Monday, 7 January 2019

திருமண தடை, கால சர்ப்ப தோஷம் போக்கும் கோவில்.!!

ராமநாதபுரம் ஆதி லட்சுமி வராகப் பெருமாள் கோவிலில் திருமண தடை, கால சர்ப்ப தோஷத்திற்கு பிரார்த்தனைகள், பரிகாரங்கள் நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் மாறந்தை என்னும் கிராமத்தில் ஆதி லட்சுமி வராகப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் முக்கியமான 2 பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. 

ஒன்று காலசர்ப்ப தோஷம் நிவர்த்தி, மற்றொன்று திருமணம் கைகூட பெருமாள் மற்றும் தாயாருக்கு மாலை சமர்ப்பித்தல். காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டி தோஷ நிவர்த்தியடைகின்றனர். திருமணம் கைகூட வேண்டுபவர்கள், இரண்டு மாலைகளுடன் திருக்கோவிலுக்கு வர வேண்டும்.

அந்த மாலைகள் பெருமாள் மற்றும் தாயாரிடம் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து ஒரு மாலையைத் திருப்பித் தரப்படும். அதை பத்திரமாக வீட்டில் வைக்க வேண்டும். இந்த பிரார்த் தனையை தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் மேற்கொள்ள வேண்டும். முடிவில் ஆனந்தமான செய்தி உங்களை வந்தடையும்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்- சாயல்குடி இடையில் கடலாடி அமைந்துள்ளது. இங்கிருந்து 8 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment