Saturday, 29 June 2019

கலியுகம் முடியும் தருணத்தை உணர்த்தும்  நாகலோகம்.!!

மனிதர்கள் வாழ்வது பூலோகம். இறைவனின் இருப்பிடம் மேலுலகம். வைகுண்டம், கயிலாயம் எல்லாமே அங்குதான் இருக்கிறது. அது போன்று மனிதர்கள் வாழும் பூமிக்கடியில் பாதாளத்தில் ஓர் உலகம் உண்டு அது பாதாள உலகம் என்று சொல்கிறார்கள் ஆன்மிக பெரியவர்கள்.

மனிதர்களுக்கு தெரிந்ததெல்லாம் பூலோகம் மட்டும்தான். மேல் உலகம் சென்றவர்கள் திரும்பவில்லை. பாதாள உலகத்தைக் காணமுடியவில்  லை. ஆனால் பாதாள உலகம் உண்டு என்பதை நிரூபிக்கிறது உத்தரகாண்ட் மாநிலம் பித்தோகர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள பாதாள புவனே ஸ்வரர்  கோயில்.

இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் சூழ இரண்டு நதிகளுக்கிடையே தவழும் அழகிய கிராமத்தில் தான் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோயிலை அடைய அரைக்கிலோமீட்டர் நடந்துசெல்ல வேண்டும். தூரத்திலிருந்தே கோவிலைப் பார்க்க முடிகிறது. ஸ்கந்த புராணத்தில் இந்தக் குகை கோயிலுக்கு நான்கு கதவுகள் இருந்ததாகவும், போன யுகத்தில் இரண்டு கதவுகள் மூடிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாதாள உலகுக்கு செல்லும் வழியைப் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தாலும் சூரிய வம்சத்தை சேர்ந்த ரித்து பர்னா என்பவர்தான் இந்தக் கோயி லின் உள்ளே நுழைந்ததாக புராணக்கதை கூறுகிறது. மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து ஈஸ்வரனை பூஜித்தபின்பு மேல் உலகம் சென்றதாக கூறுகிறார்கள். கலியுகத்தில் ஆதிசங்கரர் இங்கு வழிபட்டு லிங்கத்துக்கு செப்பு காப்பு வைத்திருக்கிறார்.

இந்து மத இதிகாச நூல்களின் படி முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒன்றாக சேர்ந்திருக்கும் இந்த கோவில்தான் பாதாள உலகுக்கு செல்லும் வாசல் என்று சொல்கிறார்கள். சுண்ணாம்பு பாறைகளால் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயில்  வளாகத்தில் சிவன், பார்வதிக்கு கோவில்கள் உண்டு. அதைத் தாண்டி சென்றால் குகையின் நுழைவாயில் தெரிகிறது. 160 அடி நீளமும்,100 அடி ஆழமும் கொண்ட  இந்தக் குகைக்குள் செல் வது சாதாரணமான விஷயமல்ல.
குகைக்குள் ஒரு மனிதன் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.  குகையின் பக்கவாட்டில் பிடிமானத்துக்காக சங்கிலி வைத்திருக்கிறார்கள். அதுவும் புழுவை போல் வளைந்து நெளிந்து செல்ல வேண்டும். இந்தக் குகைக்குள் கவனமாக ஊடுருவி சென்றால் 80 படிக்கட்டுகளுக்கு அடுத்து சுரங்கப் பாதை ஒன்று உண்டு. இதன் வழியாக கயிலாயம் செல்லலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் தற்பொது இந்த சுரங்கமானது அடைக்கப்பட்டி ருக்கிறது.

படிக்கட்டுகளில் இறங்கும் போதே நரசிம்மரின் உருவம் தெரிகிறது. கீழே இறங்கியதும் ஆதிசேஷன் பூமியைத் தாங்கும்படி இருக்கும் காட்சியை காணலாம். அங்கு  யாக குண்டமும் காணப்படுகிறது.அர்ஜூனனின் கொள்ளுப்பேரனான ஜனமேஜயன் தன் தந்தை பரீட்சித் மரணத்துக்கு பழி வாங்க இங்குதான் நாக யாகம் செய்ததாக கூறப்படுகிறது.
ஆதிசேஷன் முதுகின் மேல் நடந்தால் எட்டு இதழ் தாமரையிலிருந்து விநாயகர் மீது தண்ணீர் சொட்டு சொட்டாக விழுகிறது. மேலும் வளைவுக ளைக் கடந்தால் பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத் விக்ரகங்கள் லிங்கவடிவில் காணப்படுகின்றன. இயற்கையா எழுந்த லிங்கங்கள்  எளிதில் காண முடியாத உருவமாகவே இருக்கிறது. இது சக்தி யுகத்தில் தோன்றியதாக கூறுகிறார்கள். பக்கத்தில் கால பைரவர் ஆக்ரோஷத்துடன் வாயை துருத்திக்கொண்டு நிற்கிறார். அந்த வாயின் உள்ளே நுழைந்தால் மோட்சத்தை அடையலாம் என்கிறார்கள். அங்கு சிவபெருமான்  சிம்மத்தின் மேல்  பாதாள சண்டியுடன் காட்சி தருகிறார்.
கருவறையில் ஆதிசங்கரர் வைத்த மூன்று செப்புலிங்கங்கள் இருக்கிறது. லிங்கத்தின் மீது மாறி மாறி நீர் சொட்டி அபிஷேகம் நடக்கிறது. அதைத் தாண்டி கழுத்தில் நாகங்களுடன் சிவன் காட்சி தருகிறார். சிவபெருமானுடன் முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கிருப்பதாக ஐதிகம்.

அங்கிருந்து குகையின் வேறுவழியாக வெளியேற வேண்டும்.  வெளியேறும் இடத்தில் நான்கு யுகங்களைக் கொண்ட  லிங்கங்கள் இருக்கிறது.  இவற்றில் கலியுகத்தைக் குறிக்கும்  லிங்கம் மேல் இருக்கும் கூம்பைத் தொடும் தருணமே கலியுகம் முடியும் தருணம் என்கிறார்கள்.
இந்தகுகை கோயிலுக்கு சென்று வந்தால் நிச்சயம் புதிய உலகம் சென்ற உணர்வை  உண்டாக்கும். வாழ்நாளில் ஒருமுறையாவது பாதாள புவ னேஸ்வரரைத் தரிசியுங்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment