Saturday, 27 July 2019

நோய் தீர்க்கும் குன்னுவாரன்கோட்டை விஸ்வநாதர்.!!

திண்டுக்கல்லிலிருந்து 43 கிமீ தொலைவில் உள்ளது குன்னுவாரன்கோட்டை. இங்கு வைகை நதி கரையின் மீது பழமையான சிவன் கோயில் உள்ளது. மூலவராக விஸ்வநாதர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் உள்ளார். விசாலாட்சியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், தட்சணாமூர்த்தி, காலபைரவர், சூரியன், சந்திரன் மற்றும் நவக்கிரக சிலைகள் உள்ளன.

மேற்கிலிருந்து கிழக்காக பாயும் வைகை நதி, இந்த கோயில் அருகில் தெற்கிலிருந்து வடக்கு திசையை நோக்கி பாய்கிறது. இதனை “உத்தரவாகினி’’ என்பர். காசியில் கங்கை நதியும் இது போன்று தெற்கிலிருந்து, வடக்கு திசையை நோக்கி பாய்வதால், இந்த தலத்தை காசிக்கு நிகரானதாக கூறுகின்றனர்.  

தல வரலாறு 

பண்டைய காலத்தில் இப்பகுதியில் வசித்த சிவபக்தர் ஒருவர், தினமும் சிவனடியார் ஒருவருக்கு அன்னம் பரிமாறி, அதன் பின்னர் தான் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு சமயம் சிவனடியார் யாரும் தென்படவில்லை. தனது பணியாளரை ஊருக்குள் அனுப்பி, யாரேனும் சிவனடியார் இருந்தால் அழைத்து வரும்படி கூறி அனுப்பினார். வைகை நதியில் சிவனடியார் ஒருவர் குளிப்பதை கண்ட பணியாளர், சிவபக்தரிடம் வந்து தகவல் தெரிவித்தார்.இதன்படி அங்கு சென்ற சிவபக்தர், சிவனடியாரை சாப்பிட வருமாறு அழைத்தார். “நான் சிவ தரிசனம் செய்த பின் தான் சாப்பிடுவது வழக்கம். என்னை சிவாலயத்திற்கு அழைத்து செல்லுங்கள்’’ என்று சிவபக்தரிடம், அடியார் தெரிவித்தார். ஆனால் அப்பகுதியில் சிவாலயம் இல்லை என்பது அடியாருக்கு தெரியவந்தது. இதனால் கோபமடைந்த அடியார், சிவனுக்கு கோயில் இல்லாத ஊரில் உபசரிப்பை கூட ஏற்க மாட்டேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார். இதனால், வருத்தமடைந்த சிவபக்தர் அப்பகுதியில் காசியில் இருந்து    கொண்டு வரப்பட்ட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். அந்த சிவலிங்கத்துக்கு “விஸ்வநாதர்’’ என்று அவர் பெயர் சூட்டினார் என்பது புராணம். 

வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, திருக்கார்த்திகை, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷ நாட்கள், கார்த்திகை சோமவாரம் உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்களாகும். மரண பயம் நீங்க, பாவம் நீங்கி முக்தி கிடைக்க கோயில் அருகில் உள்ள வைகை ஆற்றில் பக்தர்கள் குளிக்கின்றனர்.தீராத நோயால் அவதிப்படுபவர்கள், நோய் குணமடைய வேண்டி மூலவர் மற்றும் அம்மனை வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் மூலவருக்கு அபிஷேகம் செய்தும், நெய் தீபம் ஏற்றியும் வணங்குகின்றனர். அம்மனுக்கு இனிப்பு பாயசம், சர்க்கரைப் பொங்கல் மற்றும் இனிப்பு பதார்த்தங்களை நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.ஜாதக தோஷம் அல்லது நாக தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள், அம்மனுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர். பூஜைக்கு பின்னர் அம்மனுக்கு அணிவித்த மாலையை வீட்டிற்கு எடுத்து சென்று வழிபட்டால் விரைவில் தோஷம் நீங்கி, நல்ல வரன் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோயில் நடை தினமும் காலை 6.30 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment