உலகில் மிகவும் பழமை வாய்ந்த மதம் இந்துமதம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இங்குதான் கடவுள்களின் அவதாரங்களும் அளவின்றி போற்றப்படுகின்றன. இறை நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் மக்கள் அனைவருமே தங்கள் வாழ்நாளில் புண்ணியங்களைச் சேர்க்கவே விரும்புவார்கள். அப்படி இருக்கும் போது ,அறிந்தும் அறியாமலும் தாங்கள் செய்த பாவங்களைப் போக்க இருக்கும் அத்தனை வழிகளையும் முயன்று விடுவார்கள். அவ்வப்போது வீட்டில் ஹோமங்களும், ஆலய வழிபாடுகளும், குலதெய்வ வழிபாடும், பித்ருக்களுக்கான பூஜைகளும், பண்டிகைகளும் தவறாமல் கொண்டாடுவார்கள். பண்டிகைகளை விமரிசையாக வீட்டில் கொண்டாடும் மக்கள், பொது இடங்களில் கொண்டாடும் பண்டிகைகளும் உண்டு. அதிலும் குறிப்பிட்ட வருடங்களுக்கு இடைவெளியில் குறிப்பிட்ட இடத்தில் உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று திரண்டு இறைவனை நினைத்து வழிபட்டு தங்கள் பாவங்களைப் போக்கி கொள்வது சிறப்பிலும் சிறப்புக்குரியது. அவற்றில் ஒன்று கும்பமேளா. இந்துக்களுக்கு மிக முக்கியமான நிகழ்வு இது. பொது இடத்தில் ஜாதி, மத வேறுபாடின்றி, ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி அனைவரும் இறைவனின் பிள்ளைகளாக கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்வு இது.
இந்தியாவின் வட மாநிலங்களான அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜையினி, நாசிக் ஆகிய ஊர்களின் ஆற்றுப்படுகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மகரசங்கராந்தி அன்று தொடங்கப்படும் இந்த விழா தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறுகிறது, தை மாதம் தொடங்கப்படும் இந்த மேளாவின் முக்கிய நாட்களாக தை மாத பெளர்ணமி, ஏகாதசி, அமாவாசை, ஏகாதசி நாட்களிலும் பிப்ரவரியில் வரும் கும்பசங்ராந்தி, வசந்த பஞ்சமி,ரத சப்தமி, மகாபூர்ணிமா, மகா சிவராத்திரி போன்ற நாட்கள் மேளாவின் முக்கிய தினங்களாக சொல்லலாம். கும்ப மேளா அர்த்த கும்பமேளா, பூரண கும்பமேளா, மஹா கும்பமேளா என கொண்டாடப்படுகிறது.
அர்த்த கும்பமேளா என்பது அலஹாபாத்தில் 6 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும். பூரண கும்ப மேளா என்பது 12 வருடங்களுக்கு ஒருமுறை அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜையினி, நாசிக் ஆகிய நான்கு இடங்களிலும் நடைபெறும்.
மஹா கும்ப மேளா என்பது 12 பூரண கும்ப மேளாக்களுக்கு ஒருமுறை நடக்கும். அதாவது 144 ஆண்டுகள் கழிந்து வரும் மேளாவே மஹா கும்ப மேளா என்று அழைக்கப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இந்த மேளா கொண்டாடப்பட்டுவருகிறது. கும்ப மேளாக்கள் நடத்தப்படும் நாட்கள், கோள்கள் ராசிக்களில் நுழைவதை வைத்து வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. சூரியன் மேஷத்திலும், குருபகவான் பிரகஸ்பதி கும்பராசியிலும் நுழையும்போது கும்பமேளா கொண்டாடப்படுகிறது. ஆனால் மஹா கும்பமேளாவின் போது சூரியன், பிரகஸ்பதி இரண்டுமே சிம்ம ராசியில் பிரவேசிப்பதால் இந்த மேளா மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
தற்போது உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறவிருக்கும் பூரண கும்ப மேளாவுக்கு, உலகின் கடைகோடியிலிருக்கும் பக்தர்கள் முதல் சாதுக்களும், ஆன்மிக அன்பர்களும், யோகிகளும் ஒன்று கூடியிருக்கிறார்கள். மேளாவுக்கு 10 முதல் 12 கோடி வரை மக்கள் பெருந்திரளாக வருவார்கள் என்று கணிக்கப் பட்டுள்ளது. திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கங்கை, யமுனை ஆறுகளும் கண்ணுக்குப் புலப்படாத சரஸ்வதியும் இணையும் இடத்தில் பிரயாக் ராஜில் பக்தர்களின் வருகை அதிகரித்துவருகிறது.
புண்ணிய நதிகளில் நீராடுவது மட்டும் என்றில்லாமல் தினம் தினம் மந்திரங்களும், கடவுளுக்க்கான ஜெபமும், ஹோமங்களும், நடனங்களும், பிரார்த்தனைகளும் என மேளா தொடங்கும் சங்கராந்தி முதல் மார்ச் மாதம் சிவராத்திரி வரை பிரயாக் நாஜ் நகரே தெய்விகத்தன்மை நிறைந்த கடவுளின் இருப்பிடமாக, அதைப் போற்றும் பக்தர்களின் வசிப்பிடமாக மாற தயாராகி வருகிறது என்றால் மிகையில்லை...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
_வாட்சப் ல் இணைய_
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment