வெற்றி உண்டாக, வருமானம் அதிகரிக்க மந்திரம் இதோ.!!

சிவபெருமானிடமிருந்து 64 வகையான பைரவர்கள் தோன்றியது போல, சிவபெருமானுக்கு இருக்கின்ற 64 சிவ வடிவங்களில் ஒருவராக இருப்பவர் ஞானத்தை அருளும் தெய்வமான தட்சிணாமூர்த்தி. அனைத்து கோயில்களிலும் தென் திசை நோக்கி வீற்றிருக்கும் இவரை குரு பகவான் என பலர் அழைக்கின்றனர். சிவ குருவான இவரை ஒருவர் வழிபடுவதன் மூலம் ஏராளாமான பலங்களையும் புண்ணியங்களையும் பெற்று வாழ்வில் சிறக்க முடியும் என்பது சிவாச்சாரியர்களின் திடமான கருத்தாகும். அந்த வகையில் தட்சிணாமூர்த்தி வழிபாட்டிற்குரிய தட்சிணாமூர்த்தி மூல மந்திரம் துதிப்பதால் உண்டாகும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தட்சிணாமூர்த்தி மூல மந்திரம் :

ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹா

தாட்சண்யம் நிறைந்த தட்சிணாமூர்த்திக்குரிய சக்தி வாய்ந்த மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதிப்பது நன்மை பயக்கும். வியாழக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகிலுள்ள சிவன் கோயிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி விக்ரகம் முன்பாக கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த மந்திரத்தை துதித்து வழிபடுவதால் தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவுகள் ஏற்படாது. முக வசீகரம் உண்டாகி பிறருடன் விவகாரங்களில் ஈடுபடும் போது உங்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். சிறந்த வாக்குவன்மை உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.

தட்சிணாமூர்த்தி வழிபாடு

இந்த உலகில் மனிதனாக பிறந்து எல்லாவற்றையும் கற்றறிந்தவர் என்று ஒருவரை கூட நம்மால் கூற இயலாது. பல கடினமான தவங்கள் செய்து ஞான நிலையடைந்த யோகிகளும், ஞானிகளும் கூட தாங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் இல்லை என தன்னடக்கத்தோடு கூறுகிறார்கள். அப்படி அனைத்தையும் அறிந்த ஒருவர் இருக்கிறார் என்றால் அது கயிலாயத்தில் குடி கொண்டிருக்கும் அனைத்து உலகையும் காக்கும் உலகநாதனாகிய சிவ பெருமானே ஆகும். அப்படிப்பட்ட சிவ பெருமானுக்கு பல தோற்றங்கள் உண்டு. அதில் ஒன்று தான் அவரின் முழு அம்சம் நிறைந்த “தட்சிணாமூர்த்தி”.

இந்த தட்சிணாமூர்த்தி பெரும்பாலான சிவன் கோவில்களில் “தட்சிண” திசையான “தெற்கு” திசையை நோக்கி இருப்பதால் இவர் “தட்சிணாமூர்த்தி” என அதிகமான மக்கள் பொருள் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் அனைவருக்கும் தனது “தாட்ச்சண்யத்தை” அருள்வதால் “தாச்சண்யமூர்த்தி” என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் தட்சிணாமூர்த்தி என்றானது. அனைத்தையும் அறிந்தவரும் குருவுக்கெல்லாம் தலைமையான “ஞானகுரு” என அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தியை நாம் வழிபடுவதால் நாம் மனத்தெளிவு பெற்று செய்யும் காரியங்கள் அனைத்தும் சிறப்பாகி நம் வாழ்வு ஏற்றம் பெறும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment