ஆடிப் பூரம் : 04-08-2019
தமிழ் வருட கணக்கின் படி நான்காவதாக வரும் தமிழ் மாதம் ஆடி மாதமாகும். இது சூரியன் தென்திசை நோக்கி பயணத்தை தொடங்கும் மாதமாகவும். இரவு நேரம் அதிகம் நீடித்திருக்கும் மாதமாகவும் இருக்கிறது. இம்மாதத்தில் வரும் அனைத்து தினங்களும் பெண் தேவியர்கள் வழிபாட்டிற்கு சிறந்ததாகும். அதில் இம்மாதத்தில் வரும் “பூரம்” நட்சத்திர தினம் ஆண்டாள், காந்திமதி அம்மன் உள்ளிட்ட அணைத்து அம்மனுக்கு விழாவிற்குரிய நாளாக கருதப்படுகிறது. இதை “ஆடி பூரம்” என அழைக்கின்றனர். இத்தினத்தின் மேலும் பல சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஆடி பூரம் நாளில் தான் சூடிக்கொடுத்த “சுடர்கொடியான ஆண்டாள்” திருவில்லிபுத்தூரில் துளசி தோட்டத்தில் அவதரித்தாள். பின்பு பெரியாழ்வாரால் “கோதை” என்று பெயரிட்டு வளர்க்கப்பட்டாள். குமரியாக வளர்ந்துவிட்ட கோதை நாராயணனுக்கு சாற்றப்படும் மாலைகளை அணிந்து பார்த்து வைத்து விடுவது வழக்கம். அவள் சூடி தந்த மாலைகளையே “ஸ்ரீமன் நாராயணன்” அணிய விரும்பியதால் கோதை “சூடித்தந்த சுடர்க்கொடி” என அழைக்கப்பட்டாள்.
பெரியாழ்வாருக்கு மகாவிஷ்ணு கனவில் கூறிய படி கோதையை மணப்பெண் கோலத்தில் அலங்கரித்து திருவரங்க கோவிலுக்கு அழைத்து வந்த போது மூலவரான ஸ்ரீரங்கநாதனுள் ஐக்கியமானாள் கோதை. அந்த நாராயணனின் மனதை ஆண்டதால் “ஆண்டாள்” என அழைக்கப்பட்டாள். ஆண்டாள் இயற்றிய “திருப்பாவை” வைணவ இலக்கியங்களில் சிறந்ததாக கருதப்படுகிறது. வைணவத்தில் “12 ஆழ்வார்களில்” ஒருவராக ஆண்டாள் போற்றி வணங்கப்படுகிறார். அப்படிப்பட்ட தெய்வீக பெண்ணான ஆண்டாள் பிறந்த “ஆடி பூரம்” தினத்தன்று திருமால் கோவிலுக்கு சென்று பெருமாளையும், ஆண்டாளையும் வழிபட திருமணம் தாமதமாகும் பெண்களுக்கு திருமணம் நடக்கும். உங்களின் நியாமான விருப்பங்கள் நிறைவேறும்.
இதே போன்று இந்த ஆடி பூரம் தினத்தன்று “நெல்லை காந்திமதி” கோவிலில் காந்திமதி அம்மனுக்கு “வளைகாப்பு சடங்கு” நடத்தும் நிகழ்ச்சி அந்த சுற்று வட்டார பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சடங்கில் அந்த அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை நீண்ட காலமாக பிள்ளை பேறில்லாமல் தவிக்கும் பெண்கள் அருட் பிரசாதமாக பெற்று அணிந்து கொள்ள, அவர்களுக்கு பிள்ளைப்பேறு கிட்டியது பலரும் அனுபவத்தில் கண்ட உண்மையாக இருக்கிறது. இந்த சடங்கு தற்போது பல கோவில்களிலும் நடத்தப்படுகின்றன அத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வளையல்களை பெறுவதால் அந்த மானின் அருட்கடாட்சம் நம் மீது படும். அதோடு இன்றைய தினத்தில் அம்மனை வழிபடுவதால் பெண்களின் மனக்கவலைகள் நீங்கும். குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment