கையில் காப்பு கயிறு கட்டுவதால் அதன் பயன்கள்
கோவில்களில் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு காப்பு கயிறு கட்டுகிறார்கள்.மஞ்சள்,சிவப்பு நிற மந்திரிக்கப்பட்ட கயிறுகள் நம்மை தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரு கலசமாக செயல்படுகிறது.
பட்டு நூலினால் ஆன காப்பு கயிறு அணிவதால் பலன் உண்டாகும்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அணிய வேண்டும்.!
பட்டு,தர்ப்பை,அருகம்புல் போன்றவை மந்திரங்களின் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை.
காப்பு கயிறும் மந்திரத்தை ஈர்க்கும்.
நாம் அணியும் காப்பு கயிறு மந்திர ஆற்றலை சேமித்து நம்மை காக்கும்.
காசி கயிற்றில்…
முருகன்,பிள்ளையார்,சிவன், கிருஷ்ணன், அம்மன் போன்ற தெய்வங்களின் டாலர்களை கோர்த்து கழுத்தில் அணிவதும் ஒரு வகையில் காப்பதே.
ஆண்கள் வலது கைகளிலும்,
பெண்கள் இடது கைகளிலும் காப்பு கயிறைக் கட்டி கொள்ள வேண்டும்.
மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டுவதாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது.
எண்ணங்களும்,மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.
சிவப்பு நிறத்தில் கயிறு அணிவது நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
கருப்பு நிறக்கயிறைக் கட்டுவதால் தீயவற்றின் பார்வையிலிருந்து விடுபடலாம்.
இதை குழந்தைகள் இடுப்பில் கட்ட கண் திருஷ்டி விலகும்.
ஆரஞ்சு அல்லது காவி நிறக்கயிறு மணிக்கட்டில் கட்டுவதால் புகழ் ,அதிகாரம் சேரும்…!!!
அதுபோல நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன. ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சு பகுதி நம்முடைய மணிக்கட்டு ஆகும்.
இந்த இடத்தில்தான் இதயத்தின் இயக்க தன்மையை அறிந்துகொள்வதற்க்காக நாடி பிடித்து பார்ப்பார்கள்.
நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகின்றது.
நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது.
எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.
கையில் காப்புக்கயிறு கட்ட வேண்டியதன் அவசியத்தை நம்மில் பலர் உணர்வதேயில்லை. ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிய வேண்டும்.
நமது முன்னோர்கள் இந்து கலாச்சாரத்தையும், அதன் பாரம்பரியத்தையும் மிகவும் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்கள்…
அவற்றைப் பின்பற்றுவது இன்றைய இளைய தலைமுறை கடமையாகும்…!!!
ஒவ்வொரு இந்துக்களும் கையில் கட்டாயம் காப்புக்கயிறு கட்டவேண்டும்.
அதன் மூலம் நம் இந்துமதத்தின் அறிவியலை உலகத்துக்கு எடுத்துச்சொல்வோம்…
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment