எம்பெருமானும், பார்வதியும் கயிலாயத்தில் தனித்திருந்தார்கள். அச்சமயம் பூலோகம் பற்றிய பேச்சு திரும்பியது. பார்வதி தேவிக்கு ஒரு சந்தே கம். தாங்களிடம் ஒன்று கேட்கலாமா என்றாள். அதனாலென்ன தேவி அறியாத விஷயம் என்று இருக்கிறதா என்ன என்று கேட்டார் சிவபெருமான்.
பூலோகத்தில் உங்கள் பக்தர்கள் அன்றாடம் பூஜை, விரதங்கள் என்று உங்கள் நாமத்தை சொல்லியபடி இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களா? அவர்கள் கேட்டதையெல்லாம் தருகிறீர்களா? என்று கேட்டாள்.
அவரவர்களுக்கு விதிக்கப்பட்டதை தடுத்து நிறுத்தாமல் உள்ளபடியே அளித்துவருகிறேன். ஆனால் திடீரென்று உனக்கு ஏன் இந்த சந்தேகம் என்று கேட்டார். பக்தர்கள் உங்களிடம் மனம் உருகி வேண்டும் போது உங்களுக்குள் இருக்கும் எனக்கும் செவி வழியாக கேட்கிறது. ஒருவர் கூட இறைவா நீ கொடுத்ததற்கு நன்றி. என்றோ போதும் என்றோ சொன்னதாக தெரியவில்லையே. ஆக நீங்கள் யாரையும் திருப்திபடுத்தவில் லையோ என்ற சந்தேகம் எனக்கு. அதனால் தான் கேட்டேன் என்றாள் பார்வதி தேவி.
மனிதர்களின் ஆசையை அவ்வளவு சீக்கிரம் அடக்க முடியுமா தேவி? எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி படாத அவர்களது குணத்தை என்னால் எப்படி மாற்ற முடியும் என்றார். ஆனால் இறைவனின் இந்த பதிலில் தேவியே திருப்தி அடையவில்லை.
எம்பெருமானுக்கு அம்மையாரின் மெளனம் புரிந்துவிட்டது. பதில் கூறுவதை விட உனக்கு நேரில் காட்டுவதுதான் கன பொருத்தமாக இருக்கும் என்றவர் பார்வதி தேவியை அழைத்துக்கொண்டு பூலோகம் வந்தார். பூலோகத்தில் நல்லவர்கள் மட்டுமே வாழும் புண்ணிய பூமி ஒன்று இருந்தது. சொர்க்கபுரி என்னும் பெயரைக் கொண்ட அந்த ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் தர்மம் தவறாமல் வாழ்ந்துவந்தார்கள்.
இறைவனது திருநாமத்தை மறவாமல் வாழ்ந்து வந்த அம்மக்கள் தேவதைகளிடம் நேரிடையாக பேசும் அபூர்வசக்தியையும் கொண்டிருந்தார் கள். சிவபெருமான் அந்த தேவதைகள் மூலம் அம்மக்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றி பேச வைத்தார். அதாவது அக்கோயிலில் ஒரு குறிப்பிட்ட தினத்தில் பானை நிறைய தங்கக்காசுகளை இறைவன் வைத்திருப்பார். வேண்டுபவர்கள் அள்ளி செல்லலாம்.அள்ள அள்ள குறையாமல் வரும் என்பதால் அனைவருக்குமே தங்ககாசுகள் கிடைக்கும். ஆனால் ஒருவர் ஒருமுறை மட்டுமே எடுக்க முடியும் என்று தேவதை கூறியது. மக்களும் மகிழ்ச்சியாக அந்த நாளுக்காக காத்திருந்தார்கள்.
அந்த நாள் வந்தது. சிவனும் பார்வதியும் வேடமிட்டு ஆலயத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள். மக்கள் அனைவரும் வரிசையாக நின்று இரு கைகளையும் பானைக்குள் விட்டு தங்க காசுகளை அள்ளி சென்றார்கள். எல்லோர் முகத்திலும் சந்தோஷம் தாண்டி ஒரு ஏக்கமும் தெரிந்தது. தங்கம் அள்ளி வந்தவர்கள் வேடமிட்டிருந்த பார்வதி பரமேஸ்வரனை நாடி வந்தார்கள். ஏன் உங்களுக்கு தங்கம் வேண்டாமா? என்று கேட்டார் கள்.
வயது முதிர்ந்த காலத்தில் அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்ய போகிறோம் என்றவர்கள் இறைவனது அருளால் தங்ககாசுகள் கிடைத்த மகிழ்ச்சியே உங்கள் முகத்தில் இல்லையே. ஏன் ஒருவித ஏமாற்றம் தெரிகிறது என்று கேட்டாள். இறைவன் கொடுத்தது சந்தோஷம் தான் ஆனால் பானையின் வாய் சின்னதாக இருப்பதால் கைமுழுவதும் அள்ளி எடுக்க முடியவில்லை என்று சலித்தப்படி சென்றார்கள்.
சிவன், பார்வதியை நோக்கினார். புண்ணிய பூமியில் வசிக்கும் மக்களே இப்படி ஆசைப்படும் போது மற்றவர்களைப் பற்றி சொல்லவே வேண் டாம். எப்போதும் ஏதாவது ஒரு தேவையை நோக்கி ஓடிக்கொண்டேயிருக்கும் மனிதர்களிடம் நான் தான் பாடுபடுகிறேன் தேவி என்றார். ஆம் நீங்கள் சொல்வதும் உண்மைதான் என்று ஒப்புக்கொண்டாள் பார்வதி தேவி.
கிடைத்ததை வைத்து திருப்தியாக வாழ்ந்தால் இறைவனும் மகிழ்ச்சியுடன் ஆசிர்வதிப்பார். ஆனால் ஆசை யாரை விட்டது என்கிறீர்களா? அதுவும் சரிதான்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment