இந்த பிறவியில் தோஷம் இல்லாமல் வாழ வேண்டும் என்று விரும்புபவர்களும், மறுமையில் பிறவியே வேண்டாம் என்று நினைப்பவர்களும் அவசியம் அத்தி வரதரை வழிபட வேண்டும்.
அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி வரை அத்தி வரதரை நாம் வழிபடலாம். 40 ஆண்டுகளுக்கு ஒரு தடவை கிடைக்கும் வாய்ப்பு இது. இந்த வாய்ப்பை தவற விடாமல் அத்தி வரதரை வழிபட்டு பலன் பெற வேண்டியது ஒவ்வொரு பக்தனின் கடமையாகும்.
தமிழ்நாட்டில் வேறு எந்த திவ்யதேசத்திலும் பெருமாள் இப்படி தண்ணீருக்குள் தன்னை ஆழ்த்திக் கொண்டது இல்லை. அதுபோல 40 ஆண்டுகளுக்கு ஒரு தடவை தண்ணீருக்குள் இருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவதும் இல்லை. எனவே அத்தி வரதர் வழிபாடு மிகுந்த புண்ணியம் தரும் வழிபாடாக கருதப்படுகிறது.
அத்தி வரதரை வழிபட்டால் முக்கிய கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். குறிப்பாக முக்தி வேண்டுபவர்களுக்கு மிக எளிதாக அதை தரும் அவதாரமாக அத்தி வரதர் கருதப்படுகிறார். நம்மாழ்வார் தனது பாசுர பாடல்களில் இதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த பிறவியில் தோஷம் இல்லாமல் வாழ வேண்டும் என்று விரும்புபவர்களும், மறுமையில் பிறவியே வேண்டாம் என்று நினைப்பவர்களும் அவசியம் அத்தி வரதரை வழிபட வேண்டும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment