Friday, 28 September 2018

திருமண தடை அகல விசாலாட்சி விநாயகர் தரிசனம்

பொதுவாக ஆற்றாங்கரை, குளக்கரை, மரத்தடிகளில் தான் விநாயகர் காட்சி அளிப்பார். ஆனால் மதுரை அருகே உள்ள திருப்புவனத்தில் வைகை ஆற்று பாலத்தை கடந்து சென்றால் விசாலாட்சி ஜோதிட மந்த்ராலயத்தில் திசை மாறி தெற்கு முக விசாலாட்சி விநாயகர் அருள்பாலித்து வருகிறார்.  இங்கு எல்லா நாட்களிலும் மற்றும் சங்கடஹர சதுர்த்தி அன்றும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்கள் வருகை தருகின்றனர். 


பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 பெரிய தேங்காய் மாலையாக சமர்ப்பித்து 7 லட்டு, 7 எலுமிச்சம் பழம் வைத்து 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள். விசாலாட்சி விநாயகரை வழிபட்டால் முன்னோர் சாபங்கள், தீராத நோய்கள் நீங்கி தொழில் வளம் பெருகி கடன் தொல்லை தீர்ந்து திருமண தடையும் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment