Wednesday, 17 June 2020

தெய்வத்தின் குரலில் இருந்து ஒரு பகுதி.!!

ஏன் அம்பாளுடைய ஸ்வரூபத்தை எவரும் பார்த்ததில்லை? அடியோடு பார்த்ததில்லை என்று சொல்ல முடியாது. தர்சனம் என்று பல பக்த கவிகள் பண்ணித் தான் இருக்கிறார்கள். ஆனாலும் ஸம்பூர்த்தியாக எவரும் தன்னைப் பார்க்க விடாமல் ஏதோ கொஞ்சம் – க்ஷண காலம் – மின்னல் மின்னுகிற மாதிரி தர்சனம் கொடுத்து விட்டு மறைந்து போய் விடுவாள். ஒரே பக்தியாக அவளிடமே மனஸை அர்ப்பணித்தவர்களுக்குங்கூட அவளுடைய சரணாரவிந்தம், கடாக்ஷத்தைப் பொழியும் நேத்ரம், மந்தஸ்மிதம் செய்யும் ஆஸ்யம் [திரு வாய்] என்றிப்படி ஏதாவது ஒரு அவயவந்தான் ஸதாவும் கண்களில் கட்டி நிற்குமே தவிர கேசாதி பாதம் முழு ரூபமும் இல்லை.

தன்னுடைய முழு ரூப ஸெளந்தர்யத்தையும் அவள் காட்டுவது ஒருத்தரிடந்தான். அந்த ஒருத்தர் யாரென்றால் பதியான பரமேச்வரன்தான். அவரை தன்னோடு சேரும்படிப் பண்ணி லோக லீலையில் ஈடுபடுத்தவேண்டும் என்பதற்காகத்தான் அவள் இந்தப் பரம ஸுந்தரமான சரீரத்தை எடுத்துக்கொண்டு த்ரிபுர ஸுந்தரியானது. அந்த சரீரத்தை அவரொருத்தருக்கே பூராவாக அர்ப்பணம் பண்ணிய மஹா பதிவ்ரதையா யிருப்பவளவள். மற்றவர்களுக்கு ஏதோ கொஞ்சம் தரிசனம் கொடுப்பாளே தவிர பூராவாகத் தன் ஸெளந்தர்யத்தைக் காட்டமாட்டாள். கருணையை பக்தர்களுக்குப் பூர்ணமாகக் காட்டுவாள். ஆனால் ஸெளந்தர்யம் பூரா என்னும்போது அது ஸ்வாமிக்குத்தான் ஸொத்து என்று வைத்திருக்கிறாள்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment