மகிழ்ச்சியாக இருப்பதைத்தான் எல்லோரும் விரும்புகிறோம். மகிழ்ச்சியில் சுயநலமில்லாமல் இருந்தால் ஆகச் சிறந்த மகிழ்ச்சியாக மாறிவிடும். ஆனால் எல்லோரையும் விட நான் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லாதது. அக உலகிலும், புற உலகிலும் பிறரைச் சார்ந்தே நமது வாழ்க்கை இயங்குகிறது. இயங்கிக்கொண்டிருக்கிறது. இதைப் புரிந்து அனைவரோடும் ஒன்று பட்டு வாழவேண்டும் என்பதை உணர்த்தும் கதையைப் பார்க்கலாம்.
மார்க்கண்டேய புராணத்தில் மார்க்கண்டேயர் இதைப் பற்றி சொல்லியிருப்பார். ராஜ்ய வர்த்தனன் என்னும் அரசன் 7000 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். அது எப்படி அவ்வளவு ஆண்டுகள் உயிரோடு இருக்க முடியும் என்று கேட்காதீர்கள். புராணக் கதைகளில் இதெல்லாம் சாத்தியமே. கதை என்ன சொல்கிறதோ அதுதான் நமக்கு முக்கியம்.
ஒருமுறை அரசர் ராஜ்யவர்த்தனன் ஓய்வு நேரத்தில் தலையில் எண்ணெய் தேய்த்துக்குளிக்க அமர்ந்தார். அவரது மனைவி அரசனுக்கு எண்ணெய் தேய்க்கு போது முடி ஒன்று நரைத்ததைக் கண்டு அழுது அரற்றினாள். என்னவாயிற்று என்றான் அரசன். தாங்களுக்கு வயசாகிவிட்டது என்று அழுதாள். அதனாலென்ன? யமதர்மன் என்னை அழைத்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதனால் எஞ்சியுள்ள வாழ்க்கையை ஆன்மிகத்தில் கழிக்க விரும்புகிறேன் என்றான். அப்படியே செய்யுங்கள். உங்களுடன் நானும் வருவதே தர்மம். அதனால் நானும் வருகிறேன் என்றான்.
சரி என்று சம்மதித்த அரசன் மக்களை கூட்டி தாங்கள் இருவரும் துறவறம் மேற்கொள்ள போவதாக கூறினான். அரசனும், அரசியும் காட்டுக்கு போய்விட்டால் எங்களை யார் காப்பாற்றுவார்கள் என்று கேட்டார்கள். பிறகு நாங்கள் வரும்வரை நீங்கள் துறவறம் மேற்கொள்ள கூடாது என்று கோரிக்கை விடுத்து காட்டை கடந்து சூரியபகவானின் ஆலயத்துக்குச் சென்று தவம் புரிய தொடங்கினார்கள். நீண்ட நாள்களுக்குப் பிறகு அவர்களது தவத்தை மெச்சிய சூரிய பகவான் அவர்கள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்?
எங்கள் அரசர் இன்னும் 10 ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்றார்கள். அப்படியே உண்டாகட்டும் என்றார் சூரியபகவான். மக்கள் மகிழ்வோடு அரண்மனைக்குத் திரும்பி அரசனிடம் நடந்ததைக் கூறினார்கள். ஆனாலும் அரசன் முகத்தில் எவ்வித மலர்ச்சியும் இல்லை. காரணத்தைக் கேட்ட மகாராணியிடம் நான் மட்டும் வாழ்ந்து என்ன செய்ய போகிறேன். நீயும் மக்களும் இல்லாத வாழ்வு எனக்கு தேவையில்லை என்றார் அரசர்.
பிறகு மீண்டும் அரசரும் அரசியாரும் சூரிய பகவான் ஆலயத்துக்குச் சென்று தவம் புரிந்தார்கள். அவர்களது தவத்தை மெச்சிய சூரிய பகவான் அவர்கள் முன் தோன்றி வேணிடிய வரம் யாது என்று கேட்டார்? அரசன், நாட்டில் அனைவருமே 10 ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதற்கு தாம் வரமளிக்க வேண்டும் என்று சூரியபகவானிடம் வேண்டினார்.
உம்முடைய மகிழ்ச்சியை மட்டும் மனதில் கொள்ளாது அனைவரது மகிழ்ச்சியிலுமே உமது மகிழ்ச்சி கலந்திருப்பதை உறுதி செய்த ராஜ்யவர்த்தனா நீ மகிழ்ச்சியோடு கேட்டதை நானும் மகிழ்ச்சியோடு அளிக்கிறேன் என்றார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment