நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வரலாற்று சிறப்பு வாய்ந்த அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் அதிகம் நிறைந்தவையாகும். இவ்விரு மாவட்டங்களிலும் உள்ள பல வழிபாட்டுத்தலங்கள் குறித்த பெருமைகளை வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ள உதவும் பகுதி இது. இந்த வாரம் நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாச சுவாமி கோயில்
தல சிறப்பு:
நவ கைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனகாப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விமலை சக்தி பீடமாகும். கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம். உலகம்மைக்கு அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால் திருமண, புத்திர பாக்கியம் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என நம்புகின்றனர். சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்தலாம்.
மூலவர்: பாபநாச நாதர்
தாயார்: உலகம்மை
புராண பெயர்: இந்திரகீழ சேத்திரம்
திருவிழா: சித்திரை மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவம், சித்திரைப்பிறப்பன்று அகத்தியருக்கு இறைவன் திருமணக்காட்சி, தைப்பூசம்.
திறக்கும் நேரம்: அதிகாலை 5.30 மணி முதல் 1 மணி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
தொடர்பு எண்: 04634 223268
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment