வற்றாத உணவினை அளிக்கும் அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் தான் சக்தி தேவி ‘அன்னபூரணி’ என்று போற்றப்படுகிறாள்.
வற்றாத உணவினை அளிக்கும் அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் தான் சக்தி தேவி ‘அன்னபூரணி’ என்று போற்றப்படுகிறாள். காசியில் உருவான கடும்பஞ்சத்தினை போக்கவே அன்னை சக்தி திருமாலிடம் வேண்டி இந்த அட்சயப் பாத்திரத்தை பெற்று எல்லோருக்கும் உணவளித்து வந்தாள்.
திருமாலே ‘அட்சய’ என்று சொல்லி முதலில் உணவிட்டதால் இந்த பாத்திரம் அட்சயப் பாத்திரம் என்றானது. பிரம்மனின் தலையைக் கொய்த சிவபெருமானின் கரத்தில் அந்த கபாலம் ஒட்டிக்கொண்டது.
எங்கெங்கோ சிவபெருமான் பிட்சாடனராக பிச்சை பெற்றபோதும் அந்த கபாலம் அவருடைய கையை விட்டு நீங்கவே இல்லை. இறுதியில் அன்னபூரணி தமது பாத்திரத்தில் இருந்து பிச்சை இட்டதும் அவரது கரத்தில் இருந்து கபாலம் நீங்கியது.
அன்னபூரணியின் அட்சயப் பாத்திரம் அள்ள அள்ளக்குறையாத அருளை வழங்கக்கூடியது. அன்னபூரணியை வணங்கும் பக்தர்கள் இந்த அட்சயப் பாத்திரத்தையும் சேர்த்தே வணங்குகிறார்கள்.
கேட்டதைக் கொடுக்க கூடிய கற்பக விருட்சம் போன்றது அன்னபூரணியின் கரத்தில் இருக்கும் அட்சய பாத்திரம். காசியில் வீற்றிருக்கும் அன்னை அட்சய பாத்திரம் தாங்கியிருக்கிறாள்.
காசிக்குப் போகும் போது, அன்னபூரணியை வழிபடும் போது, மறக்காமல் அந்த அட்சய பாத்திரத்தையும் கண் குளிரப் பார்த்து வழிபடுங்கள். உங்கள் செல்வம் அட்சயமாக வளரும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment