Monday, 14 January 2019

இன்றைய ராசிபலன் 15/1/2019 தை ( 1 ) செவ்வாய்க்கிழமை.!!

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் எடுத்த வேலை யையும் முழுமையாக முடிக்கமுடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உங்கள் மீது சிலர்வீண்பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் சூட்சு மங்களை உணருவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.  

ரிஷபம்

ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்துப் போகும்.எதிர்மறை எண்ணங்கள் ஏற்
படும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும்.வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப் புகள் அதிகரிக்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். 

மிதுனம்

மிதுனம்: எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக்கும். வெளியூர் பயணங்களால்மகிழ்ச்சி தங்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்
பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கடகம்

கடகம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம்உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாய
மடைவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடு வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தரு வார்கள். முயற்சியால் முன்னேறும் நாள். 

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர் பாராத இடத்திலிருந்து உதவி கள் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.
வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல்செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப் பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். 

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் தொடர் வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம்பேசி சிக்கிக் கொள்ளா தீர்கள். மற்றவர்களுக்காக
உதவி செய்யப் போய் உபத்திரவத்தில்சிக்கிக் கொள்ளாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில்விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். 

துலாம்

துலாம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

தனுசு

தனுசு: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள் உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறி வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மகரம்

மகரம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில்சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதிகிட்டும். உழைப்பால் உயரும் நாள். 

கும்பம்

கும்பம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப்பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர சலுகைகளை அறிவிப் பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். பெருந்தன் மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். 

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்குவரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள். உறவினர், நண்பர்கள் வீடு தேடிவருவார்கள். அழகு, இளமைக் கூடும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

          _வாட்சப் ல் இணைய_

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பிறப்பில்லா முக்தி நிலையை தரும் திரிவேணி சங்கமம் – கும்பமேளா மஹோத்சவ புராண வரலாறு.!!

அனைத்து நீர்நிலைகளும் புண்ணியமானவைதான்.புண்ணியத்திலும் புண்ணியம் பெற்றவை திரிவேணி சங்கமமாய் இணைந்துள்ள கங்கை,யமுனை, சாஸ்வதி இணையும் இடமான அலகாபாத்.இங்கு நீராடுவது மிகப் புனிதமான சடங்கு. அப்படி நீராடும் ஒருவன் தான் ஏழுபிறவியில் செய்த அனைத்து பாவங்களையும் நீங்கி பிறப்பில்லா முக்தி நிலையை அடைவான் என்பது ஐதிகம்.. அது ஏன் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. என்ன காரணம் என்று பார்க்கலாமா?

துர்வாச முனிவர் சிவனிடமிருந்து பெற்ற மாலையை ஐராவதத்தின் மேல்  உட்கார்ந்து வந்த இந்திரனிடம் கொடுத்தார். எப்போதும் ஒரு வித மமதையில் இருக்கும் இந்திரன் அந்த மாலையின் பெருமையையும், துர்வாச முனிவரின் கோபத்தையும் அறியாமல் உதாசினப்படுத்தியபடி அந்த மாலையை தன் யானையிடம் கொடுக்க, யானை காலில் போட்டு மிதித்துவிட்டது. இதைப் பார்த்த துர்வாச முனிவர் கொதித்தெழுந்து விட்டார். “இந்திரனே என்ன காரியம் செய்துவிட்டாய்? பதவியும் செல்வமும் உன்னை ஆணவத்தின் உச்சியில் வைத்திருக்கிறது. இக்கணம் முதல் உன்னிடம் இருக்கும் செல்வம் அனைத்தும் இழந்து நீயும் உன்னை சார்ந்தவர்களும் பராரிகளாக மாறுவீர்கள் என்று சாபமிட்டபடி சென்று விட்டார்.செய்த தவறை உணர்ந்தான் இந்திரன். ஆனால் அதற்குள் தேவலோகத்தில் இருந்தவர்கள் தங்கள் சுகங்களைஇழந்துவிட்டனர். அவர்களிடமிருந்த செல்வங்களும், சுகங்களும் கைவிட்டு நழுவியது. தேவர்களின் இத்தகைய பராரி கோலத்தைக் கண்ட அசுரர்களுக்கு கொண்டாட்டமாகிவிட்டது. எங்கு காணினும் அசுரர்களே இருந்தனர். தேவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. எத்தகைய சாபத்தை பெற்றுவிட்டோம். இனி இதற்கு என்ன தீர்வு என்று தேவர்கள் ஒன்று கூடி யோசித்தபோது கலகத்தின் அதிபதி நாரதரின் நினைவு வந்தது.

எப்போது என்ன விஷயம் கிடைக்கும் கலகத்துக்கு என்று சுற்றி வரும் நாரதர் கண்ணில்பட்டார். அவர் தேவர்களின் நிலையை அறிந்து பாவம் நீங்கள் என்றபடி பிரம்மாவிடம் அழைத்து வந்தார். நடந்ததை கேள்விபட்ட பிரம்மனோ துர்வாச முனிவரின் சாபம் மிகவும் பொல்லாதது, என்னால் இதைத் தீர்த்து வைக்க முடியும் என்று தோன்றவில்லை என்று கைவிரித்துவிட்டார். அவ்வளவு தான் இனி எங்களுக்கு விடிவுகாலமே இல்லையா என்று கண்ணீர்விட்ட தேவர்களுக்கு முக்கலாத்தையும் கட்டிக்காக்கும் கயிலை நாயகனின் நினைவு வந்தது. “துர்வாச முனிவரின் சாபத்தை நீக்குமளவுக்கு என்னால் எதுவும் செய்ய இயலுமா என்றூ தெரியவில்லை. வேண்டுமானால் உலகமும், படைக்கும் தொழிலும் சிறந்து விளங்க பரப்பிரம்மே பல அவதாரங்களை எடுத்து வருவது நாம் அறிந்ததுதான், என்னால் ஒன்று மட்டும் செய்யமுடியும். உங்களுக்கு துணையாக வரமுடியும்” என்றபடி தேவர்களை அழைத்துக்கொண்டு பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த பரந்தாமனிடம் அழைத்துச்சென்றார்.
தேவர்களின் கண்களில் ஓயாமல் வழிந்து கொண்டிருந்த கண்ணிரைக் கண்டு  விஷ்ணுவும் அவர்களுக்கு உதவ வந்தார். உங்களுக்கு செல்வம் வேண்டுமா? இழந்த பலம் வேண்டுமா? மீண்டும் உங்கள் பதவி பலம் பெற வேண்டுமா என்றார். இம்முறை ஏதாவது கேட்டு மாட்டிக்கொண்டால்?,அதனால் தேவர்கள் அனைவரும் இழந்த பலம் கிடைத்தால் போதும் என்றனர். பாற்கடலைக் கடையுங்கள். அதிலிருந்து வரும் அமுதத்தை நீங்கள் சாப்பிட்டால் இழந்த பலம் உங்களுக்கானது, அனைத்தும் கிடைக்கும் என்று கூறினார்.

நமக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்த தேவர்கள் அசுரர்களை சூட்சுமமாக அணுகி அவர்கள் உதவியோடு பாற்கடலை கடைந்தனர். பல இன்னல்களுக்கு பிறகு புனிதம் மிக்க பொருள்கள் உதயமாகின. வந்ததா.... வந்ததா,அமுதம் வந்ததா... என்று வழிமேல் விழி பார்த்து காத்திருந்து கடைந்தெடுத்த தேவர்களை, காக்க வைக்காமல் ஒருவழியாக அமுதகலசத்துடன் வந்த தன்வந்திரி பகவான் கண்ணில்பட்டார்.

இழந்த பலத்தை தரும் அமுதத்தை அசுரர்கள் உண்ணக்கூடாதே.. என்ன செய்வது என்று எண்ணிய மகாவிஷ்ணு மோகினி வடிவில் உருவெடுத்து தன்வந்திரியிடமிருந்த அமுத கலசத்தைப் பறித்துக் கொண்டு ஓடினார். தேவர்கள் செய்வதறியாமல் திகைக்க.. அசுரர்களுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது புரிந்துவிட்டது, மோகினியை ஆவேசமாக துரத்தினர். பன்னிரண்டு இரவு பகலாக அவர்களுக்குள் ஒரு போராட்டமே நடந்துவிட்டது.. தேவர்களுக்கு ஒரு நாள் என்பது  நமக்கு ஒரு வருடம் ஆயிற்றே. அதுபோல் இந்த 12 இரவு பகல் என்பது நமக்கு 12 வருடங்களாகிவிட்டது... போராட்டத்தின் போது கிடைத்ததிலும் அரியத்தக்க அமுதமானது அக்கலசத்திலிருந்து சில துளிகள்  சில இடங்களில் சிந்தி, அந்த இடத்துக்கு சிறப்பு சேர்த்துவிட்டது. 

இந்த அமுதத்துளிகளை தன்னுள் ஏந்தி எண்ணற்ற பக்தர்களின் பாவங்களைப் போக்கி, வேண்டிய அனைத்தையும் தரும் புண்ணிய இடமாக விளங்குகிறது ஹரித்துவார், உஜ்ஜையினி, நாசிக், அலகாபாத் ஆகிய இடங்கள்.. அமுதம் சிந்திய அந்நாளில் தான் கும்பமேளா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அங்குள்ள நீர்நிலைகளில் சிந்திய அமுதத்துளிகள், பொங்கி வழிவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். தேவர்களுக்காக கடைந்தெடுக்கப்பட்ட அமிர்தத்துளிகளைப் பெற்றிருக்கும் சிறப்பு மிக்க புண்ணியத்தலமாக விளங்கும் இடத்தில் நாமும் நீராடி எப்பிறவியும் இல்லா முக்தி அடைவோம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

          _வாட்சப் ல் இணைய_

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

வாழ்வில் இருளை நீக்கும் தைபொங்கல் வழிபாடு.!!

நாம் எத்தனையோ பண்டிகைகளை ஆண்டு முழுவதும் கொண்டாடினாலும் தைப் பொங்கலுக்கு தனிச்சிறப்பு உண்டு. இதற்கு காரணம் பஞ்ச பூதங்களையும், இயற்கையையும் உழைப்பையும், உழைப்பாளிகளையும் போற்றி வணங்குவதற்காக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உழவர் திருநாளாகவும், அறுவடை நாளாகவும் போற்றப்படுகிறது. பொங்கல் பண்டிகை கிராமங்களில் ஒரு வாரம் முழுக்க உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. 

வீட்டில் பெரிய கோலம் வரைந்து புதுப்பானையில் புத்தரிசி இட்டு சர்க்கரை, வெல்லம், முந்திரி, திராட்சை எல்லாம் கலந்து பொங்கல் வைப்பார்கள். கரும்பு, மஞ்சள் கிழங்கு, காய்கறிகள், இளநீர், தென்னம்பாளை ஆகியவற்றை வைத்து சூரிய கடவுளுக்கு படைத்து வழிபடுகின்றனர். மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். அன்றைய தினம் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அன்று அதிகாலையே மாட்டை குளிப்பாட்டி கொம்புகள், கால் குளம்புகளில் வண்ணம் பூசி மஞ்சள், குங்குமம் வைத்து மாலை சூட்டி தூபதீபம் காட்டி பூஜித்து வணங்குவார்கள். 3ம் நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. நகரத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களது உறவினர், நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று விருந்து, விழா என்று குதூகலமாக பொழுதை கழிப்பார்கள்.

பொங்கல் பண்டிகை வடமாநிலங்களில் ‘மகர சங்கராந்தி‘ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அங்கு விதவிதமான பட்டங்கள் பறக்க விடுவது மிகப்பெரிய திருவிழாவாக நடைபெறுகிறது. கடற்கரை, பொது மைதானங்களில், பொதுமக்கள் பெரும் திரளாகக் கூடி போட்டி போட்டு பட்டம் பறக்க விடுகின்றனர். இந்த இனிய தைப் பொங்கல் திருநாளில் இருள் நீங்கி, ஒளி பிறக்கவும் எங்கும் பச்சையும் பசுமையுமாக இருக்கவும், எல்லாம் வல்ல சூரிய பகவானின் அருள் வேண்டி பிரார்த்திப்போம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

          _வாட்சப் ல் இணைய_

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஜாதி, மத வேறுபாடின்றி இறைவனின் பிள்ளைகளாக கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்வு இது.!!

உலகில் மிகவும் பழமை வாய்ந்த மதம் இந்துமதம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இங்குதான் கடவுள்களின் அவதாரங்களும் அளவின்றி போற்றப்படுகின்றன. இறை நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் மக்கள் அனைவருமே தங்கள் வாழ்நாளில் புண்ணியங்களைச் சேர்க்கவே விரும்புவார்கள். அப்படி இருக்கும் போது ,அறிந்தும் அறியாமலும் தாங்கள் செய்த பாவங்களைப் போக்க இருக்கும் அத்தனை வழிகளையும் முயன்று விடுவார்கள். அவ்வப்போது வீட்டில் ஹோமங்களும், ஆலய வழிபாடுகளும், குலதெய்வ வழிபாடும், பித்ருக்களுக்கான பூஜைகளும், பண்டிகைகளும் தவறாமல் கொண்டாடுவார்கள். பண்டிகைகளை விமரிசையாக வீட்டில் கொண்டாடும் மக்கள், பொது இடங்களில் கொண்டாடும் பண்டிகைகளும் உண்டு. அதிலும் குறிப்பிட்ட வருடங்களுக்கு இடைவெளியில் குறிப்பிட்ட இடத்தில் உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று திரண்டு இறைவனை நினைத்து வழிபட்டு தங்கள் பாவங்களைப் போக்கி கொள்வது சிறப்பிலும் சிறப்புக்குரியது. அவற்றில் ஒன்று கும்பமேளா. இந்துக்களுக்கு மிக முக்கியமான நிகழ்வு இது. பொது இடத்தில் ஜாதி, மத வேறுபாடின்றி, ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி அனைவரும் இறைவனின் பிள்ளைகளாக கலந்துகொள்ளும்  முக்கிய நிகழ்வு இது.

இந்தியாவின் வட மாநிலங்களான அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜையினி, நாசிக் ஆகிய ஊர்களின் ஆற்றுப்படுகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மகரசங்கராந்தி அன்று தொடங்கப்படும் இந்த விழா தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறுகிறது, தை மாதம் தொடங்கப்படும் இந்த மேளாவின் முக்கிய நாட்களாக தை மாத பெளர்ணமி, ஏகாதசி, அமாவாசை, ஏகாதசி நாட்களிலும் பிப்ரவரியில் வரும் கும்பசங்ராந்தி, வசந்த பஞ்சமி,ரத சப்தமி, மகாபூர்ணிமா, மகா சிவராத்திரி போன்ற நாட்கள் மேளாவின் முக்கிய தினங்களாக சொல்லலாம். கும்ப மேளா அர்த்த கும்பமேளா, பூரண கும்பமேளா, மஹா கும்பமேளா என கொண்டாடப்படுகிறது. 
அர்த்த கும்பமேளா என்பது அலஹாபாத்தில் 6 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும். பூரண கும்ப மேளா என்பது 12 வருடங்களுக்கு ஒருமுறை அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜையினி, நாசிக் ஆகிய நான்கு இடங்களிலும் நடைபெறும்.

மஹா கும்ப மேளா என்பது 12 பூரண கும்ப மேளாக்களுக்கு ஒருமுறை நடக்கும். அதாவது 144 ஆண்டுகள் கழிந்து வரும் மேளாவே மஹா கும்ப மேளா என்று அழைக்கப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இந்த மேளா கொண்டாடப்பட்டுவருகிறது. கும்ப மேளாக்கள் நடத்தப்படும் நாட்கள், கோள்கள் ராசிக்களில் நுழைவதை வைத்து வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. சூரியன் மேஷத்திலும், குருபகவான் பிரகஸ்பதி     கும்பராசியிலும் நுழையும்போது கும்பமேளா கொண்டாடப்படுகிறது. ஆனால் மஹா கும்பமேளாவின் போது சூரியன், பிரகஸ்பதி இரண்டுமே சிம்ம ராசியில் பிரவேசிப்பதால் இந்த மேளா மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

தற்போது உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறவிருக்கும் பூரண கும்ப மேளாவுக்கு, உலகின் கடைகோடியிலிருக்கும் பக்தர்கள் முதல் சாதுக்களும், ஆன்மிக அன்பர்களும், யோகிகளும் ஒன்று கூடியிருக்கிறார்கள். மேளாவுக்கு 10 முதல் 12 கோடி வரை மக்கள் பெருந்திரளாக வருவார்கள் என்று கணிக்கப் பட்டுள்ளது. திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கங்கை, யமுனை ஆறுகளும் கண்ணுக்குப் புலப்படாத சரஸ்வதியும் இணையும் இடத்தில் பிரயாக் ராஜில் பக்தர்களின் வருகை அதிகரித்துவருகிறது.

புண்ணிய நதிகளில் நீராடுவது மட்டும் என்றில்லாமல் தினம் தினம் மந்திரங்களும், கடவுளுக்க்கான ஜெபமும், ஹோமங்களும், நடனங்களும், பிரார்த்தனைகளும் என மேளா தொடங்கும் சங்கராந்தி முதல் மார்ச் மாதம் சிவராத்திரி வரை பிரயாக் நாஜ் நகரே தெய்விகத்தன்மை நிறைந்த கடவுளின் இருப்பிடமாக, அதைப் போற்றும் பக்தர்களின் வசிப்பிடமாக மாற தயாராகி வருகிறது என்றால் மிகையில்லை...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

          _வாட்சப் ல் இணைய_

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தை 1 அன்று ஏன் பொங்கல் விழாவை கொண்டாடுகிறோம்?

வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவே தான். தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சித்திரை 1, ஆடி, 1 ஐப்பசி 1, தை 1

இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?

“சூரியன் உதிக்கும் திசை கிழக்கு”என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....

ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!

பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...

அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் “சித்திரை 1”. தமிழ் புத்தாண்டு. 

அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் “ஆடி 1”.ஆடி பிறப்பு.

மறுபடியும் கிழக்குக்கு வரும்போது “ஐப்பசி 1”. தீபாவளி.

மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது “தை1”. பொங்கள்.

இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

சித்திரை - புத்தாண்டு. ஆடி 18 ஆடிப்பிறப்பு.

ஐப்பசிஅமாவாசை- தீபாவளி. தை 1 - பொங்கல்.

இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
நமது முன்னோர்கள் “தன்னிகரற்ற” மாபெரும் அறிவாளிகள். மிகவும் மகத்தானவர்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

          _வாட்சப் ல் இணைய_

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

கரும்பு வைத்து வழிபடுவது ஏன்?

பொங்கல் திருநாளில் கரும்பு வைத்துப் படைக்கின்றோம். அது எதற்கு என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பொங்கல் திருநாளில் கரும்பு வைத்துப் படைக்கின்றோம். அது எதற்கு என்று தெரியுமா? கரும்பில் உள்ள சத்துக்கள் கணக்கில் அடங்காதவை. குறிப்பாக மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. மன்மதன் கையில் கரும்பில் செய்யப்பட்ட வில் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். 

அதில் ஒரு மறைமுகமான உண்மை இருக்கிறது. காதல் தேவதைகளாக வர்ணிக்கப்படும் ரதியும், மன்மதனும் தம்பதியர்களுக்கு அறிவுரை சொல்லும் விதத்திலேயே கரும்பு வில் உள்ளது. கரும்பு உயிரணுக்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றது. 

எனவே ஆண்களுக்கு ஆண்மை பெருகவும், வாரிசுகள் பிறக்கவும் இந்தக் கரும்பு ஒரு மருத்துவப் பொருளாகவும், மகிழ்ச்சி தரும் இனிப்புப் பொருளாகவும் இருக்கின்றது. எனவே கரும்பைச் சுவையுங்கள். சமர்த்தான பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். 

கரும்புச் சாறும், இஞ்சிச் சாறும் கலந்து குடித்தால் நன்றாக பசி எடுக்கும். ஈறும், பல்லும் உறுதியாக இருக்க கரும்பைக் கடித்துத் திண்ண வேண்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

          _வாட்சப் ல் இணைய_

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡