Saturday, 13 June 2020

நினைத்த காரியம் நடக்க தொடர் விளக்கு ஏற்றும் வழிபாடு.!!

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் துன்பங்கள் அகலவும், தோஷங்கள் நீங்கவும், நேர்மையான வேண்டுதல்கள் அனுகூலமாகவும் விளக்கு ஏற்றும் முறை ஒன்று உள்ளது. அதற்கு ‘தொடர் விளக்கு ஏற்றுதல்’ என்று பெயர். காஞ்சி பீடாதிபதி பரமாச்சாரியாரால் அருளப்பட்டது இந்த தொடர் விளக்கு ஏற்றும் முறை.

ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் இருந்து, ஒரு விளக்கை ஏற்றி இந்த வழிபாட்டைத் தொடங்க வேண்டும். வாரம் ஒன்றாகக் கூட்டிக்கொண்டே போய், பதினாறாவது வெள்ளிக்கிழமை அன்று பதினாறு விளக்குகள் ஏற்றி முடிக்க வேண்டும். இறுதி வெள்ளிக்கிழமை அன்று ஒரு சுமங்கலி பெண்ணுக்கு வஸ்திர தானம் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது அவரது வாக்கு. மங்கலகரமான, பலவித சிறப்புகளை கொண்ட விளக்குகளை ஆலயங்களிலும், வீடுகளிலும் ஏற்றும்போது, ‘ஸூவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரி ஸூதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரி கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரி’ என்ற ஸ்லோகத்தைச் சொல்லி விளக்கை ஏற்றுவது நன்மை பயக்கும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment