Friday, 5 June 2020

சிவ பெருமானுக்கு பிடித்த எட்டு வகையான மலர்கள்.!!

ஏதோ எட்டு மலர்கள் என்றால் அரளி ,மல்லி, ரோஜா, சம்பங்கி போன்ற மலர்கள் என நினைக்க
வேண்டாம்.

‘எட்டு நாண்மலர் கொண்டு அவன் சேவடி
மட்டலர் இடுவார் வினை மாயும்’
என்கிறார் அப்பரடிகள்.
இந்த எட்டு மலர்களை இட்டு வணங்க ‘வினைகள் அழியும்’
என்கிறார் திருநாவுக்கரசர்.

சிவனை வணங்கும் பூசை இரு வகைப்படும். ஒன்று: அகப்பூசை இரண்டு: புறப்பூசை.
மேற்படி திருநாவுக்கரசர் கூறிய எட்டு மலர்களை மனதில் கொண்டு இறைவனை எழுந்தருளச் செய்து ஆற்றும் பூசை அகப்பூசை என்று சொல்லப்படும். அந்த எட்டு மலர்களை கொள்ளாமல் ஈசனுக்கு செய்யும் பூசை புறப்பூசை எனப்படும். அது என்ன எட்டு மலர்கள்.
அந்த எட்டு மலர்கள் என்பது மனம் என்ற செடியில் வளர வேண்டிய மலர்களாகும்.அது
கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

1 அகிம்சை(கொல்லாமை)
2 ஐம்பொறிகளை அடக்குதல்
3 அமைதி
4 அருளுடைமை
5ஞானம்
6 தவம்
7 வாய்மை
8 பாவனை( நல்ல நடத்தை)
ஆகியவைதான் எட்டு மலர்கள்.

இந்த அரிய பண்புகளை மனதில் இருத்திக் கொண்டாலே மனம் தூய்மையாகும். இம் மாதிரி தூய்மையான மனதுடன்
எல்லாம் வல்ல ஈசனைவணங்கி னாலே போதும் அவன் உங்களை ஆட்கொண்டு விடுவான். ஆகவே அன்பர்களே இறைவன் ஈசனுக்கு நீங்க கஷ்டப்பட்டு செலவு செய்து மல்லிகை சாமந்தி ரோஜா போன்ற புற மலர்களைக் கொண்டு புறப்பூசை செய்யாமல் அப்பரடிகளும் திருநாவுக்கரசரும் கூறியபடி அக மலர்களான எட்டு மலர்களை கொண்டு சிவனுக்கு அகப்பூசை செய்து அவன்தாள் வணங்கி எல்லாம்வல்ல அய்யன் ஈசனின் அருளினைப் பெறுவீராக.

ஓம்நமசிவாய_சிவாயநம!

ஏ மட மனமே..!
செயலற்றுப் பிணம்
போன்று கிடக்கிற நெஞ்சே..

உனக்கு ஆனந்தக் கூத்தனது திருவடியில் அன்பு இருக்கிறதா என்றால் இல்லை. சிவபெருமான் சிதம்பரத்தில் நடனம் ஆடுகிறார். அவர் மீதான அன்பு மேலீட்டால் அவருடைய ஆட்டத்தைப் பார்த்து அன்பு கொண்டு நீயும் ஆடவில்லை.

எலும்பு உருகப் பாடுவதுமில்லை.

உணர்ச்சியின் வேகத்தால்
பதைபதைப்பு அடைவதில்லை. வணங்குவதில்லை.

பாத கமலத்தைத்
தலையில் தரிப்பதில்லை.

மலர் தூவிப் பாதங்களை அலங்கரிப்பதில்லை.

கடவுள் நாட்டம் கொள்வதில்லை.
கடவுளைப் போற்றி பாடிக்கொண்டு வீதிவீதியாய் போவதில்லை.

ஐயோ நாம் இப்படி இருக்கிறோமே
என்ற பதட்டம் சிறு துளியும் இல்லை..

ஏ கேடுகெட்ட மட மனமே..!
இறைவனது துணையை தேடாத
உன்னை வைத்துக்கொண்டு நான்
என்ன செய்வதென்று எனக்கு விளங்கவில்லை.

எம்பெருமானே.!
மகேஸ்வரா.. !
தில்லைவன நடராஜா..!
நீயாவது ஒரு நல்வழியை
இந்த மட மனதிற்கு எடுத்து சொல்லேன்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment