Monday, 2 July 2018

சாய்நாதர் அனைத்தும் தருவார்

ஸ்ரீ சாய்பாபாவின் பாதங்களில் முழுமையாக சரணடைவதன் மூலம் ஒரு பக்தன் ஆன்மீகப் பாதையில் செல்ல முடிவதுடன் அப்பாதையில் செல்வது எளிதாகவும் ஆகிறது. உலகியல் வாழ்வில் உள்ள மனிதன் என்ற நிலையில் உள்ள ஒருவர் ஒரு யோகியாகவோ, சித்தராகவோ என்றோ ஒரேடியாக முன்னேற வேண்டும் என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது. இந்தச் சொற்கள் அவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் உபயோகிப்பது பெரும் முட்டாள்தனமாகும்.  பாபாவிடம் அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை கொள்வது மிகவும் இன்றியமையாததாகும்.

பாபாவிடம் அவர் தோற்றத்தை நமக்கு வெளிப்படுத்திக் காட்ட தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். செயல் புரிபவர்கள் நாம் அல்ல என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். செயலைச் செய்பவர் என்ற உணர்விலிருந்தும் நாம் விடுபடுதல் அவசியமாகும். செயலைச் செய்பவர் என்ற அந்த உணர்வு, நம் அகங்காரத்திலிருந்து பிறக்கிறது. அது மிக மிக மெதுவாகவே குறைகிறது. பாபா விரும்பினால் அவர் நமக்கு சித்தி, முக்தி அல்லது எதை வேண்டுமானாலும் அளிக்கலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment