Tuesday, 30 April 2019

இன்றைய ஆன்மிகக் கதை.!!

மனிதன் மிக நீண்ட நெடிய காலம் இந்தப் பூமியில் வாழப்போவதில்லை. ஆனாலும் பார்க்கும் அத்தனையும் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் எனும் எண்ணம் வந்து விடுகிறது. இருக்கும் காலம் வரை கிடைக்கும் பொருள்களை முறையாக குறிப்பாக ஆசையின்றி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் கதை இது.

நீதி நெறி தவறாத அரசன் ஒருவன் இருந்தான். அவனது ஆட்சியில் மக்கள் அனைத்து பேறுகளையும் பெற்று சிறப்பாக வாழ்ந்திருந்தார்கள். ஒரு முறை முனிவர் ஒருவர் அந்த நாட்டுக்கு வந்திருந்தார். அரச மரத்தடியில் அமர்ந்திருந்த அவரை மக்கள் அனைவரும் சந்தித்து ஆசிபெற்றார்கள். அரசனும் அவரிடம் ஆசி பெற்று சில நாட்களாவது அரண்மனையில் வந்து தங்கிச்செல்ல வேண்டும் என்று வேண்டினான். அவன் மனதுக்குள் ஒரு எண்ணம் இவர் எங்கே வரப் போகிறார். எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர் ஆயிற்றே என்று எண்ணினான். அரசனின் மனதை உணர்ந்து கொண்ட முனிவர் அரசனுக்கு பாடம் கற்றுதரவேண்டும் என்று புன்னகையுடன் அரண்மனைக்கு வருவதாக வாக்களித்தார்.
“சரி அரசே! நீ போய் உன் ரதத்தை அனுப்பி வை. அரண்மனைக்குப் போகும் போது ஆடம்பரமாக போகவேண்டுமே” என்றார். இவர் என்ன உண்மையான துறவியா? என்று நினைத்தான் அரசன். ஆனாலும் பதில் பேசாமல் அவர் கேட்கும் அனைத்தையும் செய்தான். அரண்மனையிலும் துறவியின் ஆட்டம்  தாங்கவில்லை. நினைத்த நேரங்களில் நினைத்த உணவை வரவழைத்து சாப்பிட்டார். எளிமை யான வாழ்க்கையை வாழ்பவர் என்றால் நம்மை விட உயர்ந்த உணவுகளை தங்க தட்டில் உண்டு,  உயர்ந்த ஆடைகளை அணிந்து, அரண்மனையை உலா வந்து மாமன்னரை போல் சுற்றிக்கொண்டிருந்தார். துறவியின் முகத்தில் அளவுக்கதிகமான மகிழ்ச்சி தாண்டவமாடியது. இதையெல்லாம் பார்த்த அரசனின் முகத்தில் ஒருவித ஆச்சரியமும் கோபமும் உண்டானது.
ஒருநாள் துறவி உணவை  ரசித்து கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த அரச னை அழைத்து  “நீ ஏதோ யோசனையில்  இருக்கிறாய்? முன்பு போல் என்னிடம் பேசுவதுமில்லை. உனக்கு என் மீது கோபம் இருந்தால் நேரிடையாக கேளேன்” என்றார்.
அரசன் தயங்கியபடி “நீங்கள் முற்றும் துறந்த துறவி. நான் மிகப்பெரிய அரசன். எளிமையான வாழ்க்கையை வாழ்ந்ந்து கொண்டிருக்கும் நீங்கள் அரண்மனைக்கு வந்ததும் என்னைவிட சொகுசான வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறீர் களே? அது எப்படி? நீங்கள்  உண்மையிலேயே துறவு வாழ்க்கை மேற்கொள்கிறீர் களா?” என்றார்.. 

துறவி “என்னுடன் வா சொல்கிறேன்” என்று அரசனை அழைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியே வந்தார்.  “இனிமேல் நான் அரண்மனைக்கு வரமாட்டேன். நீ எப்படி என்னுடன் வருகிறாயா அல்லது அரண்மனைக்கு போகிறாயா?” என்றார்.  கேள்விக்கு பதில் சொல்லாமல் இது என்ன என்று யோசித்தாலும் வெகு இயல்பாக “நான் எப்படி உங்களுடன் வரமுடியும். என் மனைவி, மக்கள், பிள்ளை செல்வங்கள், அரசப்பதவி எல்லாத்தையும் விட்டு வரமுடியுமா?” என்று கேட்டான்.
“இதுதான் உனக்கும் எனக்கும் இருக்கும் வித்தியாசம். அரண்மனையில் இருக்கும் போது அங்கிருந்த பொருள்கள் எல்லாவற்றையும் உபயோகப்படுத்துபவனாக இருந்தேன். ஆனால் ஒன்றையும் எனக்கு சொந்தமாக்கி கொள்ளவில்லை. நீ எல்லாவற்றையும் உன்னுடையதாக சொந்தம் கொண்டாடுகிறாய். அதனால்தான் அவற்றைப் பிடித்துக்கொண்டு விடுபடமுடியாமல் தவிக்கிறாய். இதுதான் உனக்கும் எனக்கும் இருக்கும் வேறுபாடு” என்றார். புரியாதது புரிந்த நிம்மதியில் அரசன் திரும்பி நாடு செழிக்க ஆட்சிபுரிந்து உரிய நேரத்தில் சந்நியாசம் மேற்கொண்டார்...
 
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment