Wednesday, 31 October 2018

நாடெங்கும் நவராத்திரி.!!

மேற்கு வங்காளம்:சிவலோகத்தில் இருந்து பார்வதிதேவி, தன் பிறந்த வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சியாக காளிபூஜை கொண்டாடப்படுகிறது. இந்த 
சமயத்தில் பிறந்த வீட்டிற்கு பெண்கள் செல்வது வழக்கம். அவர்களுக்கு பெற்றோரும், சகோதரர்களும் புத்தாடை எடுத்து கொடுத்து உபசரிப்பர். மகள் மீது ஆபரணங்களையும், இனிப்புகளையும் அள்ளி எறிந்து மகிழ்வர். பிறந்த வீட்டிற்கு வர முடியாமல் போனால், பெற்றோர் மகள் வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்குவர். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் நல்லுறவை உண்டாக்கும் பாலமாக இந்த விழா திகழ்கிறது.

கர்நாடகம்: மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் தசரா என்ற பெயரில் நவராத்திரி கொண்டாடப் படுகிறது. மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன், மைசூரு சாமுண்டீஸ்வரியை ஒன்பது நாட்கள், இரவு நேரத்தில் வணங்குவது வழக்கம். விஜயதசமி அன்று போருக்கு புறப்பட்டுச் செல்வர். இதன்மூலம் தேவியருளால் வெற்றி வாகை சூடுவோம் என நம்பினர். இன்றும் மைசூருவில் தசரா உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 'தஸ் ராத்' என்றால் பத்து இரவுகள் என்று பொருள். இச்சொல்லே 'தசரா' என்று வழங்கப்படுகிறது. 

ராமரின் வழிபாடு: நவராத்திரி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவதற்கான காரணத்தை புராணங்கள் சொல்கின்றன. மது, கைடபர், சண்டன், முண்டன், மகிஷாசுரன் போன்ற அரக்கர்களை அழிப்பதற்காக ஒன்பது நாட்கள் விரதமிருந்து, அன்னை பராசக்தியை லலிதா சகஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திரங்களால் தேவர்கள் துதித்தனர். ராவணனை வதம் செய்யக் கிளம்பிய ராமர் வெற்றிக்காக தேவியை ஒன்பது நாட்கள் வழிபாடு செய்தார். இதனால், நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் தேவியின் ஒன்பது வடிவங்களில் மக்கள் வணங்குகின்றனர்.

மகாராஷ்டிரா : மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை நவராத்திரி காலத்தில் வழிபடுவதோடு, அதன் இலைகளைப் பறித்து பூஜையில் வைப்பர். வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர். இளைஞர்கள் வன்னி இலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து ஆசி பெறுவர். பெரியவர்களும் ஆண்டு முழுவதும் செல்வ வளம் வேண்டும் என்ற அடிப்படையில் அந்த இலைகளைக் கொடுத்து 'இதை தங்கமாக நினைத்து பெற்றுக் கொள்ளுங்கள்' என சொல்லி ஆசீர்வதிப்பர்....

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment