ஆடி மாதம் அம்மனை மனதில் நினைத்து விரதம் இருப்பதால் நமது உள்ளம் அமைதி அடைகிறது. மனம் ஒருமித்த ஒருநல்ல நிலைக்கு வருகிறது.
ஆடி மாதம் அம்மனை மனதில் நினைத்து விரதம் இருப்பதால் நமது உள்ளம் அமைதி அடைகிறது. மனம் ஒருமித்த ஒருநல்ல நிலைக்கு வருகிறது.
சஷ்டி, ஏகாதசி, கிருத்திகை போன்ற நாட்களில் விரதம் இருக்க வேண்டும். இதற்கு அறிவியல் பூர்வமான காரணமும் உண்டு. நமது கிரக அமைப்புகளுக்கும், மனித உடலுக்கும் நிறைய பொருத்தங்கள் உண்டு. அதைக் கருத்தில் கொண்டே பண்டிகைகள் உருவாக்கப்பட்டன.
இதுபோன்ற விசேஷ நாட்களில் வயிற்றில் அதிகமான உணவுப்பதார்த்தங்கள் இருந்தால் அது அஜீரணக் கோளாறு போன்ற அநேக தொல்லைகளை ஏற்படுத்தும். அதனால்தான் விரதம் இருக்க இந்த நாட்களைக் குறித்திருக்கிறார்கள். விரதத்துடன் ஆண்டவனையும் நினைத்து தியானம் இருந்தால் அது உடல் மற்றும் உள்ளத்துக்கு மிகவும் நல்லது.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற நாட்களில் கிரகணம் முடிகிறவரை தண்ணீர் கூட அருந்தக்கூடாது. கிரகணம் முடிந்ததும் நன்றாகத் தலைக்குக் குளித்துவிட்டு ஆண்டவனைத் தரிசித்த பிறகே ஆகாரம் மேற்கொள்ள வேண்டும். மகாபாரதத்தில் விரதம் பற்றி பீஷ்மர் தர்மருக்குச் சொல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது,
வேதத்திற்கு மேலான சாஸ்திரமில்லை
தாய்க்கு சமமான குருவில்லை
தர்மத்திற்கு மேலான லாபமில்லை
விரதத்திற்கு மேலான தவமில்லை
ஆக விரதம் என்பது தவம் என்று பொருள்படுகிறது.
பஞ்சமி, சஷ்டி, பவுர்ணமிகளில் விரதம் இருந்தால் பொறுமையும், அழகும் கிடைக்கும்.
பஞ்சமி, சஷ்டிகளில் விரதம் இருந்து, இறைவனை வணங்கினால் செல்வம் செழித்தோங்கும்.
தேய்பிறை அஷ்டமி, சதுர்த்திகளில் இருந்தால் நோய் நொடிகள் நம்மை நெருங்காது.
ஆடி மாதம் முழுவதும் முக்கிய தினங்களில் விரதம் இருந்தால் நல்ல தனமும், நிறைந்த புத்திர பாக்கியமும் கிட்டும். மாதமொன்றுக்கு மூன்று தினங்கள் என்று தொடர்ந்து 12 ஆண்டுகள் விரதம் மேற்கொண்டால் ஒப்பற்ற உயரிய தலைமைப் பதவி கிட்டும். ஒருவேளை மட்டும் உணவு. அதுவும் ஒரு ஆண்டுக்கு இப்படி இருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்.
விரதம் என்பது நோயை அகற்றுகிறது. நீண்ட ஆயுளைத் தருகிறது. டென்ஷனைக் குறைக்கிறது. பழிவாங்கும் எண்ணங்களை அறவே அழித்து விடுகிறது. பாவங்கள் நீங்குகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment