Thursday, 18 July 2019

ஆடியில் அம்மனுக்கு முக்கியமானது எது தெரியுமா?

ஆடி பிறந்தால் அம்மனுக்கு விசேஷம். அம்மனுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள் அனைத்தையும் குறையில்லாமல் அந்த மாதம் முழுமையும் செய்யலாம். அவற்றில் முதன்மையானது, முக்கியமானது அம்மனுக்கு கூழ் ஊற்றும் வழிபாடு. எல்லாவற்றுக்கும் பின்பு, ஒரு கதை இருக்கும் என்பது போல இதற்கும் ஒரு கதை உண்டு.

தவம் செய்வதில் சிறந்து விளங்கியவர் ஜமதக்னி முனிவர். இவர் மீது வஞ்சம் வைத்த கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் அவரை கொன்று விட, இதைக் கேள்விபட்ட தும் ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா தேவியும் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள தீயில் இறங்கினாள்.
அதைத் தடுக்க, இந்திரன் மழையாக மாறி ரேணுகா தேவி இறங்கிய தீயை அணைத்தார். தீக்காயம் பட்டதால் ரேணுகாவின் உடலில் தீ கொப்புளங்கள் உண்டாயிற்று. அருகில் இருந்த வேப்பிலைகளைப் பறித்து ஆடையாக அணிந்தார். பசி தீர்க்க பக்கத்தில் இருந்த கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த மக்களிடம் உணவு கேட்டார்.
பச்சரிசி, வெல்லம், இளநீர் போன்றவற்றைக் கொடுத்தார்கள். அதைக் கொண்டு கூழ் தயாரித்து அருந்திவந்தார். இளநீர் அவரது எரிச்சலைத் தணித்தது.  அப்போது சிவபெருமான் ரேணுகாதேவியின் முன்பு தோன்றி, உன்னுடைய உடல் உபாதையைத் தீர்க்கும் அருமருந்து இதுதான்.  நீ காய்ச்சிய கூழ், சிறந்த உணவு. கொப்புளங்களை ஆற்றும் தன்மை நீ அணிந்திருக்கும் வேப்பிலை செய்யக் கூடியது. 

இளநீரும் சிறந்த நீராகாராம். அம்மை நோய் கண்டவர்களுக்கு இவையெல்லாம் அருமருந்தாகும் என்று வரம் அளித்தார். அப்போது முதலே ஆடி மாதம் தொடங்கினால், கிராமங்களில் ஒன்று கூடி கோயிலின் வாசலில் பெரிய வட்டாவை வைத்து, கூழ் ஊற்றும் வைபவம் நடக்கும். 
மக்கள் வீட்டிலேயே கூழ் காய்ச்சி அம்மனுக்கு பிடித்த, பச்சரிசி, வெல்ல மாவு, கத்தரிக்காய், வேர்க்கடலை, அரிசிமாவு வெல்லம் கலந்த பிடி கொழுக்கட்டை செய்து  மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து பெரிய வட்டாவில் ஊற்றி வழிபடுவார்கள். 
 நகரங்களில்  சில இடங்களில் மட்டுமே இந்த வைபம் நடக்கும். பெரும்பாலான கோயில்களில் கூழ் ஊற்ற மக்கள் கேழ்வரகு மாவு வாங்கி கொடுத்து கோயில்களில் வந்து வழிபடுவார்கள். 
சில மக்கள், தங்கள் வீடுகளிலேயே அம்மனை வழிபட்டு,  அந்த வீதி முழுவதும்  இருக்கும் மக்களுக்கு கூழ் ஊற்றி வழிபடுவார்கள்.  சிலர் காலையில் கூழ் ஊற்றி மாலை நேரமானதும் அசைவ உணவுகளை சமைத்து வைத்து படைப்பது உண்டு.
ஆனால்  ஆடிமாதத்தில் ஆன்மிக வழிபாடு என்பதைத் தாண்டி, அறிவியலும் இதில் அடங்கியிருக்கிறது அதில் ஒன்று கூழ் ஊற்றும் வழிபாடு… என்ன வென்பதை  நாளை பார்க்கலாமே...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment