Friday, 30 August 2019

முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாள்.!!

நாளைய தினம் ஆவணி மாத அமாவாசை. முன்னோர் வழிபாட்டிற்கும், அவர்களுக்கான கடன் தீர்க்கவும் உகந்த நாள். கடன் என்றால் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்டது கிடையாது. நம் மூதாதையருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வதாகும். 

குளக்கரையிலோ, வீட்டிலோ, கோவில் மாடங்களிலோ அமர்ந்து, நம் மூன்று தலைமுறை மூதாதையர்கள் பெயர் சொல்லி, அவர்களுக்கு எல் தண்ணீர் கொடுப்பது தான் தர்ப்பணம் எனப்படுகிறது. நம் முன்னோர்களை நினைத்து அன்று செய்யப்படும் தானம் அவர்களையே சென்று சேர்வதாக ஐதீகம். 
இந்த நாட்களில் காலை உணவை தவிர்த்து, குளித்து முடித்த கையோடு தர்ப்பணம் செய்த பின், காக்கைக்கு சாதம் வைத்ததை பின் மதியம் ஒரு நேரம் மட்டும்சைவ உணவருந்தி, இரவு வெறும் பழங்களோ அல்லது வெங்காயம், பூண்டு சேர்க்கப்படாத உணவு வகைகளோ சாப்பிடலாம். 
திருமணமானவராக இருப்பின் அன்று ஒரு நாள் பிரம்மச்சரியம் கடைபிடிப்பது அவசியம். அன்றைய நாள் முன்னோர் வழிபாட்டுக்கு பின்பே, தினசரி பூஜை இருப்பின் அதை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்யலாம். 

இவை எதுவும் செய்ய தெரியாதவர்கள் அல்லது முடியாதவர்கள், தங்கள் மூதாதையரை நினைத்து ஆதாரவற்றோருக்கோ அல்லது தங்கள் விருப்பப்பட்டவருக்கோ உணவு மட்டும் வழங்கினால் அதுவே போதுமானது. 
அமாவாசை வழிபாடு சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்வதோடு, வாழ்வில் எல்லா நலன் மற்றும் வளங்களை நமக்களிக்கும் என்பது முன்னோர் வாக்கு...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment