Tuesday, 27 August 2019

பெரும் செல்வம் அருளும் பிள்ளையார்பட்டி விநாயகர்.!!

சிவகங்கை


1600 ஆண்டுகளுக்கு முன் குடைவரைக் கோயிலாகக் கட்டப்பட்ட பிள்ளையார்பட்டி ஆலயம், ஒன்பது நகரத்தார் ஆலயங்களுள் ஒன்று. கருவறையில் 6 அடி உயரத்தில் இரு கைகளுடன் அமர்ந்த வண்ணம் கற்பகவிநாயகர் அருள்கிறார். வலது கையில் சிவலிங்கம் காட்சியளிக்கிறது. இத்தலத்தில் விநாயகரின் துதிக்கை வலம்புரியாக உள்ளது. அர்த்தபத்மாசனத்தில் அமர்ந்து இடது கரத்தை கடிஹஸ்தமாக தொடையில் வைத்துள்ள தோற்றம். கஜமுகாசுரனைக் கொன்ற பாவம் தீர ஈசனை விநாயகர் இத்தலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி ஆலய உட்பிராகாரத்தை வலம் வருகிறார். ஒவ்வொரு மார்கழி மாதமும் இத்திருக்கோயிலுக்குரிய நிலபுலன்களின் கணக்கு வழக்குகள் விநாயகர் திருவுரு முன்னிலையிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் படித்துக் காண்பிக்கப்படுகின்றன. 

ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் இத்தலத்தில் பிரம்மோற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். அதில் ஆறாம் நாள் கஜமுக சம்ஹாரம்வரை வெள்ளி யானை வாகனத்திலும், பின் தங்க மூஷிக வாகனத்திலும் விநாயகர் எழுந்தருள்வார். விநாயகப் பெருமான் ஓங்கார வடிவில் அருள்புரியும் அதியற்புதத் தலம் இது. ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று இத்தல கற்பகவிநாயகரை தரிசித்தால் திருமணம் எந்தத் தடையுமின்றி எளிதாகக் கைகூடும் என்கிறார்கள். கவிஞர் கண்ணதாசன் இந்த விநாயகரைக் குறித்துப் பாடிய ‘அற்புதக் கீர்த்தி வேண்டின்..’ எனத் துவங்கும் பாடல், திருத்தலப் பாடலாகவே பாவிக்கப்படுகிறது. கல், மரம், சுதை, உலோகம் இல்லாமலே பல்லவன் கோயில் சமைத்தான் எனும் கல்வெட்டைக் கொண்டு மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட முதல் கல்வெட்டுக் கோயில் இதுதான்  என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment