Friday, 16 August 2019

விறன்மிண்ட நாயனார்.!!

திருச்செங்குன்றூர் நீர் வளமும், நிலவளமும் என எல்லா செல்வங்களையும் கொண்டிருக்கும் நாடு, இதை சேரநாடு என்றும் அழைப்பார்கள். இங்கு உழவுத்தொழிலில் வேளாளர்  குடி வல்லமை பெற்றிருந்தது. அந்த வேளாள மரபில் இறைவனின் திருவருளால் தோன்றினார் விறன்மிண்ட நாயனார்.

சிறுவயது முதலே எம்பெருமானின் மீது பக்தியும் பேரன்பும் கொண்டிருந்தார். அதைப்போன்றே சிவனடியார்கள் இடத்தும் பெருமதிப்பும், பக்தியும் வைத்திருந்தார். எம்பெருமானின் திருவடிகளைப் போற்றிவாழும் அடியார்களை யாரேனும் குறைவாக பேசினால் அக்கணமே அவர்களைத் தண்டிப்பார். அதுவரை சாதுவாக காட்சியளிக்கும் விறன்மிண்ட நாயனார் வீரனாக மாறிவிடுவார்.
அறநெறி தவறாமல் வாழ்ந்துவந்த விறன்மிண்ட நாயனார் எம்பெருமானின் ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்து மகிழ்வார். எம்பெருமானையும் அவரது அடியார்களையும் வணங்குவதையே பெரும் பேறாக எண்ணி அவ்வாறே யாத்திரை மேற்கொண்டு வந்தார். தேவாசிரிய மண்டபத்தில் கூடியிருந்த அடியார்களை வணங்கி அவர்களுடன் ஒருவராய் திகழ்ந்தார். 
ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் புற்றிடங்கொண்ட நாதரை வணங்கி வழிபட வந்தார். அவர் அடியார்களை மனத்தால் வணங்கி வேறு புறமாக ஒதுங்கியபடி உள்ளே நுழைந்தார். இதை தவறாக நினைத்த விறன்மிண்டர் நாயனார்  இறைவனை வழிபடுவது எளிது. ஆனால் அவர்தம் அடியாரை வழிபடுவது அரிது. அடியார்களை வணங்குவதற்கு பக்தியும் தகுதியும் இருக்கவேண்டும். ஆனால் அது தமக்கு இல்லையே  என்ற மனத்துடன் அடியார்களை மனத்தால் வணங்கி வேறுபுறம் சென்றார் சுந்தரர்.

இதை அறியாத விறன்மிண்டர் சுந்தரராரை தவறாக நினைத்து  நீர் வணங்கத்தக்க அடியார்கள் இங்கு இருக்கும் போது அங்கு செல்கிறீரே என்ன பயன்? வன்றொண்டான் அவ்வடியார்களுக்கு புறம்பானவன். அவனை வலிய ஆட்கொண்ட வீதிவிடங்கப் பெருமானும் இவ்வடியாருக்கு புறம்பானவனே என்று கடுமையாக சாடினார். இதைக் கேட்ட சுந்தரர் விறன்மிண்ட நாயனார் அடியார்கள் மீது கொண்டுள்ள பக்தியை நினைத்து பெருமிதம் கொண்டார்.
எம்பெருமான் முன் வீழ்ந்து வணங்கி நின்ற சுந்தரரார் அடியார்க்கும் அடியாராகும் பேரின்ப நிலையை அருள வேண்டும் என்று வேண்டி நின்றார். அப்போது தில்லை வாழ் அந்தணர்  தம் அடியார்க்கும் அடியேன் என்று அடி எடுத்து கொடுக்க விண்ணும் மண்ணும் உய்ய திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தினைப் பாடி  தொழுதார் சுந்தரமூர்த்தி நாயனார்.
சுந்தரர் அடியார்கள் மீது கொண்டுள்ள பக்தியை நினைத்து நெகிழ்ந்துபோனார் விறன்மிண்ட நாயனார். சைவ சமய நெறியைக் காத்து திருத்தொண்டு புரிந்து வாழ்ந்துவந்த விறன்மிண்டருக்கு சுந்தரரார் பாடிய திருத்தொகையைக் கேட்டு எல்லையில்லா இன்பம் உண்டானது.
வேறு ஒரு கதையும் உண்டு. சுந்தரர் மீது கோபம் கொண்ட விறன்மிண்டர் சுந்தரராரையும், திருவாரூரையும் வெறுத்தார். திருவாரூருக்கு மட்டும் செல்லப்போவதில்லை என்று உறுதிபூண்டார். வீட்டுக்கு வரும் அடியார்களை உபசரிப்பதற்கு முன் அவர்களது ஊரைப் பற்றி விசாரிப்பார். அவர்கள் திருவாரூர் என்று சொன்னால் அவர்களது காலை வெட்டிவிடுவார். இதனால் விறன்மிண்டர் மனைவி அடியார்களிடம் திருவாரூர் பேரை மட்டும் சொல்லவேண்டாம் என்று முன்கூட்டியே தெரிவித்துவிடுவார்.

ஒருமுறை எம்பெருமான் சிவனடியார் வேடம் பூண்டு, விறன்மிண்ட நாயனார் இல்லத்துக்கு வந்து குரல்கொடுத்தார். அவரது மனைவி ஓடி வந்து சிவனடியாரைக் கண்டதும் முகம் மலர வரவேற்றாள். சுவாமி தங்களிடம் ஒரு விண்ணப்பம் என்றாள். என்ன மகளே என்று அடியார் வேடத்தில் வந்த எம்பெருமான் கேட்க தாங்கள் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று கேட்டால் திருவாரூர் என்று சொல்லாதீர்கள் என்றாள்.
ஆனால் அடியார் எனக்கு பொய் பேச தெரியாது என்று மறுத்தார். எனினும் ஒரு உதவி செய் அவர் உணவருந்தும்போது அவர் வைத்திருக்கும் அருவாளை இடதுபுறம் வைத்துவிடு என்றார்.  நாயனாரின் மனைவியும் அடியாரின் கூற்றுக்கு சம்மதித்தார்.


திருவாரூரையும், திருவாரூரில் இருக்கும் அடியாரையும் பிடிக்காத விறன்மிண்ட நாயனாரைத் தேடி, அவரது இல்லத்துக்கு  எம்பெருமானே, அடியார் வேடம் பூண்டு வந்தார். அவர் நாயனாரின் மனைவியிடம், தாம் திருவாரூர் என்பதையும் உணவு பரிமாறும் போது விறன்மிண்டநாயனாரின் இடதுபுறமாக கொடுவாளை வைக்கும் படியும் கேட்டுக்கொள்ள, அதன்படியே அம்மையாரும் சம்மதித்தார் என்பதை பார்த்தோம் இனி…

விறன்மிண்ட நாயனார் வந்தார். இருவருக்கும் அமுது பரிமாறினார் விறன் மிண்ட நாயனாரின் மனைவி. நாயனார் வழக்கம்போல் அடியாரிடம் தாங்களது ஊர் என்ன என்று வினவினார். எனக்கு ஏது சொந்த ஊர்.எல்லா ஊரும் எனதே எனினும் நான் பிறந்த ஊர் சுந்தரர் அவதரித்த திருவாரூர் என்றார். நாயனா ருக்கு சினம் மிகுதியாயிற்று. அடியார்களை மதியாத அந்த மானிடன் பிறந்த ஊரா நீர். உம்மை என்ன செய்கிறேன் பார் என்றார்.
நாயனாரின் கண்களில் கோபம் கொப்புளித்தது. சட்டென்று அருவாளை தேடி வலதுபுறம் நோக்கினார். அங்கு காணாமல் மனைவியை கேட்க அவர்  இன்று இடப்புறம் தவறுதலாக வைத்துவிட்டேன் என்றார். நாயனார் இடதுபுறம் திரும்பி கொடுவாளை எடுத்து அடியாரின் புறம் திரும்புவதற்குள் அடியார் எழுந்து ஓடி விட்டார்.
எனினும் அவரை விடாமல் துரத்திக்கொண்டு ஓடினார் நாயனார். இருவருமே நிற்காமல் ஓடிக்கொண்டிருக்க திருவாரூரின் எல் லைக்கு வந்துவிட்டிருந்தார்கள். திருவாரூர் என்பதை உணராமல் நாயனார் அடியாரை விரட்டி பிடித்து விடும் வேகத்தில் ஒடிவந்து அதே வேகத்தில் நிலத்தில் விழுந்தார்.

களைத்து போன நாயனாரைக் கண்டு அடியார்  சிரித்தார். நீர் இப்போது எங்கே வந்திருக்கிறீர்கள் தெரியுமா? திருவாரூரை வெறுத்தீர்களே… இப்போது நீரே திருவாரூ ருக்குள் தான் நுழைந்திருக்கிறீர் என்று மேலும் நகைத்தார்.
நாயனார் மனம் பதறினார். ஆத்திரத்தில் தவறுசெய்துவிட்டோமே என்று துடித்தார்.பிறகு செய்வதறியாமல் திருவாரூருக்குள் நுழைந்த எமது காலை நானே வெட்டிவிடுகிறேன் என்று தன்னுடைய காலை வெட்டிக்கொண்டார்.
நாயனா ரின் செயலைக் கண்ட எம்பெருமான் மேலும் தனது பக்தனை சோதிக்க விரும்பவில்லை. உடனேயே தம்பதி சமேதராய் விறன்மிண்டருக்கு காட்சி அளித்தார். தம்மை ஆட்கொண்டது எம்பெருமான் என்பதை உணர்ந்த விறல் மீண்டருக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் தளும்பியது. எம்பெருமான் சுந்தரர் அடியார்கள் மீது கொண்டிருந்த பக்தியை விறன்மிண்டர் உணரவே இதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
அடியார்கள் மீதும் எம்பெருமான் மீதும் அளவற்ற பக்தியையும் பேரன்பையும் கொண்ட விறன்மிண்ட நாயனார் திருக்கயிலையில் இறைவன் திருவருளை  பிரியாமல் வாழும் பேறை பெற்றார்.
சித்திரை மாதம்  திருவாதிரை நட்சத்திரத்தில் விறன்மிண்ட நாயனாரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது.
குறிப்பு:
63 நாயன்மார்கள் குறித்த இக்கட்டுரைக்கு, வாசகர்களாகிய தங்களது ஆதரவு பெரிதும் உதவியாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருந்தது. சிவாலயங்களில் அமைந்திருக்கும் நாயன்மார்கள், எம்பெருமான் மீதும் அடியார்கள் மீதும் கொண்டிருந்த பக்தியும் பேரன்பும் அளவிட முடியாதது. ஒவ்வொருவருமே தங்களது இறுதிக்காலம் வரையில், சிவபெருமானையும் அவருக்கு திருத் தொண்டு செய்வதையும் பெறும் பேறாக எண்ணி வாழ்ந்திருந்தார்கள்.

அவர்களது உண்மையான பக்தியை உலகுக்கு எடுத்துரைக்க, எம்பெருமான் திருவிளையாடல் புரிந்து அவர்களை சிவகணங்களுக்குள் ஐக்கியமாக்கி கொண்டார். இனி சிவாலயங்களுக்கு செல்லும் போது, 63 நாயன்மார்களையும் வணங்க தவறாதீர்கள். சிவனடியார்களை வணங்கினால், சிவனையே வணங் கிய பேறு கிடைக்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment