Tuesday, 27 August 2019

எக்கணமும் துணை நிற்பார் முக்குறுணி விநாயகர்.!!

மதுரை


குறுணி என்பது நெல் முதலிய தானியங்களை அளக்கும் அளவைகளில் ஒன்றான மரக்காலின் மும்மடங்கு ஆகும். முக்குறுணி என்பது ஒன்பது மரக்கால் அளவையைக் குறிக்கும். இங்கு முக்குறுணி விநாயகர் என்பது அளவால் பெரிய விநாயகரைக் குறிக்கிறது. மதுரை , திருவக்கரை, காஞ்சிபுரம், சிதம்பரம் முதலிய தலங்களில் அளவால் பெரிய விநயாகரைக் காண்கிறோம். இவர்கள் ஏறத்தாழ 8 அடி உயரம் உடையவர்கள். இவர்களுக்குப் பக்கவாட்டிலுள்ள படிகளில் ஏறியே அபிஷேகம் செய்ய வேண்டும்.

இவர்களின் உருவத்திற்கு ஏற்ப மோதகம் படைக்க வேண்டும் என்பதற்காக முக்குறுணி அரிசியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மோதகத்தை (கொழுக்கட்டையை)ப் படைக்கின்றனர். மதுரை முக்குறுணி விநாயகர் உலகப் புகழ் பெற்ற விநாயகராவார். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் தெற்கு கோபுரவாயில் இருந்து வருபவர்களுக்கு நேர் இருந்து அருள் பாலிக்கிறார். மீனாட்சியின் முன் மகா மண்டபத்தில் இருந்து மீனாட்சி அம்மனையும் இந்தப் பிள்ளையாரையும் ஒருசேரத் தரிசிக்கலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment