Thursday, 1 August 2019

ஆடி 18 ல் என்ன வாங்கினால் மென்மேலும் பெருகும் தெரியுமா?

3.8.2019 ஆடி 18 ஆடிப் பதினெட்டாம் பெருக்கு.!!

கடக ராசிக்குரிய நவ கிரகமான சந்திரனும், சூரிய பகவானும் ஒரே ராசியில் வருகின்ற ஒரு மாதம் தான் ஆடி மாதம் ஆகும். எனவே தான் இந்த மாதத்தில் வருகின்ற ஆடி அமாவாசை தினம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணங்கள் அளிக்கக்கூடிய ஒரு சிறந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதம் என்றாலே உக்கிரமான அம்மன் தெய்வங்கள வழிபாட்டுக்குரிய ஒரு மாதமாக பலர் கருதி இந்த மாதத்தில் சுப காரியங்கள் எதையும் செய்யாமல் விட்டுவிடுகின்றனர். அதேபோன்று வீட்டிற்கும், தங்களுக்கும் தேவையான புது பொருட்கள் வாங்குவதையும் தவிர்த்து விடுகின்றனர். இத்தகைய ஆடி மாதத்தில் வருகின்ற ஒரு அற்புதமான சுப தினம் தான் ஆடி பதினெட்டாம் பெருக்கு தினம். இந்த தினத்தில் நாம் என்ன வாங்கினால் பலன்கள் அதிகம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆடி மாதம் 18-ஆம் தினம் ஆடிப் பெருக்கு பன்னெடுங்காலமாக தமிழகத்தில் காவிரி ஆறு பாய்கின்ற கரையோரம் இருக்கும் ஊர்களில் வாழ்கின்ற மக்களால் கொண்டாடப் கொண்டாடப்பட்டு வருகிற ஒரு பாரம்பரிய விழாவாக இருக்கிறது. வரலாற்றுப்படி பார்க்கும்போது கர்நாடகாவில் உற்பத்தியாகி தமிழகத்தில் பாயும் காவிரி ஆறு மற்ற மாதங்களில் சாதாரண அளவில் நதியாக ஓடினாலும், ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று காவிரி ஆறு ஓடும் நதிக்கரைகளில் இருக்கின்ற படித்துறைகளின் உயரத்தை தாண்டி தண்ணீர் பெருக்கு செல்லும் என்றும், அப்படி அளவுக்கதிகமான தண்ணீரால் தங்களின் விவசாயம் செழிக்க உதவும் காவிரி ஆற்றிற்கு நன்றி தெரிவிக்கும் ஒரு விழாவாக இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருவதாக பாரம்பரிய வரலாறு அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக ஆடி மாதம் என்பது உக்கிர சக்தி கொண்ட தெய்வமான அம்மனை குளிர்வித்து, வழிபாடு செய்யும் ஒரு மாதமாக இருப்பதால் ஆடி மாதத்தில் நற்காரியங்கள் எதையும் செய்யாமல் பலரும் தவிர்த்து விடுகின்றனர். இந்த நடைமுறை தற்போதுள்ள மக்களால் அதிகம் பின்பற்றப்படுவதாக இருந்தாலும் முற்காலத்தில் ஆடி மாதத்தில், அதிலும் குறிப்பாக ஆடி மாதம் 18-ஆம் தினத்தன்று தான் மங்கலமான பொருட்கள் அனைத்தையும் வாங்குவதற்கான ஒரு தினமாக தமிழர்கள் கடைப்பிடித்தனர்.

பிறகு காலமாற்றத்தில் ஆடி மாதங்களில் புது பொருட்கள் வாங்குவது, நற்காரியங்கள் செய்வது போன்றவற்றை தவிர்த்து, மற்ற மாதங்களில் அவற்றை மேற்கொள்ள தொடங்கினர். இவை எப்படி இருந்தபோதும் ஆடி மாதம் புதிய பொருட்கள் எதையும் வாங்கலாம் என்பது ஆன்மீக அறிஞர்களின் கருத்தாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஆடிப் பதினெட்டு என அழைக்கப்படும் ஆடிப் பெருக்கு தினத்தன்று தங்க ஆபரணங்கள் அல்லது வெள்ளி பொருட்களை வாங்குவதால் அவை பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.

அப்படி தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கும் அளவிற்கு பணமில்லையென்றாலும் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் ஏற்படுத்தவல்ல ஆற்றல் மிகுந்த பொருட்களான மஞ்சள் மற்றும் உப்பு போன்றவற்றை ஆடிப்பெருக்கு தினத்தன்று வாங்குவதால் வீட்டில் மங்களங்களும், சுபிட்சங்களும் பன்மடங்கு பெருகுவது நிச்சயம் என ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment