உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
(உருவத்துடனும், உருவமில்லா அருவத்துடன், இருக்கின்ற நிலையிலும், இல்லாத நிலையிலும், மணமுள்ளதாகவும், மலராகவும், மணியாகவும், ஒளியாகவும், உயிர் உருவாகும் கருவாகவும், அதன் உயிராகவும், நற்கதியாகவும், விதி என்னும் நற்கதியை அடையும் நல்விதியாகவும், நீ எனக்குக் குருவாக வருவாய்! வந்து அருள்புரிவாய்! குகனே!)
உருவாய் … ஆறுமுகமும் பன்னிருதோளும் கொண்ட
சகள வடிவாயும்,
அருவாய் … குணம், குறி, நாமம் அற்ற அகளமாயும்,
உளது ஆய் … உண்டு என்பவருக்கு உள் பொருளாகவும்,
இலது ஆய் … இல்லை என்பாருக்கு இல் பொருளாகவும்,
மலராய் … மலராகவும்,
மருவாய் … அம் மலரின் மணமாகவும்,
மணியாய் … மாணிக்கமாகவும்,
ஒளியாய் … அதன் ஒளியாயும்,
கருவாய் … சகல உயிர்களையும் பிரளய காலத்தில் தன் மேனியில்
வைத்து காப்பவனும்,
உயிராய் … சிருஷ்டிக்கும் போது சகல ஜீவன்களுக்கும் உயிருக்கு
உயிராகவும் ஆன்மாவாகவும் திகழ்பவனும்,
விதியாய் … அந்த உயிர்களின் வினைப் பயனாகவும்,
கதியாய் … முத்தி நிலையில் அந்த உயிர்கள் சென்றடையும்
நிலையாகவும்,
குகனே … உள்ள முருகக் கடவுளே
குருவாய் வருவாய் அருள்வாய் …
என் குருவாக வந்து எனக்கு
அருளி என்னை ஆட்கொண்டவன்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment