காசிக்கு போனால் நற்கதி கிடைக்கும் அவை கிடைக்க வேண்டுமானால், கன்னியாகுமரிக்கு வரவேண்டும் என்று சொல்கிறது புராணம். சிறந்த தீர்த்தமுடைய புண்ணிய தலமான பகவதி அம்மன் திருக்கோயில், சக்தி பீடங்களில் குமரி சக்தி பீடம் என்றழைக்கப்படுகிறது.
தல வரலாறு:
தேவர்களை அசுரர்கள் அடக்கி ஆண்ட காலமுமொன்று இருந்தது. தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கிய காலம் அது. பாவங்களும் தீமைகளும் பெருகி வழிந்தன. அசுரர்களின் அரசனான பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடி தலைதெறிக்க ஓடினான். கர்வத்தில் மிதந்தான்.
யாராலும் தன்னை வெல்ல முடியாது என்று இறுமாப்பு கொண்டு அலைந்தான். அவனது பாவத்தைக் கண்ட பூமாதேவி திருமாலிடம் முறையிட்டாள். அசுரர்களிடமிருந்து உங்களைக் காக்க பராசக்தியால் மட்டுமே முடியும். அவளை நினைத்து வேள்வி நடத்துங்கள் என்றார் திருமால். தேவர்களும் பராசக்திக்காக வேள்வியை நடத்தினார்கள். அப்போது வெளிப்பட்ட பராசக்தி அசுரனை நான் வதைக்கிறேன் என்று வாக்களித்தாள்.
அன்று முதல் கன்னியாகுமரியில் வந்து கடுந்தவம் புரியலானாள். சுசீந்தரம் எம்பெருமானுக்கு தேவி கன்னிப்பருவம் வந்ததையடுத்து அவள் மீது காதல் பெருகியது. ஆனால், கன்னிப் பெண்ணால் அழியும் வரம் பெற்ற பாணாசுரனை அழிக்க தேவி எம்பெருமானை திருமணம் செய்யக்கூடாது என்று நாரதர் விரும்பினார்.
எனவே இருவரிடமும் சென்று நள்ளிரவில் நல்ல நேரத்தில் மணமுடிக்க வேண்டும். நேரம் தவறக் கூடாது என்று கூறினார். அதற்கேற்ப, எம்பெருமானும் தேவியைத் தேடி நள்ளிரவு வரும் போது நாரதர் சேவலாகஉருவெடுத்து கூவினார்.பொழுது புலர்ந்துவிட் டது என நாரதர் சொன்ன நல்ல நேரமும் தவறிவிட்டது என்று எம்பெருமான் தேவியை மணமுடிக்காத வருத்தத்தோடு சுசீந்தரம் திரும்பினார். தேவியும் இனி கன்னியாகவே இருப்போம் என்று முடிவெடுத்து தவம் புரிந்தாள்.
இப்படி தேவி தவம் புரிந்துகொண்டிருக்கும் போது பாணாசுரன் தேவியை சந்திக்க நேரிட்டது. தேவியின் அழகில் மனதை பறிகொடுத்த அசுரன், அவளை திருமணம் செய்ய வேண்டினான். ஆனால் தேவி மறுக்கவே ஆணவத்தில் அவளை கவர்ந்து செல்ல உடைவாளை உருவினான். இதற்காக காத்திருந்தாற் போன்று தேவியும் போர்வாளை வீசினாள். நீண்ட நாள்கள் நடந்த இப்போரில், தேவி தன் சக்ராயுதத்தை ஏவி பாணாசுரனைக் கொன்றாள்.
தலசிறப்பு:
பரசுராம தெய்வ உருவை, இந்த இடத்தில் அமைத்து வழிபட்ட தலம். கடல் முனையில் இருக்கும் இத்தலத்தில் உள்ள கிணற்றில் உப்புக் கரிக்காத நல்ல நீர் கிடைக்கிறது. பிதுர்கடன் கழிக்க ஏற்ற தலம் இது.
தல பிரார்த்தனை:
பகவதி அம்மனை வேண்டி கன்னிகாபூஜை, சுயம்வரபூஜை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும். பிரார்த்தனைகள் நிறைவேறியதும் அம்மனுக்கு புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல், விளக்கு போடுதல், அபிஷேகம் செய்தல் போன்றவை முக்கிய நேர்த்திக் கடன்களாக இருக்கிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment