Tuesday, 11 June 2019

சாம்பிராணி தூபம் போடும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.!!

தெய்வ பூஜைகளின் போது, வாசமிக்க தூபங்கள் கொளுத்தி இறை வழிபாடு செய்யப்படுகிறது. அப்படி தூபங்கள் காட்டி வழிபடும் சமயம் மேற்கூறிய மந்திரத்தை ஜெபித்து, தெய்வ பூஜை செய்வதால் உறுதியான நன்மைகள் உண்டாகும்.

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் 
பத்தர் ஆகி அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு 
ஆர்வத்தை உள்ளே வைத்து 

விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் 
இடவல்லார்க்குக் கரும்பினில் கட்டி 
போல்வார் கடவூர் வீரட்டனாரே

வீட்டில் இறைவனுக்கு பூஜைகள் செய்யும் நேரத்தில் கூற வேண்டிய மந்திரம் இது. குறிப்பாக இம்மந்திரத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் விழா நாட்களில் தெய்வங்களுக்கு பூஜை செய்கின்ற போது, மலர்கள் சாற்றி தீபம் ஏற்றிய பிறகு தூபம் காட்டும் போது இம்மந்திரம் துதித்து வழிபடுவதால், வீட்டில் துர்சக்திகள் நீங்கும். பூஜையின் பலன்கள் முழுமையாக கிடைக்கும். வாழ்வில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment