1969 ஆண்டு ஆவணி மூன்றாம் வெள்ளிக்கிழமை சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவில் கொடைவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேளையில் மாவடியை சார்ந்த தெய்வதிரு.மூக்கன் நாடார்.தெய்வதிரு. தவசிக்கனி நாடார்,தெய்வதிரு. நம்பிவேல் நாடார், ஆகிய மூன்றுபெரும் கொடைவிழாவை காண சென்றனர். கொடைவிழாவை கண்டு மூக்கன் நாடார் தவசிக்கனி நாடார் இருவரும் வியந்தனர்.இக்கொடை விழாவைப்போல் நமது ஊரில் ஆலயம் அமைத்து வழிபட வேண்டும் என்று இருவரும் மனதில் எண்ணம் கொண்டனர் அச்சமயத்தில் சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் சுவாமி மையானம் சென்றார் சுவாமி சென்ற உடன் இம்மூவரும் கொடைவிழா முடிந்தது என்று எண்ணி வீடு திரும்பினர். கொடைவிழாவை கண்டு வீடு திரும்பிய மூவரும் செங்களாகுறிச்சி கரைவரும் வேளையில் ஆண்டவன் ஸ்ரீ ஒத்தப்பனை சுடலை மூக்கன் நாடார் மீது அருள் புரிந்து சுவாமி ஆடி ஊருக்குள் வரும் வேளையில் மாவடி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் வழி மறித்து ஊருக்குள் செல்லக் கூடாது. உனக்கு தற்காலிகமாக எனது ஆலயத்தில் அமர்ந்து இரு உனக்கு தனி ஆலயம் அமைத்து தர நான் வழிவகுக்கிறேன் என்றால் அம்மை பத்திரகாளி.
சில நாட்களுக்கு பின் அம்மனின் கொடைவிழா நடைபெறும் வேளையில் அம்மை பத்திரகாளி மூக்கன் நாடார் மற்றும் தவசிக்கனி நாடார் இருவரிடமும் ஆண்டவர் ஸ்ரீ ஒத்தப்பனை சுடலைக்கு தனி ஆலயம் அமைக்க வேண்டும் என்று அருள்வாக்கு கூறினார் அம்மை பத்திரகாளி. அதன்படியே ஆண்டவன் மாயாண்டி சுடலைக்கு ஆலயம் அமைக்க இடம் பார்க்கும் வேளையில் மூக்கன் நாடார்,தவசிக்கனி நாடார் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர் அந்த நேரத்தில் தெய்வத்திரு ஆறுமுகநாடார் அவர்கள் தானும் அப்பன் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர்க்கு பிடிமண் எடுக்க வருவதாக கூறினார்.
ஆலயம் கட்ட இடம் தேர்வு செய்தபின்பு 1970 ஆண்டு மூவரும் வடக்கு விஜயநாராயணம் அருள்மிகு ஸ்ரீ ஒத்தப்பனை சுடலைமாடசாமி திருக்கோவில் இருந்து பிடிமண் எடுக்க முடிவு செய்தனர்.அம்மூவரும் 41 நாட்கள் ஆண்டவன் சுடலைக்கு விரதம் இருந்து வடக்கு விஜயநாராயணத்திற்கு புறப்பட்டனர்.
புறப்படும் முன்பு மாவடி ஸ்ரீ செல்வ வினாயகரை அடி தொழுது நடை பயணமாக வடக்கு விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவிலை அடைந்தனர். கோவிலில் மதிய பூஜை நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் இம்மூவரும் சுவாமியை தரிசித்து கோயிலில் அமர்ந்தனர். பூஜை முடிந்த பின்பு இம்மூவரும் செல்லாததை கண்டு பூசாரி சந்தேகப்பட்டு வினவினார்.அப்பொழுது இம்மூவரும் தங்கள் மாடு காணவில்லை அதனை தேடி வந்தோம் என கூறினர்.பூசாரி வீட்டுக்கு சென்றவுடன் இம்மூவரும் ஆலயத்திற்குள் சென்று ஆண்டவனை அடிதொழுது அதன் பின்பு ஆறுமுகநாடார் கருவறைக்குள் சென்று பிடிமண் எடுத்து தலை முண்டியில் ஒன்றாகக்கட்டி மூக்கன் நாடார் தலையில் வைத்து சுமந்து இம்மூவரும் ஆண்டவனே உம்மை எங்கள் ஊருக்கு கொண்டு செல்கிறோம்.எங்களுடன் வந்து அருள்புறிவாய் என்று அடிதொழுது ஆலயத்தில் இருந்து புறப்பட்டனர்.
[ ] அவர்கள் குளத்து வழிப்பாதையாக விஜயநாராயணத்தை விட்டு வரும் பாதையில் ஆண்டவனை சுமந்து வரும் மூக்கன் நாடாருக்கு தண்ணீர் தாகம் எடுத்தது உடனே மூக்கன் நாடார் அப்பனே சுடலையாண்டவா உன்னை சுமந்து செல்லும் எனக்கா இந்த சோதனை எனமனம் உருகினார். அள்ளிவரம் தரும் அப்பன் மாயாண்டி சுடலை உடனே தன்னை சுமந்துவரும் மூக்கன் நாடாருக்கு மழையாக அருள்புறிந்து தண்ணீர் தாகத்தை தனித்தார். விஜயநாராயணத்தை கடந்து சாலை வழிப்பாதையாக பரப்பாடி ஊரு கடந்து ஏமன்குளம் வந்து தெற்கு முகமாக திரும்பி பட்டர்புரம் பாதையாக வாகைகுளம் அருகேயுள்ள ஸ்ரீ பெரும்புடையார் சாஸ்தாவை அடிதொழுது அதன்பின் மேல் பக்கத்தில் உள்ள காட்டு வழிப்பாதையாக ஏர்வாடி ( ஆலங்குளம் ) த்தை கடந்து கோதைச்சேரி வழியாக வடுகச்சிமதில் பாதையாக செங்களாகுறிச்சி குளக்கரை வந்து மேற்கு முகமாக திரும்பி சாலை வழிப்பாதையாக மாவடி ஊரை வந்து அடைந்து ஸ்ரீ செல்ல வினாயகரை அடிதொழுது தெற்குமுகமாக சாலைவழியே தெற்கு மாவடி சிங்கமுக நரசிம்மரை அடிதொழுது மேற்கு முகமாக திரும்பி மையானக்கரை வழியே வந்து தேன்பொத்தை மலையடி வாரத்தில் ஒத்தப்பனை அடிவாரத்தில் மாவடி தேன்பொத்தை அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் நிலையம் பெற்று தன்னை நம்பி வரும் மக்களுக்கு நல்வரம் தரும் சுடலையாக அருள்புறிந்து வருகிறார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment