சக்தி பீடங்களில் ஒன்றான உஜ்ஜயினி மாகாளி த்வாதசலிங்க ஷேத்திரம், சப்த மோட்சபுரி என்ற பெருமைகள் கொண்ட அற்புதத்தலம். அம்பாளின் முக்கிய கோயில்களைதான் சக்திபீடங்கள் என்று அழைப்பார்கள். உஜ்ஜையினில் இருக்கும் காளிகோயில் சக்தி பீடங்களில் ருத்ராணி பீடம் என்றழைக்கப்படுகிறது.
காளிமாதேவியின் இருப்பிடங்களில் ஒன்றாக உஜ்ஜயினி விளங்குகிறது. இங்கிருக்கும் காளியை உச்சினி மாகாளி என்று நம்மவர்கள் அழைக்கிறார்கள். மாந்திரீகம் செய்யப்படுபவர்கள் உச்சினி மாகாளியின் அருளைப் பெற்றால் அவர்களை வெல்லமுடியாது என்பது ஐதிகம். உஜ்ஜயினி காளி கோயில் காளி மந்திர் என்று அழைக்கப்படுகிறது.
உஜ்ஜயினி காளி கோயில் ருத்ராணி பீடம் என்பார்கள். ருத்ரன் என்றால் சிவன் என்று பொருள். ருத்ராணி என்றால் அம்பாளைக் குறிக்கும். ருத்ரம் என்றால் ஆவேசம் என்றும் சொல்லலாம். உக்கிரசக்தியைக் கொண்டு ஆவேசமாக இருப் பாள் இந்த அம்பிகை. அம்பிகையின் ஆவேசத்தை மாற்றி சாந்த சொரூபியாக மாற்றினார் ஆதிசங்கரர். அம்பிகையின் அருகில் ஆதிசங்கரர் யந்திரத்தைப் பி திஷ்டை செய்து அம்பாளை சாந்தப்படுத்தினார்.
செந்தூரம் பூசிய குண்டுக்கன்னங்களுடன் உருண்டைமுகத்தோடு சிறிய கிரீடத்தில் கருணையும் அன்பும் பொங்கி வழிய அழகான கண்களைக் கொண்டு பக்தர்களுக்கு அருள் புரிகிறாள். இவளை வடபத்ரகாளி என்றும் அழைக்கிறார் கள்.
காளிதேவியின் அருளை தனது குருவின் மூலம் கேட்டறிந்த விக்ரமாதித்தன் சர்வ வல்லமை பெற தன்னையே பலி கொடுக்க நினைத்தான். அவன் தலை ஈட்டி முனையில் படும்போது மாகாளி தோன்றி, ஒரு பேரரசை உருவாக்குவ தற்கு வரம் தந்தாள். அவளுடைய அருட்சக்தியால் அங்கு ஒரு மாபெரும் நக ரம் உருவானது. இதுவே உஜ்ஜயினி என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாறு.
விக்கிரமாதித்தனுக்கு விருப்பமானவள் மாகாளி தேவி. மாகாளியின் அருளால் ஆயிரம் ஆண்டுகள் வரை அரசாளும் வரம் பெற்றான்.
காளிதாசனுக்கு கவித்துவத்தைக் கொடுத்தவள் வடபத்ரகாளிதான். காளிதாச னுக்கு எழுத படிக்க தெரியாது. அவன் இளவரசியை மணந்த போது படிப்பறிவு இல்லாத மூடன் என்று தெரிந்ததும் காளிதேவியை வழிபட்டு கல்வியறிவு பெற்று வருமாறு அவனை அனுப்பிவிட்டாள். அவனும் உச்சினி மாகாளியை அணுகி அவளை மனமுருகி வேண்டினான்.
மாகாளி அவனுக்கு சியாமளாவாகவும், ராஜராஜேஸ்வரியாகவும் காட்சியளித்து அருள்புரிந்தாள். அவன் கேட்டதற்கிணங்க தன் வாய் தாம்புலத்தை ஆட்டிடையன் வாயில் உமிழ்ந்து அவனை உலக மகாகவியாக்கினாள். ஈடு இணையற்ற கவித்துவத்தை அளித்தாள். காளி தாசனின் சியாமளா தண்டகத்திலிருந்து இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
காளிதாசன் எழுதிய சியாமளா தண்டகத்திலிருந்து வடமொழி செய்யுள் வகையில் ஒன்றான இதில், மாகாளியின் தலைமுதல் பாதம் வரையிலான கேசாதி பாத வர்ணனை இடம்பெற்றுள்ளது. காளி மூர்த்தங்களில் ஆத்யகாளி, மகா காளி, மகாகாளி தசமுகி வடிவங்கள் உண்டு. பத்ரகாளி என்னும் காளி மங்கல கரமான காளி. பத்ரகாளிகளில் புராதனமாக விளங்குபவள் உஜ்ஜயினி மாகாளி.
மாகாளியைக் கண்ணால் தரிசித்தால் நாமும் காளிதாசன் போல் அவளின் அடி மையாகி போவோம். அனைத்து பேறுகளையும் பெறுவோம். உஜ்ஜயினி மாகா ளியைத் தரிசிக்க வாய்ப்பு கிடைத்தால் தவறவிடாதீர்கள்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment