ஆடிப்பெருக்கை நீர்நிலைகளில் தான் கொண்டாட வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயும் வழிபாடு செய்யலாம். எப்படி வழிபாடு செய்வது என்று பார்க்கலாம்.
நீராடி முடித்த பின் வீட்டை சுத்தமாக்குங்கள். பூஜையறையை நன்றாகத் துடைத்து, மாக்கோலம் போடுங்கள். ஒரு பித்தளைச் செம்பில் அரைத்த மஞ்சள் விழுதையோ, அல்லது மஞ்சள் பொடியையோ குறிப்பிட்ட அளவு போடவும். பிறகு, சுத்தமான நீரை செம்பில் விடவும். விரலால் கலக்கவும். இப்போது நீரானது மஞ்சள் நிறத்துக்கு மாறி இருக்கும். கொஞ்சம் உதிரிப்பூக்களையும் இந்த செம்பில் போட்டு விட்டு, பூஜையறையில் வைக்கவும்.
ஒரு பித்தளைத் தட்டில் தாம்பூலம், மஞ்சள், குங்குமம், உடைத்த தேங்காய், பழங்கள் போன்றவற்றை வைக்கவும். என்னென்ன ஸ்லோகங்கள் சொல்லி கடவுளை வழிபடுவீர்களோ, அதுபோல் வணங்கவும். பிறகு, காவிரி உட்பட அனைத்து நதி தேவதைகளையும் மனதாரப் பிரார்த்திக்கவும்.
சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து அதை நிவேதனம் செய்யவும். பிறகு, ஆரத்தி காண்பிக்கவும். பூஜையறையில் இருக்கிற அம்மன் படங்களுக்கு பூக்களைத் தூவி வணங்கவும். அருகில் இருக்கின்ற சுமங்கலிகளை வீட்டுக்கு அழைத்தோ, அல்லது நீங்கள் அவர்களது வீட்டுக்குச் சென்றோ, தாம்பூலமும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமும் தரவும்.
மஞ்சள் கரைக்கப்பட்ட நீரை அனைவரும் வணங்கி விட்டு, வீட்டில் இருக்கிற துளசிச் செடிகளுக்கு விடவும். மரம், செடிகளுக்கும் விடலாம். கிணற்றிலும் சேர்க்கலாம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment