ஷிர்டியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டு விட்டது. நீர் தடங்கல்களெனும் கடலில் கழுத்து வரை மூழ்கியிருக்கலாம். துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்து போயிருக்கலாம்; ஆனால், யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ, அவர் சுகத்தின் மீது சவாரி செய்வார் என்று அறிந்து கொள்ளும். நீ என் அருகில் அமைதியாக அமர்ந்திரு. ஆக வேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பாபா பக்தர்களிடம் கூறுவது உண்டு. அதாவது ரகசியமாகவும், மறைமுகமாகவும் பாபா பக்தனுக்கு தேவையானதை செய்துவிடுவார். இருப்பினும் அவரிடம் நம்பிக்கை வைத்தல் மிக அவசியம்.
என் பக்தர்கள் துக்கப்படுவதில்லை. உணவு சமயத்தில் பசியோடு எந்த ஜீவன் வருகிறதோ, மனிதனோ, பறவையோ, மிருகமோ, புழுபூச்சியோ எது வருகிறதோ அதுவே அதிதி. இவை யாவும் உணவை நாடுகின்றன. உன்னிடம் வரும் உண்மையான அதிதியை, நீ அதிதியாகக் கருதுவதில்லை. காக்கைக்கு உணவு அளிக்கும் சமயத்தில், சமைத்த சாதத்தை நிறைந்த அளவில் எடுத்துக்கொண்டு போய் வீட்டுக்கு வெளியே வை. எந்தப் பிராணியையும் கூவி அழைக்காதே. வந்த எந்தப் பிராணியையும் விரட்டாதே. எந்தப் பிராணி உணவுகொள்ள வந்தாலும் அதைப்பற்றி மனதை அலட்டிக் கொள்ளாதே.
இவ்வாறாக இலட்சம் விருந்தினர்களுக்கு உணவளித்த புண்ணியத்தை நீ பெறுகிறாய். 'பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக!' பக்தர்களுக்கு அனுக்கிரஹமும் உபதேசமும் அளிப்பதில் பாபாவினுடைய சாமர்த்தியம் ஆலங்காண முடியாதது. அதை அவர் பல வழிமுறைகளில் செய்தார். அவர்கள் அருகிலிருந்தாலும் சரி, வெகுதூரத்திலிருந்தாலும் சரி, பாபா இதயத்தில் வசிப்பவராக பக்தர்களுடனேயே இருந்தார். 'கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment