Tuesday, 30 April 2019

ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டிய விரத வழிபாடு.!!

ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் தினமும் சில விரத வழிபாடுகளை முறையாக செய்து வந்தால் அதன் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

தினசரி விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும். செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்ற வேண்டும்.

தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி விரதம் இருந்து வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் விரதம் இருந்து வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

உடலுக்கு நன்மை தரும் உபவாசம்.!!

உணவின் மீது ஆசைப்படும் நாம், ஒரு நாளேனும் விரதமிருந்து வந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள்.

ஆசைகளை விட்டொழித்தால் அமைதி காணலாம் என்பது முன்னோர் வாக்கு. உணவின் மீது ஆசைப்படும் நாம், ஒரு நாளேனும் விரதமிருந்து வந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள். 

அன்றைய தினம் முழுவதும் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதால் அவை புத்துணர்ச்சியும், பலமும் பெறுகின்றன. ஆரோக்கியம் உருவாகிறது. வியாதிகளை வெளியேற்றுகிறது. 

விரதம் முடிந்து மறுநாள் உணவு உண்ணும் பொழுது, குடல் உறிஞ்சிகளால் ஜீரணிக்கப்பட்டு செரிமானம் பூரணமாக அடைந்து ஆரோக்கியத்திற்கு வித்திடுகிறது. பலத்தையும் கொடுக்கிறது. அதேநேரத்தில் உபவாசம் இருக்கும் நாளில் இறைவனது நாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருப்பதால், பக்தி உணர்வு மேம்படுகிறது. 

இறைவனது அருளிற்கும் பாத்திரமாக மாறுகிறோம். எனவேதான் முற்காலத்தில் வாழ்ந்த முனிவர்கள் இந்தப் பயிற்சியின் மூலம் அற்புதமான சக்தியைப் பெற்றுப் பல ஆச்சரியப்படத்தக்க சம்பவங்களை நடத்திக் காட்டினார்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

நம்பியவர்களை காத்தருளும் நம்பு நாயகி திருக்கோவில்.!!

ராமேஸ்வரத்தில் உள்ளது நம்பு நாயகி திருக்கோவில். ராமேஸ்வரத்தில் பெரும்பாலான மக்களின் குலதெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள்.

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவில் புனித தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. ராமபிரான் வழிபட்ட தலம் என்பதால் இந்தச் சிறப்பு. இதே ராமேஸ்வரத்தில் மற்றொரு ஆலயமும் சிறப்பாக அமைந்திருக்கிறது. அது ராமேஸ்வரம் நம்பு நாயகி திருக்கோவில். இவள் ராமநாத சுவாமி ஆலயத்தில் பரம்பரை அர்ச்சகர்களாக இருக்கும் மராட்டிய அந்தணர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவள். அதுமட்டுமின்றி ராமேஸ்வரத்தில் பெரும்பாலான மக்களின் குலதெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள்.

தலவரலாறு :

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் தீவில் உள்ள இந்தப் பகுதி, தாழை மரங்கள் நிறைந்த வனமாக விளங்கியது. ஒரு சமயம், விறகு வெட்டுபவர் இங்குள்ள தாழை மரங்களை வெட்டும் போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டு வந்தது. உடனே அவர் பயந்து போய் ஊர்மக்களை அழைத்து வந்தார்.

அப்போது ஒருவருக்கு அருள் வந்தது. அவர் “இந்தப் பகுதியில் நான் தாழைவன அம்மனாக பூமியில் மறைந்துள்ளேன். என்னை வெளியில் எடுத்து கோவில் அமைத்து வழிபடுங்கள். நான் உங்களைக் காத்தருள்வேன். என்னை நம்புங்கள்” என்றார்.

அதன்படியே அப்பகுதி மக்கள், அன்னையைப் பூமியில் இருந்து தோண்டி எடுத்தனர். ரத்தம் பீறிட்ட இடத்தில் விரலிமஞ்சளை வைத்து பூசினர். ரத்தம் நின்றது. இதன்பின் அன்னைக்குச் சிறுகூரையில் கோவில் அமைத்து வழிபாடு செய்தனர். அது முதல் அப்பகுதி மக்கள் எவ்வித குறையுமின்றி வாழ்ந்து வந்தனர்.

ஆலய அமைப்பு:

கிழக்கு நோக்கிய ஆலயம், சுற்றிலும் மணல் திட்டுகள், மரங்கள் என இயற்கை எழிலாக அமைந்துள்ளது. ஆலயத்தின் கிழக்கே விநாயகர், நாக நாதர் மற்றும் பனைமரத்து காளியம்மன் பீடம், சங்கிலிக் கருப்பன் பீடம், ரெட்டைத்தாழை முனீஸ்வரர் பீடம், தலமரமான வேப்பமரம் அமைந்துள்ளன. வடக்கே தலத் தீர்த்தம், கருப்பண்ணசுவாமி, ஐயனார், ராக்காயியம்மன், பேச்சியம்மன், கருப்பாயியம்மன், இருளாயியம்மன், ஆலமரத்தின் கீழ் தர்ம முனீஸ்வரர் அருள்புரிகிறார்கள். தெற்கே இருளப்ப சுவாமி பீடம், மாடசுவாமி பீடம் ஆகியன அமைந்துள்ளன.

ஆலயத்திற்குள் நுழைந்ததும், முன்மண்டபம் அதன் உள்ளே கருவறை முன்மண்டபம், விநாயகர் மற்றும் செண்பகப் பெருமாள் சன்னிதிகளும், கருவறைக் காவலர்களாக ஆண் பூதமும் மற்றும் பெண் பூதமும் காவல்புரிகின்றன.

கருவறைக்குள் இரண்டு அம்மன்கள் காட்சி தருகின்றனர். பழமையான தாழைவன ஈஸ்வரியும், நடுநாயகமாகச் சுதைவடிவில் அலங்கார அம்மனும் இருக்கின்றனர். இதன் அடியில், பழைய சுதையம்மன் மறைந்துள்ளது.

இத்தல அம்மன், ‘தாழைவன ஈஸ்வரி’ என்று அழைக்கப்பட்டாலும், ‘நம்பு நாயகி’ என்றே அனைவராலும் போற்றப்படுகின்றாள். தன்னை நாடி வருவோருக்கும் குழந்தைப்பேறு வழங்குவதில் கண்கண்ட தெய்வமாக இவள் விளங்குகின்றாள்.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன், தஞ்சையை ஆண்ட மன்னனின் மகனுக்கு உடல் முழுவதும் கொப்பளங்கள் தோன்றி வாட்டியது. மன்னன் தஞ்சை பிரகதீஸ்வரரிடம் மனமுருகி வேண்டினார். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. “ராமேஸ்வரம் தீவில் உள்ள தட்சிண காளியிடம் சென்று வந்தால் குணம் பெறலாம்” என்றது.

அதன்படி இங்கு வந்து, அம்மன் முன்பு மகனைக் கிடத்தி, மனமுருகி வேண்டி நின்றான் மன்னன். கருணை தெய்வமான தட்சிணகாளி அங்கு தோன்றினாள். தன் சூலாயுதத்தை பூமியில் வீச அங்கு ஒரு தடாகம் தோன்றியது. அதில் குளித்த மன்னனின் மகன் நலம்பெற்றான்.

இக்கோவிலை ராமநாதபுரம் வெள்ளாளர் மரபினர், ஏழாவது தலைமுறையாகப் பூஜை செய்து வருகின்றனர். கி.பி. 1830-ல் இந்தக் கோவிலின் நிர்வாகத்தை ராமநாதபுரம் சமஸ்தானத்திடம் ஒப்ப டைத்து விட்டு, பூஜைகளை மட்டும் செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் தற்போது இந்து சமய அற நிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

அமைவிடம் :

ராமேஸ்வரம் தீவில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் இருந்து தெற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில், தனுஷ்கோடி செல்லும் சாலையில், புதுரோடு பகுதி யில் இந்தக் கோவில் அமைந்துள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்.!!

ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம். 

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலா சக்ராய தீமஹி
தன்னோ: சக்ர ப்ரசோதயாத்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சுக்ரீவனுக்கு உதவிய ராமர்.!!

சுக்ரீவனுக்கு ராமனின் நட்பு கிடைத்தது, சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்ட ராமர் உதவிய கதையை அறிந்து கொள்ளலாம்.


கிஷ்கிந்தையை ஆட்சி செய்து வந்த வானர அரசன் வாலியின் சகோதரன் சுக்ரீவன். ஒருமுறை வாலி, அசுரன் துன்துபி என்பவனோடு சண்டையிட்டான். ஒரு குகைக்குள் சென்ற அந்த அசுரனை பின் தொடர்ந்து சென்றான் வாலி. அப்போது வெளியே தம்பி சுக்ரீவனை காவலுக்கு வைத்தான். நீண்ட நாள் ஆகியும் வாலி வெளியில் வரவில்லை. 

அதனால் அண்ணன் இறந்து விட்டதாக கருதி, பெரிய பாறையால் அந்த குகையை மூடிவிட்டு அரண்மனை திரும்பினான் சுக்ரீவன். பின்னர் அரசனாக பதவி ஏற்று நாட்டை ஆட்சி செய்து வந்தான். இந்த நிலையில் அந்தக் குகையில் இருந்து வெளியே வந்த வாலி, தன் தம்பி அரசாட்சி செய்வதை அறிந்து, அவன் தன்னை வேண்டுமென்றே ஏமாற்றிவிட்டதாக கருதி, நாட்டை விட்டே துரத்தி விட்டான். அதோடு சுக்ரீவனின் மனைவியையும் தன்னோடு வைத்துக் கொண்டான்.

பின்னாளில் சுக்ரீவனுக்கு ராமனின் நட்பு கிடைத்தது. அவர் மூலமாக வாலியை அழிக்க சுக்ரீவன் எண்ணினான். அதன்படியே வாலியை சண்டைக்கு அழைக்கும்படி சுக்ரீவனிடம், ராமன் கூறினார். இருவரும் வெட்ட வெளியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த ராமர், வாலியின் மீது அம்பு விட்டு அவனை கொன்றார். அதன்பிறகு, சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். பின்னர் நன்றிக் கடனாக தன்னுடைய சேனைகளை ராமனுக்குக் கொடுத்து ராவண யுத்தத்திற்கு துணை நின்றான்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

இன்றைய ஆன்மிகக் கதை.!!

மனிதன் மிக நீண்ட நெடிய காலம் இந்தப் பூமியில் வாழப்போவதில்லை. ஆனாலும் பார்க்கும் அத்தனையும் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் எனும் எண்ணம் வந்து விடுகிறது. இருக்கும் காலம் வரை கிடைக்கும் பொருள்களை முறையாக குறிப்பாக ஆசையின்றி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் கதை இது.

நீதி நெறி தவறாத அரசன் ஒருவன் இருந்தான். அவனது ஆட்சியில் மக்கள் அனைத்து பேறுகளையும் பெற்று சிறப்பாக வாழ்ந்திருந்தார்கள். ஒரு முறை முனிவர் ஒருவர் அந்த நாட்டுக்கு வந்திருந்தார். அரச மரத்தடியில் அமர்ந்திருந்த அவரை மக்கள் அனைவரும் சந்தித்து ஆசிபெற்றார்கள். அரசனும் அவரிடம் ஆசி பெற்று சில நாட்களாவது அரண்மனையில் வந்து தங்கிச்செல்ல வேண்டும் என்று வேண்டினான். அவன் மனதுக்குள் ஒரு எண்ணம் இவர் எங்கே வரப் போகிறார். எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர் ஆயிற்றே என்று எண்ணினான். அரசனின் மனதை உணர்ந்து கொண்ட முனிவர் அரசனுக்கு பாடம் கற்றுதரவேண்டும் என்று புன்னகையுடன் அரண்மனைக்கு வருவதாக வாக்களித்தார்.
“சரி அரசே! நீ போய் உன் ரதத்தை அனுப்பி வை. அரண்மனைக்குப் போகும் போது ஆடம்பரமாக போகவேண்டுமே” என்றார். இவர் என்ன உண்மையான துறவியா? என்று நினைத்தான் அரசன். ஆனாலும் பதில் பேசாமல் அவர் கேட்கும் அனைத்தையும் செய்தான். அரண்மனையிலும் துறவியின் ஆட்டம்  தாங்கவில்லை. நினைத்த நேரங்களில் நினைத்த உணவை வரவழைத்து சாப்பிட்டார். எளிமை யான வாழ்க்கையை வாழ்பவர் என்றால் நம்மை விட உயர்ந்த உணவுகளை தங்க தட்டில் உண்டு,  உயர்ந்த ஆடைகளை அணிந்து, அரண்மனையை உலா வந்து மாமன்னரை போல் சுற்றிக்கொண்டிருந்தார். துறவியின் முகத்தில் அளவுக்கதிகமான மகிழ்ச்சி தாண்டவமாடியது. இதையெல்லாம் பார்த்த அரசனின் முகத்தில் ஒருவித ஆச்சரியமும் கோபமும் உண்டானது.
ஒருநாள் துறவி உணவை  ரசித்து கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த அரச னை அழைத்து  “நீ ஏதோ யோசனையில்  இருக்கிறாய்? முன்பு போல் என்னிடம் பேசுவதுமில்லை. உனக்கு என் மீது கோபம் இருந்தால் நேரிடையாக கேளேன்” என்றார்.
அரசன் தயங்கியபடி “நீங்கள் முற்றும் துறந்த துறவி. நான் மிகப்பெரிய அரசன். எளிமையான வாழ்க்கையை வாழ்ந்ந்து கொண்டிருக்கும் நீங்கள் அரண்மனைக்கு வந்ததும் என்னைவிட சொகுசான வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறீர் களே? அது எப்படி? நீங்கள்  உண்மையிலேயே துறவு வாழ்க்கை மேற்கொள்கிறீர் களா?” என்றார்.. 

துறவி “என்னுடன் வா சொல்கிறேன்” என்று அரசனை அழைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியே வந்தார்.  “இனிமேல் நான் அரண்மனைக்கு வரமாட்டேன். நீ எப்படி என்னுடன் வருகிறாயா அல்லது அரண்மனைக்கு போகிறாயா?” என்றார்.  கேள்விக்கு பதில் சொல்லாமல் இது என்ன என்று யோசித்தாலும் வெகு இயல்பாக “நான் எப்படி உங்களுடன் வரமுடியும். என் மனைவி, மக்கள், பிள்ளை செல்வங்கள், அரசப்பதவி எல்லாத்தையும் விட்டு வரமுடியுமா?” என்று கேட்டான்.
“இதுதான் உனக்கும் எனக்கும் இருக்கும் வித்தியாசம். அரண்மனையில் இருக்கும் போது அங்கிருந்த பொருள்கள் எல்லாவற்றையும் உபயோகப்படுத்துபவனாக இருந்தேன். ஆனால் ஒன்றையும் எனக்கு சொந்தமாக்கி கொள்ளவில்லை. நீ எல்லாவற்றையும் உன்னுடையதாக சொந்தம் கொண்டாடுகிறாய். அதனால்தான் அவற்றைப் பிடித்துக்கொண்டு விடுபடமுடியாமல் தவிக்கிறாய். இதுதான் உனக்கும் எனக்கும் இருக்கும் வேறுபாடு” என்றார். புரியாதது புரிந்த நிம்மதியில் அரசன் திரும்பி நாடு செழிக்க ஆட்சிபுரிந்து உரிய நேரத்தில் சந்நியாசம் மேற்கொண்டார்...
 
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

திருமணத்துக்கு பத்து பொருத்தங்கள் போதுமா?

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் பூலோகத்தில் இருவரின் ஜாதக அமைப்பும் பொருந்தி இருந்தால் தான் நிச்சயிக்கப்படுகிறது என்பதை அறிவோம். தற்போது காதல் திருமணம் பெருகி வந்தாலும் ஜாதக பொருத்தம் பார்க்கும் பழமையை மட்டும் இந்துக்கள் மறக்கவில்லை. 

திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் இருவரது நட்சத்திரங்கள், ராசி போன்றவற்றைக் கொண்டு பொருத்தம் பார்த்து பொருந்திய பிறகே திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இருமனம் இணையும் திருமணத்தின் இணைவை அவர்களது ஜாதகப் பொருத்தமே தீர்மானிக்கிறது. பெண் பார்க்கும் படலம் முடிந்ததுமே பெற்றோர்கள் எதிர்தரப்பினரிடம் ஜாதகத்தை பரிமாறிக்கொள்கிறார்கள். ஒரு வருக்கொருவர் பிடித்திருந்தாலும் ஜோதிடர் ஜாதகத்தை அலசி பொருத்தங்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்னால்தான் மேற்கொண்டு திருமணம் பற்றிய பேச்சு அடிபடும்.
திருமணத்துக்கு மொத்தம் பத்து பொருத்தங்கள் பார்க்கப்படும். பத்துப் பொருத்தங்கள் இல்லையென்றாலும் முக்கிய பொருத்தங்கள் பொருந்தி வந்தால் மட்டுமே இருவருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிடம் கூறுகிறது. தினப்பொருத்தம், கணப்பொருத்தம், மகேந்திர பொருத்தம், ஸ்த்ரீ தீர்க்க பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப்பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், வாதைப் பொருத்தம் என மொத்தம் பத்து பொருத்தங்கள் பார்க்க வேண்டும். 
இதில் முக்கியமான பொருத்தங்கள் தினபொருத்தம், கணப்பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசி பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம். இவற்றிலும் முக்கியமானது யோனிப்பொருத்தமும், ரஜ்ஜுப்பொருத்தமும். ஒன்று இல்லையென்றாலும் கூட இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க கூடாது. இவர்கள் இருவரின் வாழ்க்கைக்கு  உயிர் நாடி இவைதான்.

இருவரது ஆயுள், ஆரோக்கியம், குணம், குழந்தைபாக்கியம், செல்வம், தாம்பத்யம், வம்சவிருத்தி, இருவரது ராசிக்கும் பகை, இருவருக்குள் அந்நியோன்யம், கணவனுக்கு ஆயுள் பலம், வாழ்வில் நடக்கவிருக்கும் இன்பம், துன்பம் போன்றவற்றை அலசி ஆராய்ந்து தான் மேற்கண்ட பத்து பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தப் பத்து பொருத்தங்கள்  மட்டும் போதாது என்று சொல்லும் பெரியோர்கள் மேலும் சில பொருத்தங்களையும் பார்க்க வேண்டும் என்கிறார்கள்.
ஆண், பெண் ஜாதகங்கள் பலம் வாய்ந்த ஜாதகங்களா என்பதை ஆய்வு செய்வது முக்கியம். இருவருடைய ஆயுளும் பலமாக இருக்கவேண்டும். இல்லறம் சிறக்க தாம்பத்யம் இனிக்க கணவன், மனைவி அந்நியோன்யமாய் வாழ இருவரது ஜாதகத்திலும் சுக்கிரன் நல்ல திசையில் அமர்ந்திருக்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும் நிரந்தரமான திருமண வாழ்க்கைக்கு சனியும், செவ்வாயும் லக்னாதிபதிகளாக இருப்பது அவசியம். இருவரது ஜாதகங்களிலும் குரு வலுப்பெற்று சுக்கிரனைப் போன்று செவ்வாயும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். 
அடுத்தடுத்து வரும் ராசிகளில் இருப்பவருக்கு திருமணம் செய்தால் ஜாதகப்படி சனிதிசை நடக்கும்போது இருவருமே சிரமப்படுவார்கள். மேலும் இருவரது ஜாதகமும் சுத்தமான ஜாதகமா? செவ்வாய் மற்றும் நாகதோஷம் ஏதேனும் உள்ளதா என்றும் பார்க்கவேண்டும். இதன் பிறகு தான் பத்து பொருத்தங்கள் பற்றி பார்க்க வேண்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

படுத்தபடி அருளும் பரமன்.!!

சுருட்டப்பள்ளி


காக்கும் கடவுள் கருணா மூர்த்தியான விஷ்ணு பல இடங்களில் பள்ளிகொண்ட கோலமாக காட்சி அளித்து பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதை பார்த்திருப்பீர்கள்!  ஆனால் ஈசன் பள்ளிகொண்ட நிலையில் எந்த இடத்திலும் அருட்பாலிப்பதை கண்டிருக்க முடியாது. ஆனால் சிவன் பள்ளிகொண்டிருக்கிறார்.  பள்ளிகொண்ட சிவனை காணும் முன் சிவன் எதற்கு பள்ளி கொண்டார் என்று பார்க்கலாம். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதத்தை பெறமுயற்சித்தனர். அப்போது வாசுகியை கயிறாகவும் மந்தார மலையை மத்தாகவும் பயன்படுத்தினர்.
வலி தாங்க முடியாத வாசுகி விஷத்தை கக்க ஆலகால விஷம் பரவியது. தேவர்களும் அந்த விஷத்தின் வெப்பம் கொடுமை தாள முடியாமல் தவித்து சிவனை சரணடைந்தனர்.

அப்போது சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி விஷத்தை திரட்டி எடுத்து வரச்சொன்னார். அவரும் விஷத்தை ஒரு நாவற்பழ வடிவில் திரட்டி எடுத்து வந்தார். அதை சிவன் முழுங்க உடன் இருந்த பார்வதி என்ன காரியம் செய்து விட்டீர்கள் என்று விஷம் உள்ளே இறங்காமல் இருக்க கழுத்தினை பிடித்தாள். விஷம் நெஞ்சோடு நின்றது. சிவன் திருநீலகண்டன் ஆனார். இந்த நிகழ்வே பிரதோஷ கதையாக சொல்லப்படுகிறது. விஷம் பரவிய சமயம் பிரதோஷ காலம் தேவர்கள் இங்கும் அங்கும் ஓடினர். அதை நினைவு படுத்தவே சோமசூக்த பிரதட்சணம் பிரதோஷ காலத்தில் செய்யப்படுகிறது. இப்படி விஷம் உண்ட சிவன் நந்தி மீது நர்த்தனம் புரிந்தார்.பின்னர் பார்வதியுடன் கைலாயம் செல்லும் வழியில் பார்வதியுடன் இந்த தலத்தில் தங்கி ஓய்வெடுத்ததாக கூறப்படுகிறது.   

பார்வதியின் மடியில் தலைவைத்து படுத்திருக்கும் கோலத்தில் சிவன் சுதைச் சிற்பமாகஉள்ளார்.எல்லா ஆலயங்களிலும் சிவன் லிங்க வடிவில் காணப்படுவார். இங்கு தம்பதி சமேதராக சுய ரூபத்துடன் இருப்பது இன்னொரு சிறப்பு.மேலும் இந்த ஆலயத்தில் அனைத்துதெய்வங்களும் தம்பதியராக இருப்பதும் ஒரு சிறப்பு. பிரதோஷம் உருவான தலம் என்றும் முதல் முதலில் பிரதோஷ வழிபாடு இங்குதான் தோன்றியது என்றும் சொல்லப்படுகிறது. சுருட்டப்பள்ளி என்னும் இந்த தலம் சென்னையில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பதி செல்லும் வழியில் ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ளது. இந்த தலத்தில் இறைவன் பள்ளிகொண்டீஸ்வரர் என்று அழைக்கப்
படுகிறார். இறைவி அமுதாம்பிகை என்று வழங்கப்படுகிறார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡