Wednesday, 19 June 2019

தனித்தன்மை பெற்ற தமிழக கோவில்கள்.!!

தனித்தன்மை கொண்ட விஷேசமான கோவில்கள் நிறைய இருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள தனிச்சிறப்பு பெற்ற கோவில்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

தமிழக அளவில் பல்வேறு இடங்களில் தனித்தன்மை கொண்ட விஷேசமான கோவில்கள் நிறைய இருக்கின்றன. அவை, ஆகம விதிமுறைகளை அனுசரித்து இடம், வடிவமைப்பு, மூல மூர்த்தம், பரிவார தேவதைகள், விமானம், ராஜகோபுரம் உள்ளிட்ட அமைப்புகள் சார்ந்தும், நிறைய உள்ளர்த்தங்கள் மற்றும் சமூக நலன் ஆகியவற்றை முன்னிட்டும் தனித்தன்மையுடன் நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள தனிச்சிறப்பு பெற்ற கோவில்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

நாச்சியார் கோவிலில், திருவீதி உலா காலங்களில் கல்கருடனை முதலில் 4 பேர் தூக்குவார்கள். அதன் எடை அதிகமாவதன் அடிப்படையில், படிப்படியாக 8, 16 என்று ஆட்கள் அதிகரித்து, கோவில் வாசலுக்கு மீண்டும் வரும்போது 64 பேர் தூக்கி வருவார்கள். அப்போது கல் கருடனின் முகத்தில் வியர்வை துளிகள் இருப்பதை காண முடியும்.

உற்சவருக்கு பதிலாக மூலவரே திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் தலம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆகும்.

தர்மபுரியில் உள்ள மல்லிகார்ஜுனர் கோவிலில் நவாங்க மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள இரு தூண்கள் பூமியைத் தொடாமல் நிற்பது ஆச்சரியமான கட்டமைப்பாகும்.

கும்பகோணம் அருகே திருநல்லூர் கோவிலில் உள்ள சிவலிங்கம், ஒரே நாளில் ஐந்து முறை பல வண்ணங்களில் நிறம் மாறுவதால் அவருக்கு ‘பஞ்சவர்ணேஸ்வரர்’ என்ற பெயர் வழங்கப்படுகிறது.

கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில், இரட்டை நடராஜரை பக்தர்கள் வணங்கி மகிழலாம்.

கும்பகோணம் அருகே உள்ள வெள்ளியங்குடி தலத்தில் கருடாழ்வார் அவரது நான்கு கரங்களில், இரண்டு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி காட்சி தருகிறார். 108 திவ்ய தேசங்களில் அந்த தலத்தில் மட்டுமே கருடாழ்வாருக்கு இந்த சிறப்பு உள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் உருவத்தை உருவாக்க கல் அல்லது இதர உலோகங்களை பயன்படுத்தாமல், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருட்கள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, கடையம் அருகே உள்ள நித்ய கல்யாணி சமேத விஸ்வநாதர் கோவிலில் உள்ள வில்வ மரத்தின் காய்கள் லிங்க வடிவில் காய்ப்பதாக சொல்லப்படுகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment