Tuesday, 30 July 2019

நாளை ஆடி அமாவாசை- பித்ருக்களின் ஆசியை முழுமையாக பெற வழிபடுங்கள்.!!

ஆடி அமாவாசை பித்ருக்களை வழிபடும் நாள். பித்ருக்கள் என்ற சொல் நம் முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியிலும் தாய் வழியிலும் இறந்து போன நம் முன்னோர்கள் எல்லோருமே பித்ருக்கள் தான். தந்தை வழி பித்ருக்கள், பிதுர் பித்ருக்கள் என்றும் தாய் வழி பித்ருக்கள் மாதுர் பித்ருக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். சூரியனை, பிதுர்காரகன் என்றும் சந்திரனை மாதுர்காரகன் என்றும் அழைக்கிறோம். 

பித்ருக்கள் ஸ்தூல வடிவத்தை விடுத்து, சூட்சும வடிவில் இருப்பவர்கள். பஞ்ச பூதங்களைத் தழுவி இருப்பவர்கள். தெய்வாம்சங்கள் பொருந்தியவர்கள் இவர்களைத் தர்ப்பணம் வாயிலாகவும், பிண்டம் வாயிலாகவும் வழிபட வேண்டும். குறிப்பாக, இயற்கையான முறையில் மரணம் தழுவுபவர்களைக் காட்டிலும், செயற்கையான முறையில் இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை முறையாக செய்து வழிபட வேண்டும்.
இல்லையென்றால் அந்த ஆத்மா தனித்து விடப்படும் போது அவை நற்கதி அடையாமல், அடுத்த சந்திதி பிறக்கும் போது பித்ரு தோஷங்களாக மாறி ஜாதகத்தில் திரிகோணங்களில் அமைந்து விடுகிறது.
நம்முடைய வாழ்க்கையின் நன்மை, தீமை அனைத்துமே, முற்பிறவியில் நம்முடைய கர்மாவைத் தொடர்ந்தே என்றாலும் பித்ருக்களின் பாவமும் புண்ணியமும் கூட, நம்மை பின் தொடர்ந்து வருகிறது என்பதே உண்மை. நமது பித்ருக்கள் நமக்கு நன்மையையே விரும்புவார்கள் என்பது போல, நாமும் அவர்களை பிதுர்கடன் இல்லாமல் வைக்க வேண்டும்.

பித்ருக்கள் மறைந்தாலும், அவர்களது பசியைப் போக்க வேண்டும். அவர்களுக்கான பசியை தீர்க்கும் நாள் தான் அமாவாசை. நாளை ஆடி அமாவாசை. அதிகாலை புண்ணிய நதிகளில் நீராடி ஆலய தரிசனம் செய்து, பிதுர் தர்ப்பணம், அன்ன தானம் செய்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு அமாவாசையன்றும் பித்ருக்கள் அவர்கள் வாழ்ந்த இல்லங்களுக்கு வந்து, அருகில் உள்ள நீர்நிலைகளில் தங்குவார்கள். அன்றைய தினம் அவர்களை நினைத்து வழிபட்டு அவர்களது பசியைப் போக்க வேண்டும். இல்லையென்றால் வருத்தத்துடன் பித்ருலோகம் செல்லும் அவர்கள் கோபத்தில் நம்மை சபிக்கவும் கூடும். பித்ருக்களின் சாபத்தை தெய்வம் கூட மாற்றி அமைக்காது என்று சொல்வார்கள்.
பொதுவாக ஒருவர் இறந்தபின்பு திதி, பட்சம், தமிழ் மாதம் போன்றவற்றை கணக்கிட்டு, அடுத்த வருடம் அந்தக் குடும்பத்திலிருக்கும் வாரிசானவர், அந்த திதியில் தர்ப்பணம் செய்வார்கள். அப்படி வருடந்தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வந்தால் அவர்களது ஆசியோடு, குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. குடும்பத்தை தாக்கி இருக்கும் சகல தோஷங்களும் நிவர்த்தியாகிவிடும்.
அவர்கள் இறந்த திதியைத் தாண்டி, அமாவாசை திதிகளிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வந்தால் வாழ்வில் மிகப் பெரிய நன்மைகளைச் சந்திக்கலாம். சிலருக்கு முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போகக்கூடும். அவர்கள் அனைவருமே வருடத்தின் முக்கிய அமாவாசைகளில் வரும் ஆடி, தை, புரட்டாசி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்கலாம்.

அப்படி கொடுக்கப்படும் தர்ப்பணங்கள், நிச்சயம் அவர்களது பித்ருக்களை போய் சேரும். அப்படி செய்தால் பித்ரு தோஷங்களும் நிவர்த்தியாகும் என்கிறது இந்துமத சாஸ்திரங்கள். கருட புராணம், பவிஷ்ய புராணங்கள் பித்ரு பூஜைகளை செய்யாமல் விடக்கூடாது என்று வலியுறுத்துகின்றன.
முன்னோர்களில் முக்தி அடைந்ததை அறிந்து கொள்ள முடியாததால், பித்ரு பூஜையைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று சப்தரிஷிகளும் உறு தியாக கூறியிருக்கிறார்கள். பித்ரு பூஜைகள் எப்போதுமே பலன் அளிக்ககூடியவை.
நாளை ஆடி அமாவாசை. உங்கள் மூதாதையர்கள் அனைவரையும் நினைத்து புண்ணிய நதிகளில் நீராடி ஆலயங்களில் வழிபாடு செய்து ஏழைகள்,  இயலாதவர்கள், இல்லாதவர்களுக்கு அன்னதானமும், ஆடை தானமும் செய்யுங்கள். பித்ருக்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்....

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment