Tuesday, 13 August 2019

மங்களத்தின் அறிகுறி.!!

கோவிலில் குடமுழுக்கு, வேள்வி நடைபெறும்போது, கோவிலுக்கு நேர் மேலாகவும், குடும்ப வழிபாடுகள் நடைபெறும்போது அப்பகுதியிலும் கருடன் வட்டமிடுவது நல்ல சகுணம் என்று நம்பப்படுகிறது.


சிவனுக்கு நந்தியம்பெருமான் எத்தனை அணுக்கத்தொண்டரோ அதுபோல திருமாலுக்கு, கருடன் அணுக்கத் தொண்டராவார். செங்காவி நிற இறக்கைகளுடன் உடலின் நடுப்பகுதியில் வெண்ணிறத்தை கொண்டிருக்கும் செம்பருந்தையே ‘கருடன்’ என்பர். 

கருடன் திருமாலுடன் தொடர்புடைய காரணத்தால் அது வானத்தில் வட்டமிடுவதும், கத்துவதும் இந்துக்களால் மங்கள அறிகுறியாக கருதப்படுகிறது. கோவிலில் குடமுழுக்கு, வேள்வி நடைபெறும்போது, கோவிலுக்கு நேர் மேலாகவும், குடும்ப வழிபாடுகள் நடைபெறும்போது அப்பகுதியிலும் கருடன் வட்டமிடுவது நல்ல சகுணம் என்று நம்பப்படுகிறது. 

சபரிமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மகரஜோதி தரிசனத்தின் போது, கேரளா மாநிலம் பந்தளம் மகாராஜா அரண்மனையில் இருந்து திருவாபரணப் பெட்டிகள் ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படும். அப்போது கூடவே கருடன் ஆபரணப் பெட்டிக்கு நேர் மேலே வட்டமிட்டபடி தொடர்ந்து வரும் அதிசயத்தை இன்றளவும் காணலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment