பொங்கல் தினத்தன்று சூரியனைப் பார்த்து நாம் சொல்லி வழிபடும் போது அவரை போற்றும் வகையிலான பாடலைப் பாடி வழிபடுவது நன்மைகளை வாரி வழங்கும்.
பொங்கல் தினத்தன்று சூரியனைப் பார்த்து நாம் சொல்லி வழிபடும் போது அவரை போற்றும் வகையிலான பாடலைப் பாடி வழிபடுவது நன்மைகளை வாரி வழங்கும்.
சுகத்தைக் கொடுக்கும் சூரியா போற்றி!
செல்வம் வழங்கும் செங்கதிர் போற்றி!
பயிர்களை வளர்க்கும் பகலவா போற்றி!
உயிர்களைக் காக்கும் உத்தமா போற்றி!
நலங்களை வழங்கும் ஞாயிறே போற்றி!
குலம் தழைக்க வைக்கும் கோவே போற்றி!
ஆற்றலை வழங்கும் ஆதவா போற்றி!
நவக்கிரகத்தின் நாயகா போற்றி!
நாளும் வரம் தரும் கதிரவா போற்றி!
ஒளியைக் கொடுக்கும் உத்தமா போற்றி!
ஏழு குதிரை பூட்டிய தேரில்
எழிலாய் வலம்வரும் இறைவா போற்றி!
பொங்கல் நாளில் போற்றித் துதித்தோம்!
மங்கல நிகழ்ச்சி மனையில் நடக்கவும்
எங்கும் மகிழ்ச்சி பொங்கிப் பெருகவும்
செல்வச் செழிப்புடன் சிறப்பாய் வாழ்ந்திட
சூரிய தேவே! துதித்தோம் அருள்க!
காரிய வெற்றியைக் கதிரவா தருக!
என்று துதிப்பாடல்களைப் பாடினால் மதிப்பும், மரியாதையும் உயரும். பிரகாசமான எதிர்காலமும் அமையும். இந்த பாடலைப் பொங்கல் தினம் மட்டுமல்லாது, மற்ற கிழமைகளிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது அந்த பாடலைப் படிக்கலாம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
_வாட்சப் ல் இணைய_
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment