Monday, 29 April 2019

இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்.!!

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் படைப்புகளையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

ராஜசூய யாகம்

மாபெரும் மன்னர்களால் நடத்தப்படும் ஒரு வகையான வேள்விக்கு ‘ராஜசூய யாகம்’ அல்லது ‘ராஜசூய வேள்வி’ என்று பெயர். தான் ஒரு மாபெரும் மன்னன் என்று, மற்ற மன்னர்களுக்கு தெரிவிப்பதற்காகவும், புதியதாக நாட்டிற்கு பதவி ஏற்றுக்கொள்ளும் போதும், போரில் வெற்றி பெற்றபின் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த வேள்வியை அரசர்கள் செய்திருக்கிறார்கள். குருசேத்திரப் போரில் வெற்றி பெற்ற பின் பாண்டவர்களால் ராஜசூய யாகம் நடத்தப்பட்டதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சப்த ரிஷிகள்

வேதங்களையும், சாஸ்திரங்களையும் நன்கு அறிந்து வைத்திருப்பவர்களே சப்த ரிஷிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ‘மன்வந்திரத்திற்கும்’ சப்த ரிஷிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். தற்போது நடைபெறும் வைவஸ்தவ மன்வந்திரத்தின்படி, அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், காசியபர், ஜமதக்னி, பரத்வாஜர், கவுதமர் ஆகிய 7 பேரும் சப்த ரிஷிகளாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பிரம்மதேவரின் பிள்ளைகள் என்றும், பிறப்பு இறப்புகளைக் கடந்தவர்கள் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        _என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment