புராண காலத்தில் மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மிகுந்த துன்பங்களை தந்தனர். ஒரு கட்டத்தில் இதை பொறுத்து கொள்ள முடியாத தேவர்களும், மனிதர்களும் திருமாலிடம் அவர்களை அழிக்குமாறு வேண்டினர். எனவே அவர்களை அழிப்பதற்கு மனித உடலும், குதிரை தலையும் கொண்ட “ஹயக்ரீவர்” வடிவமெடுத்து மது, கைடபர் என்ற இரு அரக்கர்களையும் அழித்தார். மகாவிஷ்ணுவின் பதினோராவது அவதாரம் எனவும் ஒரு சிலரால் கருதப்படும் ஸ்ரீ ஹயக்ரீவர் பகவானுக்குரிய மூல மந்திரம் இதோ.
ஹயக்ரீவர் மூல மந்திரம் உத்கீத ப்ரண வோத்கீத ஸர்வ வாகீச்வரேச்வர ஸர்வ வேத மயோசிந்த்ய ஸர்வம் போதய போதய
மகாவிஷ்ணுவின் அம்சமான ஸ்ரீ ஹயக்ரீவர் பெருமாளுக்குரிய ஆற்றல் மிக்க மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதிப்பது நல்லது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்கு சென்று பெருமாள் அல்லது ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி, தாமரை பூ சமர்ப்பித்து சந்நிதிக்கு முன்பு தீபம் ஏற்றி, இந்த மூல மந்திரத்தை 108 முறை முதல் 1008 முறை வரை துதிப்பதால் மாணவர்கள் கல்வி, கலைகளில் சிறந்த தேர்ச்சி பெறுவார்கள். புதிய சிந்தனை மற்றும் செயலாற்றல் உண்டாகும். சனி கிரக தோஷங்கள் நீங்கும். தீய குணங்கள் மற்றும் எண்ணங்கள் அறவே நீங்கும். உடல் மற்றும் மனோபலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
ஹயக்ரீவர் வழிபாடு
கல்வியறிவு பெற்ற மனிதனே முழுமையான மனிதனாக சமுதாயத்தால் மதிக்கப்படுகிறான். அந்த கல்வியறிவோடு மனிதனுக்கு பயன் தரும் கலைகளிலும் தேர்ச்சியடைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இறைவனை உணர வைக்காத எந்த ஒரு கல்வியும் உண்மையான கல்வியல்ல என்பது பெரியோர்களின் வாக்காகும். ஞான முத்திரையை ஏந்தி, சங்கு மற்றும் ஸ்ரீ சக்ரத்தை ஏந்தியவாறு வீற்றிருப்பவர் ஹயக்ரீவ மூர்த்தி. கல்வி, கலைகளில் தேர்ச்சி மற்றும் ஞானம் வேண்டுபவர்கள் ஹயக்ரீவரின் இந்த ஸ்தோத்திரத்தை துதிக்க வேண்டும்.
ஹயக்ரீவர் வழிபாட்டிற்குரிய தினங்கள் பெருமாளின் மற்றொரு வடிவமான ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது தான் என்றாலும் வாரந்தோறும் வரும் புதன் கிழமைகள் மற்றும் மாதத்தில் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசி தினங்களில் ஹயக்ரீவருக்கு உகந்த கொள்ளு தானியம் நிவேதனம் செய்து, துளசி மற்றும் ஏலக்காய் மாலை சாற்றி, தீபங்கள் ஏற்றி ஹயக்ரீவர் மூல மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவதால் நீங்கள் விரும்பிய காரியங்கள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment